என் மலர்
நீங்கள் தேடியது "குஷ்பூ"
- மன்சூர் அலிகான் விவகாரம் குறித்து எக்ஸ் தளத்தில் எழுப்பிய கேள்விக்கு நடிகை குஷ்பு பதில் அளித்தார்.
- அதில், சேரி மொழி என்று குஷ்பூ பயன்படுத்திய வார்த்தை சமூக வலைதளங்களில் சர்ச்சையானது.
சென்னை:
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் மன்சூர் அலிகான் பேசியிருந்தார். இந்தப் பேச்சுக்கு திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.
மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் சார்பில் குஷ்பூ கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கிடையே, மணிப்பூர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என தி.மு.க. ஆதரவாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, சேரி மொழியில் தன்னால் பேசமுடியாது என்று குஷ்பு பதிலளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நடிகை குஷ்பூவுக்கு சமூக வலைதளத்தில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சேரி மொழி என்று பயன்படுத்திய வார்த்தை சர்ச்சையான நிலையில், பாஜக நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பூ விளக்கம் அளித்துள்ளார்.
அதில், பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக நான் எப்போதும் முன்னணியில் நிற்பேன். பிரெஞ்சு மொழியில் சேரி என்ற சொல்லுக்கு அன்பு என்பதே பொருள். அன்பு என்ற அர்த்தத்திலேயே சேரி என்ற சொல்லைப் பயன்படுத்தினேன் என விளக்கம் அளித்துள்ளார்.
- இன்று தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால், பிச்சைப் போட்டால் தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்களா?
- பல்வேறு அரசியல் தலைவர்களும் குஷ்புவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை செங்குன்றத்தில் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து கடந்த 11 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கலந்து கொண்டார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய குஷ்பு, "தமிழகத்தில் எவ்வளவு போதைப் பொருள்கள் வந்துள்ளது. இந்த போதைப் பொருள்கள் ஒவ்வொரு இடத்திற்கும் செல்ல உள்ளது. இது குறித்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் டெல்லியில் உள்ள அதிகாரிகள் சொல்லியுள்ளனர். இதற்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்ல போகிறார். இன்று தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால், பிச்சைப் போட்டால் தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்களா?" என காட்டமாக பேசினார்.
மகளிர் உரிமைத் திட்டம் குறித்து குஷ்புவின் சர்ச்சைக்குரிய பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் தலைவர்களும் குஷ்புவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக, நடிகை அம்பிகா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
"யாராக இருந்தாலும் சரி, எந்த கட்சியாக இருந்தாலும் சரி, அவர்கள் உதவி செய்தாலோ அல்லது மக்களுக்கு ஆதரவாக இருந்தாலோ அதனை ஏற்றுக்கொண்டு பாராட்டுங்கள். பாராட்ட மனமில்லை என்றால் அமைதியாக இருங்கள். 'பிச்சை' என அவமானப்படுத்தும் சொற்களை பயன்படுத்தாதீர்கள். 5 ரூபாய் கொடுத்தாலும் அது உதவிதான்" என பதிவிட்டுள்ளார்.
- பாஜக நிர்வாகி குஷ்பூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
- சீமான் பற்றி பேசவிரும்பவில்லை, அவரை முதல்வரை பார்த்து கேள்வி கேட்க சொல்லுங்கள்.
சென்னை தி.நகரில் பாஜக நிர்வாகி குஷ்பூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் பெண்களுக்கு பாலியல் தொல்லை நடக்கும்போது, கட்சியைத்தான் பெரிது படுத்துகிறீர்கள்.
ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை நடக்கும்போது எந்த கட்சியினரும் பேசலாம். நாங்கள் இருப்பது பாஜக அலுவலகம். ஆனால் நாங்கள் பாஜக சார்பாக பேச கிடையாது. எங்கள் பின்னால் பாஜக இருக்கிறது. அது வேற விஷயம். தயவுசெய்து அரசியல் ஆக்காதீர்கள். நீங்கள் ஆளும் மாநிலங்களில் இது நடக்கலையா என்று கேள்வி கேட்காதீர்கள். பெண்கள் அரசியல் ஃபுட்பால் கிடையாது. இங்கேயும் அங்கேயும் தூக்கி வீசுவதற்கு.
இந்த மாணவிக்கு நடந்த பிரச்சனை இத்துடன் முடிய வேண்டும் என்பது எங்களது நோக்கம். மீண்டும் இதுபோன்ற பிரச்சை தொடரக்கூடாது.
25 லட்சம் கொடுத்துவிட்டோம், கல்வி கட்டணத்தை கொடுத்துவிட்டோம் என்று சொல்வதால் பெண்ணுக்கு ஏற்பட்ட அநியாயம் சரியாகிவிடுமா ?
பாதிக்கப்பட்ட பெண்ணை நான் நிச்சயம் பாராட்டுகிறேன். தைரியமாக வெளியே சொன்னார். நிறைய பெண்கள் வெளியே சொல்ல மாட்டேங்குறார்கள். என்னமாதிரி வேறு பெண்கள் பாதிக்கப்படக்கூடாது என நினைத்த அந்த பெண்ணை பாராட்ட வேண்டும். அந்த பெண் பற்றிய தகவல்களை வெளியே யார் கொடுத்தது? அவர்களை முதலில் தண்டிக்க வேண்டும்.
சட்டரீதியாக தவறுதான். ஏன் அதுப்பற்றி பேச்சுக்கிடையாது. எந்த மாநிலமாக இருந்தாலும் பெண்களுக்கு எதிராக வன்முறை நடந்தால் கேள்வி கேட்போம். அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு பாஜக மகளிரணி நாளை பேரணி நடத்துகிறது. நான் மகளிர் ஆணையத்தில் இருந்திருக்கிறேன். ரொம்ப மோஷமாக புகார்கள் வரும்.
மற்ற மாநிலங்களை கம்பேர் பண்ணாதீங்க. என் வீட்டில் பிரச்சினை நடக்கும்போது மற்ற வீட்டில் நடக்குதா இல்லையா என பேசக்கூடாது. கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு மற்றவர்கள் வீட்டில் கல் வீசக்கூடாது. சௌமியாவை ஏன் கைது செய்தீர்கள். கனிமொழி எங்கே? எல்லாத்துக்கும் முன் வந்து பேசுவாங்களே! திமுக மகளிர் அணி எங்கே? கைதுக்கு நாங்கள் பயப்படவில்லை. திமுக சார்பாக எந்த பெண் குரல் கொடுத்தார்கள். அமைச்சர், எம்.பி யாராவது குரல் கொடுத்தார்கள்?
சீமான் பற்றி பேசவிரும்பவில்லை. அவரை முதல்வரை பார்த்து கேள்வி கேட்க சொல்லுங்கள்.
மாநில மகளிர் ஆணையம் எங்கே போனது? எங்கேவாவது பேசுனாங்களா? அரசு சொல்வதைதான் அவர்கள் செய்வார்கள். யார் அந்த சார்? அதைத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.