என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கொண்டால் ரெட்டி"
- காங்கிரஸ் மாநிலத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
- அவரது சகோதரர் வாக்குச்சாவடிக்குள் 20 நபர்களுடன் உலா வருவதாக பிஆர்எஸ் புகார்.
தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பிஆர்எஸ், காங்கிரஸ், பா.ஜனதா இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. என்றபோதிலும், காங்கிரஸ்- பிஆர்எஸ் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
பிஆர்எஸ் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க தேர்தல் பணியில் முழுக்கவனம் செலுத்தியது. அதேவேளையில் கர்நாடகாவில் ஆட்சியை பிடித்ததுபோன்று, தெலுங்கானாவிலும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது.
இதனால் தேர்தல் முறைகேடு ஏதும் நடந்து விடாமல் தடுக்க இரு கட்சி தொண்டர்களும் தீவிரமாக தேர்தல் பணி செய்து வருகின்றனர்.
வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து வாக்காளர்கள், பிரபலங்கள், நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி 8.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. அதன்பின் அதிக அளவில் வாக்குகள் பதிவாகினது. 11 மணி நிலவரப்படி 20.64 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தெலுங்கானா மாநில தலைவரும், வேட்பாளருமான ரேவந்த் ரெட்டியின் சகோதரர் கொண்டால் ரெட்டி வாக்குச்சாவடி மையத்திற்குள் சென்று தேர்தல் அதிகாரியுடன் பேசியதாக பிஆர்எஸ் தொண்டர்கள் குற்றம்சாட்டினர். மேலும், கொண்டால் ரெட்டி வாகனத்தை மறித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக பிஆர்எஸ் தொண்டர்கள் கூறியதாவது:-
கொண்டால் ரெட்டி போலி பாஸ் உடன் வாக்குச்சாவடிகளில் உலா வருகிறார். அதோடு தேர்தல் அதிகாரிகளுடன் பேசுகிறார். மொத்தமாக 20 பேருடன் வளம் வருகிறார். மூன்று வாக்கு மையத்திற்குள் அவர்களுடன் கொண்டால் ரெட்டில் சென்றுள்ளார். அதுவும் வாகனத்துடன் சென்றுள்ளார். ஆனால், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தவில்லை. மையத்திற்கு வந்த பிறகு குண்டர்கள் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவர்களுடன் சென்றவர்களை பிடித்து போலீஸில் ஒப்படைத்தோம். ஆனால், 10 நிமிடத்திற்குள் போலீசார் அவர்களை ரிலீஸ் செய்துள்ளனர். நாங்கள் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம்" எனத் தெரிவித்தார்கள்.
கொண்டால் ரெட்டி இதுகுறித்து கூறியதாவது:-
நான் பொது முகவர். நான் வாக்குச்சாவடிக்கு சென்றேன். ஆனால், பிஆர்எஸ் தொண்டர்கள் என்னை தடுத்து நிறுத்தினார்கள். என்னுடைய வாகனைத்தையும் மறித்தார்கள். அவர்கள் என்னை தாக்க முயற்சித்தார்கள். காங்கிரஸ் தொண்டர்கள் என்னுடன் இருக்கிறார்கள். என்னை தடுத்து நிறுத்தும் முயற்சியாக பிஆர்எஸ் கட்சியினர் எனது வாகனத்தை கடந்த 2 மணி முதல் 3 மணி வரை பின்தொடர்ந்தனர். நான் காலையில் இருந்து வாக்குச்சாவடி சென்று கொண்டிருக்கிறேன். நான் எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளேன். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
இவ்வாறு கொண்டால் ரெட்டி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்