search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரிகூடமலை"

    • தென்பாண்டி நாட்டில் திரிகூட மலை என்று அழைக்கப்படுவது சிவசைலம்.
    • இவன் மகா விஷ்ணு குடி கொண்ட அந்த இடத்தினை கண்டு மெய்மறந்தான்.

    தென்பாண்டி நாட்டில் திரிகூட மலை என்று அழைக்கப்படுவது சிவசைலம்.

    இந்த மலை அடிவாரத்தில் ஆதி மூலமான மகா விஷ்ணு குடி கொண்டிருந்தார்.

    அவர் குடி கொண்டிருந்த இடம் அழகான மிக நெருக்கமான பூக்கள் நிறைந்த இடம்.

    எனவே அந்த இடத்தினை மொய்மாம் பூம்பொழில் என்று அழைத்தனர்.

    பாண்டிய மன்னன் இந்திர துய்மன் பெருமானின் பக்தன்.

    இவன் மகா விஷ்ணு குடி கொண்ட அந்த இடத்தினை கண்டு மெய்மறந்தான்.

    அங்கு வந்து தினமும் தன்னை மறந்து வணங்கி நின்றான்.

    இவனின் பக்தியை கேள்விப்பட்டார் அகத்திய மாமுனிவர்.

    தான் வாழ்ந்த பொதிகை மலையை விட்டு மொய்மாம் பூம்பொழில் நோக்கி வந்தார்.

    அந்த மகாபக்தனை பார்த்து அவனுக்கு பாராட்டு தெரிவிக்க வந்த மாமுனிக்கு அவனை பார்த்தவுடன் கோபம் வந்தது.

    முனிவர் வந்தது கூட தெரியாமல் பாண்டிய மன்னன் பக்தியில் தன்னை மறந்த நிலையில் பெருமாளுடன் ஐக்கியமாகி இருந்தார்.

    இதைக்கண்டு வெகுண்டமுனிவர் தான் நேரில் வந்தும் கூட இந்த மன்னன் அகந்தையால் தன்னை மதிக்கவில்லையே என கோபம் கொண்டார்.

    நீ யானையாக போக கடவது என்று பாண்டிய மன்னனை நோக்கி சபித்தார்.

    மறுநிடமே அரசன் யானையாக மாறிவிட்டார்.

    அகத்தியர் அதன்பின் தன் யோக நெறியால் நினைத்துப் பார்த்தபோது மன்னனின் தவறு இல்லாத நிலையை உணர்ந்தார்.

    அரசன் மீது கருணை கொண்டு கஜேந்திரா என்று அழைத்து ஆசி கூறினார்.

    இதற்கிடையில் தாமிரபரணி நதியில் மேலே நின்று தவம் செய்துகொண்டிருந்தார்.

    தேவலன் என்ற முனிவர்.

    இவரை வான் வழி சென்ற கந்தர்வன் என்பவன் விளையாட்டாய் பார்த்து சிரித்தான்.

    அவரை கேலி செய்யும் பொருட்டு ஆற்று நீர் வழியாக முனிவரின் காலை பிடித்து இழுத்து விளையாடினான்.

    இதனால் மிரண்டு போன முனிவர் அவன் மீது கோபம் கொண்டார்.

    கந்தர்வனை முதலையாக போவது என்று சபித்தார்.

    அந்த சபிக்கப்பட்ட கந்தர்வன் முதலை மொய்மாம் பூம்பொழிலில் வாழ்ந்து வந்தது.

    கஜேந்திரன் யானையாக இருந்தாலும் பல ஆண்டுகளாக சாபத்தினால் யானை கூட்டத்தோடு கூட்டமாக அரசனாக வாழ்த்து வந்தார்.

    ஆனாலும் தினமும் பகவானை பூஜை செய்ய மட்டும் தவறுவதில்லை.

    ஒரு நாள் பொழிந்த நாதரை வழிபட தாமரை மலரை பறிக்க பூம்பொழினுள் யானை இறங்கும் போது

    அங்கு முதலையாய் வாழ்ந்து வந்த கந்தர்வன் கஜேந்திரன் காலை பற்றினான்.

    உயிர் போகும் நிலையில் கதறினார் யானை உருவத்தில் இருந்த அரசன்.

    அப்போது அவருக்கு முற்பிறவி நினைவுக்கு வந்தது.

    தன்னிலை உணர்ந்து ஆதி மூலத்திடம் உதவி கேட்டார்.

    இவரின் அபயக்குரல் மகாவிஷ்ணுவின் காதுக்கு கேட்டது.

    உடனே மகாவிஷ்ணு கருடன் மீதேறி தனது சக்கரத்தை ஏவினார்.

    பின் அவர்தாமிரபரணி நதியில் திருவலஞ்சுழியில் வந்து இறங்கினார்.

    பின்பு அங்கு கோவில் கொண்டுள்ள சிவ பெருமானின் அருள் பெற்று, யானையின் காலை பிடித்த முதலையை சக்கரம் மூலம் தலையறுத்தார்.

    இதனால் கந்தர்வனுக்கு சாப விமோசனம் அளித்தார்.

    அதன் பின்பு யானையான கஜேந்திரனை தன் கரத்தால் தூக்கி விட்டார்.

    பகவான் கரம் பட்டதும் கஜேந்திரன் அஞ்ஞான பந்தம் அகன்று மகாவிஷ்ணு மூலம் பழைய உருவமான அரசன் ஆனான்.

    கஜேந்திரனான அத்தியை (யானையை) பகவான் ஆட்கொண்டதால் இவ்வூருக்கு அத்தி+யாள+நல்லூர் என்று பெயர் பெற்றது.

    அதுவே மருவி அத்தாளநல்லூர் ஆனது.

    இங்கு கஜேந்திர வரதன் என்ற திருநாமத்துடன் ஆதிமூலம் திருக்கோவில் கொண்டுள்ளார்.

    புரட்டாசி சனிக்கிழமை தோறும் கருட சேவை நடைபெறும்.

    பக்தர்கள் மாதம் தோறும் கடைசி சனிக்கிழமை இந்த கோவிலுக்கு கூட்டம் கூட்டமாக வந்து வேண்டும் வரம் பெற்று பலன் பெறுகிறார்கள்.

    இந்த கோவில் நடை திறக்கும் நேரம் காலை 6 மணி முதல் 10 மணி வரை. மாலை 4 மணி முதல் 7 மணி வரை.

    இந்த கோவிலுக்கு நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்தும், சேரன் மகாதேவி மற்றும்

    நெல்லை சந்திப்பில் இருந்தும் டவுண் பஸ் வசதி உள்ளது.

    இல்லையென்றால் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் பேருந்துகளில்

    நாகர்கோவில் வள்ளியூர் பாபநாசம் தென்காசி செல்லும் பேருந்துகளிலும் சேரன் மகாதேவி

    அல்லது வீரவநல்லூரில் இறங்கி வந்து அங்கிருந்து ஆட்டோவிலும் செல்லலாம்.

    முக்கூடல் வந்தால் கூட ஆட்டோவில் செல்லலாம்.

    ×