search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீபெரும்புதூர்"

    • அவசர சிகிச்சை மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
    • மாணவர்கள் மற்றும் நோயாளிகள் கடும் அவதி.

    சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை உள்ளிட் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தண்டலம் அருகே உள்ள தனியார் மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    மருத்துவமனையை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் அவசர சிகிச்சை மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

    • 175 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • போலீசார் கோர்ட்டில்ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளுர் தண்டு மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள வீட்டில், டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி அதிக விலைக்கு விற்று வருவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் கீவளூர் பகுதியில் உள்ள பூசனம் என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் ஏராளமான மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

    வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு அவர் தொடர்ந்து விற்று வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பூசனத்தை கைது செய்தனர். அவரிடம் இருந்து மொத்தம 175 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் கைதான பூசனத்தை போலீசார் கோர்ட்டில்ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மதுபாட்டி ல்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
    • பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களின் முடிவுகளில் நோட்டா எந்த பாதிப்பையும் பெரிதாக ஏற்படுத்தவில்லை.

    சென்னை:

    தன்னுடைய தொகுதியில் போட்டியிடும் எந்த வேட்பாளரையும் வாக்காளர் ஒருவருக்கு பிடிக்கவில்லை. அதேசமயம் தான் வாக்களிப்பதில் இருந்து தவறவும் விரும்பவில்லை. தனது வாக்கை இன்னொருவர் தவறாக பயன்படுத்துவதை அனுமதிக்கவும் விருப்பமில்லை என்று சிந்திக்கும் வாக்காளர்களுக்கும் ஜனநாயக முறைப்படி வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு என உருவாக்கப்பட்ட முறைதான் 'நோட்டா'. அதாவது 'மேலே உள்ள எவரும் அல்ல' என்பது பொருளாகும்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 4 லட்சத்து 67 ஆயிரத்து 68 ஓட்டுகளை 'நோட்டா' பெற்றுள்ளது. இது 1.07 சதவீதமாகும். இதில் அதிகபட்சமாக ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் 26 ஆயிரத்து 450 வாக்குகளை 'நோட்டா' பெற்றுள்ளது. அதேபோல் குறைந்த பட்சமாக, கன்னியாகுமரி தொகுதியில் 3 ஆயிரத்து 756 வாக்குகளை 'நோட்டா' பெற்றுள்ளது.

    இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கூறும் போது, 'நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும் அனைத்து தொகுதிகளிலும் 'நோட்டா' ஆதிக்கம் செலுத்தி உள்ளது. இதுவரை, பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களின் முடிவுகளில் நோட்டா எந்த பாதிப்பையும் பெரிதாக ஏற்படுத்தவில்லை' என்று தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கூறினர்.

    • கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • கும்பாபிஷேகதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செல்லபெருமாள் நகரில் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ செல்வ முத்துக்குமார கோவில் திருப்பணி முடிந்து இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று கணபதி யாகம், கோ பூஜை, லஷ்மி ஹோமம், நவகரக ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.

    இன்று காலை யாகசாலை பூஜைகள், விக்னேஷ்வர பூஜை, பிரம்மசுத்தி உள்ளிட்ட பூஜைகள் செய்யப்ட்டது. பின்னர் கைலாய இசை வாசிக்கப்பட்டு கோவில் கோபுரத்தில் அமைக்கப்பட்ட கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

     ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு அரோகரா, அரோகரா என கோஷம் எழுப்பி சாமியை வணங்கினர். கும்பாபிஷேகதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • கால சர்ப்ப தோஷம் என்பது ராகு, கேது ஆகிய இரு கிரகங்களினாலுமே ஏற்படும்.
    • ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீராமானுஜர் தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும்.

    கால சர்ப்ப தோஷம் மற்ற தோஷங்களைப் போலவே ஜாதகத்தின் லக்கினம், பூர்வ புண்ணியம்

    ஜெனன காலத்தின் மற்றைய கிரக நிலைகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே, தீய பலன்களை விளைவிக்கும்.

    ஆதலால், கால சர்ப்ப தோஷம் உள்பட அனைத்து தோஷங்களையும், அவற்றின் தன்மை, அளவு, ஏற்படும் காலம்

    இவற்றைத் தக்க ஜோதிடரைக் கொண்டு ஆராய்ந்து, அறிந்து கொள்ளாமல் கலங்க வேண்டிய அவசியமில்லை.

    பாதிப்பின் கடுமையைத் தக்க பரிகாரத்தினால் குறைக்க முடியும்.

    ஆயினும் அந்தப் பரிகாரத்தை, சாந்தியை அதிகப் பொருட் செலவில் தான் செய்ய வேண்டும் என்பதில்லை.

    சாதாரணமாக, சர்ப்ப தோஷம், நாகதோஷம் என ஜோதிடக்கலை குறிப்பிடுவதெல்லாம்,

    ராகு அல்லது கேது ஆகிய இரு கிரகங்களில் ஒன்றினால் மட்டுமே ஏற்படுவதாகும்.

    ஆனால் கால சர்ப்ப தோஷம் என்பது ராகு, கேது ஆகிய இரு கிரகங்களினாலுமே ஏற்படும்.

    இதற்கு மிகவும் நல்ல பலனும், பரிகாரமும் அளிக்கக்கூடிய சக்தி வாய்ந்த திருத்தலங்களில்,

    சென்னையை அடுத்துள்ளதும் வைணவத்தின் அவதார மகாபுருஷரான ஸ்ரீராமானுஜர் அவதரித்த

    புண்ணிய பூமியுமான ஸ்ரீபெரும்புதூர் பரிகார சேஷ்த்திரங்களில் ஒன்றாகும்.

    சர்ப்பங்களில் முதன்மை ஆனவரும் ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஆசனமானவரும், ஐந்து தலைகளினால்

    பிரகாசிப்பவருமான ஆதிசேஷனே, திரேதா யுகத்தில் லட்சுமணனாகவும், துபாவர யுகத்தில் பலராமராகவும்

    கலியுகத்தில் ஸ்ரீராமானுஜராகவும் அவதரித்ததாக விஷ்ணுபுராணம் கூறுகிறது.

    "ஆனந்த ப்ரதம்ம ரூபம் திரேதாயோம் பலபத்ரச்ச கலியுகே கசதி பவிஷ்யதி" - ஸ்ரீவிஷ்ணுபுராண ஸ்லோகம்.

    ஸ்ரீஆதிசேஷனே, ஸ்ரீராமனுஜராக அவதரித்தது உலகறிந்த உண்மையாகும்.

    ஆகவே, ராகு, கேதுவினால் உண்டாகும் கால சர்ப்ப தோஷம் மற்றும் இதர நாக சர்ப்ப தோஷங்களுக்கும்

    ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீராமானுஜர் தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும்.

    கோவிலுக்குப் பின்புறம் உள்ள குளம், ஸ்ரீமந் நாராயணனின் ஆக்ஞையினால், ஆதிசேஷன் உருவாக்கியதால்

    அனந்தசரஸ் எனப் பெயரும் புகழும் பெற்றதாகும். (ஆதிசேஷனுக்கு அனந்த சர்ப்ப என்ற பெயர் உண்டு).

    இந்தத் திருக்குளத்தில் நீராடி, ஸ்ரீராமானுஜரையும், ஸ்ரீ ஆதிகேசவன், யதிராஜநாதவல்லித் தாயாரையும் தரிசிப்பது, கால சர்ப்ப தோஷத்திற்கு மிகச் சிறந்த பரிகாரமாகும்.

    ×