என் மலர்
நீங்கள் தேடியது "திமுக தலைமைக்கழகம்"
- 'மிச்சாங்' புயலால் பெய்த கனமழை-வெள்ளம் காரணமாக சில மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.
- இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு தேதி மாற்றப்பட்டுள்ளது.
சென்னை:
தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
'மிச்சாங்' புயலால் பெய்த கனமழை-வெள்ளம் காரணமாக சில மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி மழை வெள்ள நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், வருகிற 17-ந்தேதி அன்று சேலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு தேதி மாற்றப்பட்டு வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.