search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முயற்சிகளை அங்கீகரித்ததற்காக இந்திய தொழில் கூட்டமைப்புக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
    • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மாநிலத்தில் விளையாட்டு வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றுகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் 2023-ம் ஆண்டுக்கான விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், 'இந்த அங்கீகாரம், தமிழகத்தில் விளையாட்டு சாம்பியன்களை உருவாக்கி வளர்ப்பதற்கு நமது திராவிட மாடல் அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஒரு சான்றாகும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முயற்சிகளை அங்கீகரித்ததற்காக இந்திய தொழில் கூட்டமைப்புக்கு நன்றி தெரிவிக்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.

    ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்திய தொழில் கூட்டமைப்பின் தொழில் மற்றும் விளையாட்டு துறை சார்ந்த ஸ்கோர் கார்ட் கருத்தரங்கத்தின் 8-வது பதிப்பு டெல்லியில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம் என்ற விருது வழங்கப்பட உள்ளது.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மாநிலத்தில் விளையாட்டு வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றுகிறது. குறிப்பாக முக்கிய விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவதிலும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், விளையாட்டு வீரர்களின் நலன் காப்பதிலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பார்முலா 4 கார்பந்தயம் நடத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
    • டிக்கெட்டுகள் பெற விரும்புவோர் பேடிஎம் இன்சைடரில் பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ரேசிங் புரோமோ பிரைவேட் லிமிடட் ஆகியவை இணைந்து நடத்தும் ரேசிங் சர்க்யூட் பார்முலா-4 கார் பந்தயம் சென்னையில் வருகிற டிசம்பர் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெறுகிறது.

    சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கிலோ மீட்டர் சுற்றளவில் இரவு போட்டியாக நடத்தப் பட உள்ளது.தெற்காசியாவில் முதல் முறையாக ஸ்ட்ரீட் சர்க்யூட் பார்முலா 4 பந்தயம் சென்னையில் நடைபெறுகிறது.

    பார்முலா 4 கார்பந்தயம் நடத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் தெற்காசியாவின் முதல் பார்முலா 4 சர்வதேச இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் பார்முலா 4 இந்தியன் ரேசிங் லீக் இரவு நேர கார் பந்தயங்களுக்கான டிக்கெட்டுகள் விற்பனையை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

    டிக்கெட்டுகள் பெற விரும்புவோர் பேடிஎம் இன்சைடரில் பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    கிராண்ட் ஸ்டான்ட் ரூ.1000, பிரீமியம்-ரூ.4 ஆயிரம், கோல்டு ரூ.7 ஆயிரம், பிளாட்டினம் ரூ.10,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

    ×