search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெட்ரோ நிர்வாகம்"

    • தெற்காசியாவிலேயே இரவு நேர ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நடத்தும் முதல் நகரமாக சென்னை திகழ்கிறது.
    • மெட்ரோ நிலையங்களில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம் என்று அறிவிப்பு.

    சென்னையில் நடைபெறும் ஃபார்முலா கார் பந்தயத்திற்கு செல்பவர்கள் மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

    பேடிஎம் இன்சைடரில் முன்பதிவு செய்தவர்களுக்கு பிரத்யேக டிஜிட்டல் மெட்ரோ பாஸ்கள் வழங்கப்படும் என்றும் அதை பயன்படுத்தி பயணிகள் மெட்ரோ நிலையங்களில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) மூலம் சென்னை ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் வரும் ஆகஸ்ட் 31, 2024 (சனிக்கிழமை) மற்றும் செப்டம்பர் 1. 2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் இரவு நேர ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயம் நடைபெற உள்ளது.

    தெற்காசியாவிலேயே இரவு நேர ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நடத்தும் முதல் நகரமாக சென்னை திகழ்கிறது.

    இந்நிகழ்விற்கு செல்லும் பயணிகளுக்கு தடையற்ற பயணத்தை வழங்க சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னை ஃபார்முலா 4 ரேசிங் சர்க்யூட் உடன் இணைந்து ஸ்பான்சர் செய்யப்பட்ட பிரத்யேக மெட்ரோ அல்லது பயணச்சீட்டுகளை பயணிகளுக்கு வழங்குகிறது.

    பேடிஎம் இன்சைடர் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட சரியான டிஜிட்டல் டிக்கெட்டுகளுடன் நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு மட்டுமே இந்த ஸ்பான்சர் செய்யப்பட்ட பிரத்யேக டிஜிட்டல் மெட்ரோ பாஸ்கள் வழங்கப்படும்.

    இந்த மெட்ரோ பாஸ் பயன்படுத்தி பயணிகள் எந்த ஒரு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்தும் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு மிக அருகில் உள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு சென்று திரும்ப முடியும்.

    நிகழ்வில் பங்கேற்பவர்கள் தங்கள் டிஜிட்டல் மெட்ரோ பாஸில் உள்ள தனித்துவமான அல்லது குறியீட்டை தானியங்கி கட்டணம் பெறும் இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு மெட்ரோ பாஸ்களை ஒரு சுற்றுப் பயணத்திற்கு நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம்.

    பேடிஎம் இன்சைடர் மூலம் வாங்கப்பட்ட டிஜிட்டல் டிக்கெட்டுகள் உள்ளவர்களுக்கு மட்டுமே ஸ்பான்சர் செய்யப்பட்ட மெட்ரோ பயணம் கிடைக்கும். இந்தச் சலுகைக்கு வேறு எந்த டிக்கெட்டுகளும் அல்லது பாஸ்களும் தகுதி பெறாது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • நாளை முதல் ரெயில் சேவை நேரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு.
    • இரவு 10 மணி முதல் 11 மணி வரையில் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரெயிலில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதால் நாளை முதல் ரெயில் சேவை நேரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அதன்படி, காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் எனவும், காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மதியம் 12 முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, இரவு 10 மணி முதல் 11 மணி வரையில் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 

    ×