என் மலர்
நீங்கள் தேடியது "அவசர உதவி எண்கள்"
- கனமழை காரணமாக நேற்று அதிகாலை முதலே சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
- மழை தொய்வின்றி பெய்ததால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
சென்னை:
மிச்சாங் புயல் வட தமிழக கடலோரப் பகுதியான சென்னையை ஒட்டிய பகுதிகளில் நேற்று வளைந்து கடந்து சென்றதால், அதன் வேகம் குறைந்து, வெகுநேரம் சென்னைக்கு அருகில் மழை மேகங்களுடன் பயணித்தது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை இடைவிடாமல் மழை கொட்டியது.
சென்னையில் பெய்த மழை காரணமாக மாநகர் முழுவதும் வெள்ளக்காடானது. திரும்பிய திசையெல்லாம் மழைநீர் தேங்கியதை பார்க்க முடிந்தது. தெருக்கள் தோறும் முழங்கால் முதல் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தது. மழை ஒரு பக்கம், கடல் சீற்றம், காற்று மறுபக்கம் என சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை மிச்சாங் புயல் பந்தாடியது.
இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மேலும், மழைநீர் வடிகால்களில் தண்ணீர் நிரம்பி சாலைகளில் உள்ள திறப்புகள் வழியாக மழைநீர் பொங்கி வழிந்தபடி சாலைகள் தோறும் ஆற்றில் செல்வது போல் சென்னையின் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கனமழை காரணமாக நேற்று அதிகாலை முதலே சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், வீடுகளில் பெண்கள் சமையல் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும், வீடுகளில் உள்ள மேல்நிலைத் தொட்டிகளில் சுதாரிப்பாக தண்ணீரை நிரப்பி வைக்காதவர்கள் மோட்டரை போட்டு தண்ணீரை தொட்டிகளுக்கு ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இன்னும் சில தாழ்வான பகுதிகளில் உள்ள வீட்டு கழிவறைகளில் தண்ணீர் கீழே செல்ல முடியாமல் கழிவுகள் வெளியேற முடியாத நிலையும் நிலவியது.
மாநகரில் நேற்று மழை தொய்வின்றி பெய்ததால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால், சென்னையின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது என்றே கூறலாம்.
தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்த வீடுகளில் இருந்து மக்களை மீட்கும் பணிகள் கூட தொடர் மழை காரணமாக முழுவீச்சில் மேற்கொள்ள முடியவில்லை என்றே கூற முடியும். இன்று மழை சற்று ஓய்ந்த பின்னரே மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெறும். அதே போன்று, மழைநீர் தேங்கிய பகுதிகளில் இருந்து மழைநீரை அகற்றும் பணிகளும் துரிதமாக நடைபெறும் என்று தெரிகிறது.
இந்நிலையில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முக்கிய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் அவசர கட்டுப்பாட்டு அறைக்கு 1913 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். 9445477205 என வாட்ஸ் அப் எண், 04425619207, 04425619206, 04425619204 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
- மின்னஞ்சல் மூலம் புகாரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உடனடி உதவிக்கு, அருகிலுள்ள நிலையக் கட்டுப்பாட்டாளர்களைத் தொடர்பு கொள்ளவும்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ உதவி எண்கள் செயல்படவில்லை என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்னை மெட்ரோ உதவி எண்கள் தற்காலிகமாக வேலை செய்யவில்லை. மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதுவரை customercare@cmrl.in என்ற மின்னஞ்சல் மூலம் புகாரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி உதவிக்கு, அருகிலுள்ள நிலையக் கட்டுப்பாட்டாளர்களைத் தொடர்பு கொள்ளவும். ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.