என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "என் கவுண்டர்"
- கடத்தல் கும்பல் சாம்பவ் ஜெயினின் காலில் சுட்டு விட்டு விஸ்வகர்மா சவுக் பகுதி அருகே அவரை தள்ளிவிட்டு தப்பி சென்றனர்.
- தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் மேலும் 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லூதியானா:
பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் சாம்பவ் ஜெயின். தொழில் அதிபரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 7 பேர் கும்பலால் கடத்தப்பட்டார். அவரது குடும்பத்தினரிடம் கடத்தல் கும்பல் பணம் கேட்டு மிரட்டியது.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சாம்பவ் ஜெயினை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீவிர விசாரணை நடத்திய போலீசார் கடத்தல் கும்பலை நெருங்கினர். இந்நிலையில் கடத்தல் கும்பல் சாம்பவ் ஜெயினின் காலில் சுட்டு விட்டு விஸ்வகர்மா சவுக் பகுதி அருகே அவரை தள்ளிவிட்டு தப்பி சென்றனர்.
இதையடுத்து கடத்தல் வழக்கில் தொடர்புடைய தேடப்படும் கும்பலை சேர்ந்த 2 பேரை பஞ்சாப் போலீசார் நேற்று இரவு என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த என் கவுண்டரின் போது ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார்.
இதுகுறித்து லூதியானா போலீஸ் கமிஷனர் குல்தீப் சிங் சாஹல் கூறுகையில், லூதியானாவைச் சேர்ந்த தொழில் அதிபர் சாம்பவ் ஜெயின் கடத்தல் வழக்கில் தொடர்புடைய சுபம் என்கிற கோபி மற்றும் சஞ்சீவ் குமார் என்ற சஞ்சு பஹ்மான் ஆகியோர் போலீஸ் தரப்புடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.
இன்ஸ்பெக்டர் குல்வந்த் சிங் தலைமையிலான போலீஸ் குழு அவர்களை துரத்திக் கொண்டிருந்தபோது, லூதியானா மாவட்டத்தில் உள்ள டோராஹா நகரில் உள்ள திப்பா பாலம் அருகே என்கவுண்டர் நடந்தது. இதில் ஏ.எஸ்.ஐ. சுக்தீப் சிங் என்ற போலீஸ்காரரும் பலத்த காயமடைந்தார். இறந்த இருவர் மீதும் ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன.
தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் மேலும் 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நேபாளி என்ற ஜதின், பிரேம்ஜித், மந்தோஷ், ஆதித்யா மற்றும் மன்தீப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றார்.