என் மலர்
நீங்கள் தேடியது "உத்தரகாசி சுரங்க விபத்து"
- மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி, உத்தரகாசி வந்துள்ளார்.
- புஷ்கர் சிங் தாமியிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி மீட்பு பணிகள் குறித்த விவரத்தை கேட்டறிந்தார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதைக்குள் சிக்கிய 41 தொழிலாளர்களையும் மீட்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி, உத்தரகாசி வந்துள்ளார். அவரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி மீட்பு பணிகள் குறித்த விவரத்தை கேட்டறிந்தார்.
போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகள் பற்றியும், அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றியும் பிரதமர் மோடியிடம் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி எடுத்துக் கூறினார்.