search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெலனின் உற்பத்தி அதிகம்"

    • தொடை இடுக்குகளில் சருமத்தின் நிறம் கருமையாக காணப்படும்.
    • உடல் பருமன் பிரச்சினை உள்ளவர்களுக்கு பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.

    தொடைகளின் உள்பகுதி மற்றும் தொடை இடுக்குகளில் சருமத்தின் நிறம் கருமையாக காணப்படுவது சந்திக்கும் பிரச்சினையாகும். நடக்கும்போது இரண்டு தொடைகளும் உராய்வது ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக அதிகப்படியாக மெலனின் உற்பத்தி ஆவது என இதற்கு பல காரணங்கள் உள்ளன.

    உடல் பருமன் பிரச்சினை கொண்டவர்களுக்கு இத்தகைய பாதிப்புகள் அதிகமாக இருக்கும். இதை போக்குவதற்கு ஏராளமான அழகு பராமரிப்பு பொருட்கள் விற்கப்படுகின்றன. இருந்தாலும் இயற்கையான பொருட்களை பயன்படுத்துவது மட்டுமே பாதுகாப்பானது. உங்கள் சமையல் அறையில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே, தொடைப்பகுதியில் இருக்கும் கருமையை நீக்க முடியும். அதற்கான குறிப்புகள் இங்கே...

    தொடைப் பகுதியில் மட்டுமின்றி. உடலின் மற்ற இடங்களில் படிந்துள்ள கருமையையும் போக்கும் ஆற்றல் எலுமிச்சை சாறுக்கு உண்டு. இதில் உள்ள வைட்டமின் சி சத்து, கருமை நிறத்தை மறையச் செய்வதோடு. சேதமடைந்த சரும செல்களையும் சீர்படுத்தும்.

    அரை முடி எலுமிச்சம் பழச்சாறு, 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் இரண்டையும் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை சருமத்தில் கருமை இடங்களில் பூசவும். 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து அந்த இடத்தை மென்மையாக மசாஜ் செய்யவும். பின்னர் மிருதுவாக தேய்த்து சுத்தம் செய்யவும்.

    பேக்கிங் சோடாவில் இயற்கையாகவே பாக்டீரியாவை அழிக்கும் சக்தி உள்ளது. இது சருமத்தின் கடினத் தன்மையை போக்கி மிருதுவாக்கும். சொரசொரப்பான மேற்புற தோலை நீக்கி மென்மையாக்கும். பேக்கிங் சோடாவை சம அளவு தண்ணீருடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவை மென்மையான கிரீம் பதத்துக்கு வந்ததும், அதை சருமத்தில் கருமை உள்ள இடங்களில் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி சுத்தம் செய்யவும்.

    ஆப்பிள் சிடார் வினிகருடன் பேக்கிங் சோடாவை கலந்து பயன்படுத்தினாலும் சருமத்தில் உள்ள கருமை மறையும். 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரை டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் கலந்து பசை போல தயாரிக்கவும். இதை தொடையின் உள்புரம் கருமை உள்ள பகுதியில் பூசவும். நன்றாக உலர்ந்த பிறகு குளிர்ந்த நீரில் சுத்தம் செய்யவும். இது கருமை நிறத்தை போக்கி

    சருமத்தின் இயற்கையான பொலிவை மீட்டுத் தரும்.

    உருளைக்கிழங்கில், நுண்ணுயிர் எதிர்ப்பு திறன்கள் உள்ளன. இதில் நிறைந்துள்ள

    வைட்டமின் சி, இறந்த சரும செல்களை எளிதாக நீக்கும். மேலும் உருளைக் கிழங்கில் இருக்கும் 'கேடகோலேஸ்' என்ற நொதி சருமத்தின் அடர் கருமை நிறத்தை எளிதில் நீக்கி அது மீண்டும் உருவாகாமல் தடுக்கும்.

    உருளைக் கிழங்கில் இருந்து சாறு எடுத்து சருமத்தின் மீது பூசலாம். இல்லாவிடில் உருளைக்கிழங்கை வட்டமாக வெட்டி அதை சருமத்தின் மீது நேரடியாக

    தேய்க்கலாம். இவ்வாறு தினமும் தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் சருமத்தில் படிந்துள்ள கருமை நீங்குவதை காணலாம்.

    சொரசொரப்பாக இருக்கும் தோலை மிருதுவாக மாற்ற மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும். தேங்காய் எண்ணெய், கற்றாழை ஜெல் ஆகியவை சருமத்தை மென்மையாக்கும் தன்மை கொண்டவையாகும்.

    ×