என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சார் தாம்"
- 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்
- புவியியல் சூழல் மிகவும் சவாலாக இருந்ததாக ஐரோப்பிய நிறுவனம் தெரிவித்தது
பெரும் மழை, கடும் பனி, மலைச்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட அனைத்துவிதமான பருவகால மாற்றங்களிலும் சீராக பக்தர்கள் பயணிக்கும் வகையில் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் எனப்படும் நான்கு இந்து மத புனித தலங்களை இணைக்கும் வகையில் "சார் தாம்" (Char Dham) சாலைகள் அமைக்கும் திட்டத்தில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
மலைமாநிலம் என அழைக்கப்படும் உத்தரகாண்ட்டில், உத்தரகாசி மாவட்டத்தில் அமைக்கப்படும் சாலை பணிகளின் தொடர்ச்சியாக எண்-134 தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா வளைவு - பார்கோட் பகுதியில் ஒரு சுரங்கம் அமைக்கப்பட்டு வந்தது.
கடந்த நவம்பர் 12 அன்று காலை 05:30 மணியளவில் இதன் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் சுரங்க நுழைவாயிலில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ளே பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். 17 நாட்களுக்கு பிறகு பெரும் போராட்டத்திற்கு பிறகு அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த சுரங்கம் இடிந்து விழுவது இது முதல் முறை அல்ல என தகவல்கள் தெரிவிக்கின்றன.
"இரு புறம் எதிரெதிர் திசையில் மக்கள் பயணிக்க கூடிய வகையில் அமைக்கப்பட்ட சுமார் 4.5 கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த சுரங்க பாதையில் இது போன்ற நிகழ்வுகள் சுமார் 20 முறை ஏற்பட்டுள்ளது. சுரங்கங்கள் அமைக்கும் பணியில் இடிந்து விழும் நிகழ்வு வழக்கமான ஒன்றுதான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இம்முறை 41 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். 'கேவிட்டி' என அழைக்கப்படும் இத்தகைய இடிந்து விழும் நிகழ்வுகள், சில்க்யாரா பகுதியை விட பார்கோட் பகுதியில் அதிகம் நடந்தன" என பொதுத்துறை நிறுவனமான தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன (NHIDCL) இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இந்த சாலை பணிகளுக்கான ஒப்பந்தத்தை நவயுகா எஞ்சினியரிங் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி எனும் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு செயல்திட்ட வடிவமைப்பை வழங்கும் பணியை ஐரோப்பிய நிறுவனமான பெர்னார்ட் க்ரூப் (Bernard Gruppe) முன்னெடுத்தது. முன்னர், இந்நிறுவனம், சுரங்கம் அமைக்கும் இடங்களின் புவியியல் சூழல், ஆவணங்களில் கொடுக்கப்பட்டிருந்ததை காட்டிலும் பெரும் சவாலாக இருந்தது என குறிப்பிட்டிருந்தது.
ஆனால், மலைப்பகுதியில் சுரங்க சாலைகள் அமைக்கும் பணி மிகவும் சிக்கலானது என ஒப்பு கொள்ளும் கட்டிட வல்லுனர்கள், கான்க்ரீட் சாலைகளும் சுரங்கமும் கட்டுவது நிறைவடைந்தால், அதன் பிறகு அது இடிந்து விழும் சாத்தியம் மிக குறைவு என கூறுகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்