என் மலர்
நீங்கள் தேடியது "சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயில்"
- வேளாங்கண்ணி செல்ல வாராந்திர சிறப்பு ரயில் தேவையை வலியுறுத்தினார்.
- கொரோனா காலத்திற்கு முன் இருந்தது போன்று ரெயில் நிறுத்தங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட மேலாளர் சர்மா நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தில் ஆய்வுக்காக வருகை தந்த போது அவருடன் விஜய்வசந்த் எம்.பி.யும் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கன்னியாகுமரி மக்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்.
வேளாங்கண்ணி செல்ல வாராந்திர சிறப்பு ரயில் தேவையை வலியுறுத்தினார். ஐதராபாத் சென்னை சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பது, திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பது போன்ற ரெயில் நீட்டிப்பிற்கான கோரிக்கைகளை முன் வைத்தார்.
கொரோனா காலத்திற்கு முன் இருந்தது போன்று ரெயில் நிறுத்தங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராணுவ வீரர்கள் அதிகமாக பயணம் செய்யும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் தற்போது நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் மட்டுமே நின்று செல்வதால் கூடுதலாக ஒரு நிறுத்தம் தேவை என்றும் கேட்டு கொண்டார். நாகரகோவில் சந்திப்பு மற்றும் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் இந்த ரயில் நிலையங்களை நவீன மயமாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் விஜய்வசந்த் எம்.பி. கேட்டுக்கொண்டார்.