search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷ்ணு அவதாரம்"

    • நவநீதம் என்றால் புதுசாக எடுத்தது என்று அர்த்தம்.
    • அது வெறுப்பைத் தருகிற கருப்பு அல்ல, மோகத்தை உண்டாக்குகிற மேகத்தின் கருப்பு.

    கிருஷ்ண பரமாத்மாவுக்கு எத்தனையோ பெயர்கள் உள்ளன.

    அதுபற்றி மகாபெரியவர் சொன்ன ஒரு சிறிய விளக்கம்...

    நவநீதம் என்றால் புதுசாக எடுத்தது என்று அர்த்தம்.

    'நவ' என்றால் புதுசு என்று அர்த்தம். 'நீதம்' என்றால் எடுக்கப்பட்டது என்று அர்த்தமாகும்.

    புத்தம் புதுசாக அதிகாலை நேரத்தில் பசும்பாலில் உறை ஊற்றி சாயங்காலமே அந்த தயிரை எடுக்கிற வெண்ணெய்தான் நவநீதம் என்று சொல்லப்படுகிறது.

    அதோடு சேரும் கிருஷ்ணன், நவநீத கிருஷ்ணராவார்.

    கன்னங்கரேலென்று இருக்கிறதால் கிருஷ்ணன் என்றே பெயர் வைத்துள்ளனர்.

    அது வெறுப்பைத் தருகிற கருப்பு அல்ல, மோகத்தை உண்டாக்குகிற மேகத்தின் கருப்பு.

    அவனைக் 'கார்வண்ணன்' என்று சொல்வார்கள்.

    மேகம் எத்தனைக்கு எத்தனை கருப்போ அத்தனைக்கு அத்தனை அதிகமாக மழை நீரை கொட்டும்.

    அந்த தண்ணீர் கருப்பாகவா இருக்கிறது? இப்படி பரம பிரேம தாரையைப் பிரவாகமாக கொட்டுகிறவனே கிருஷ்ணன்.

    • விஷ்ணு தசாவதாரங்களில் ஒன்பதாவது அவதாரம்தான் கிருஷ்ணாவதாரம்.
    • தனது ஏழாவது வயதில் கம்சனை வீழ்த்தி பெற்றோரை விடுவித்தார் கிருஷ்ணர்.

    "எப்போதெல்லாம் உலகில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் அவதரிக்கிறேன்" என்று

    பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளார்.

    விஷ்ணு தசாவதாரங்களில் ஒன்பதாவது அவதாரம்தான் கிருஷ்ணாவதாரம்.

    அவர் இந்த பூலோகத்தில் அவதரித்த நாளையே கிருஷ்ண ஜெயந்தி அல்லது கோகுலாஷ்டமியாக கொண்டாடுகிறோம்.

    வட இந்தியாவில் 'ஜென்மாஷ்டமி' என்று இது அழைக்கப்படுகிறது.

    ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில் கம்சனின்

    சிறைச்சாலையில் இருந்த வசுதேவர் தேவகிக்கு மகனாக கிருஷ்ணர் அவதரித்தார்.

    3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும், 7 வயதில் கோபியர் கூட்டத்திலும் ,

    8 வயது முதல் 10 வயது வரை மதுராவிலும் கிருஷ்ணரின் இளம் வயது நாட்கள் கழிந்தன.

    தனது ஏழாவது வயதில் கம்சனை வீழ்த்தி பெற்றோரை விடுவித்தார் கிருஷ்ணர்.

    தீராத விளையாட்டுப் பிள்ளையான கிருஷ்ணரின் இளமைப் பருவம் பற்றி கேட்பதற்கே இனிமையாக இருக்கும்.

    நாளரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த கிருஷ்ணர், ஆயர்கள் கட்டி வைத்த கன்றுகளை

    அவிழ்த்து விடுவது... நீர் ஏந்தி வரும் பெண்களின் குடங்களை கல் விட்டு உடைப்பது...

    வெண்ணையை திருடி உண்பது... போன்ற பல்வேறு சேட்டைகளில் ஈடுபட்டார்.

    கிருஷ்ணர் இரவு 12 மணிக்கு பிறந்ததை நினைவு கூறும் வகையில் வட இந்தியாவில் இரவு 12 மணி வரையிலும்

    உபவாசம் இருந்து, பஜனை செய்வார்கள்.

    ஆயர்பாடியில் வளர்ந்த கண்ணன் இளமையில் வெண்ணை திருடி உண்டவர் என்பதால் கோகுலாஷ்டமி அன்று

    கண்ணனுக்கு பால், தயிர், வெண்ணை ஆகியவற்றை தவறாது நிவேதனம் செய்து வழிபடுவது சிறப்பு.

    ஆயர்பாடியில் மாடுகளை மேய்த்து திரிந்த கண்ணன், பகல் நேரம் முழுவதும் மாடுகளை நன்றாக மேய்த்து விட்டு

    மாலை நேரத்தில் தான் வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    அதனால் மாலை நேரம்தான் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்ய ஏற்ற நேரமாகும்.

    • இந்த தெய்வீக அதிர்வை நாம் கேட்கும் போதும், இந்த உணர்வு புத்துயிர் பெறுகிறது.
    • ஹரா என்ற வார்த்தை பகவானின் சக்தியை குறிப்பதாகும்.

    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

    இந்த மந்திர உச்சரிப்பில் இருந்து உண்டாகும் தெய்வீக அதிர்வானது நமது கிருஷ்ண உணர்வை புத்துயிர்

    பெறச் செய்யும் ஆத்மாக்களாகிய நாம் அனைவரும் உண்மையில் கிருஷ்ண உணர்வுள்ள ஜீவன்களாகவோம்.

    ஆனால் பவுதிகத்துடன் நமது தொடர்பின் காரணமாக நினைவிற் கெட்டாத காலத்திலிருந்தும்

    நமது உணர்வானது மாசடைந்துள்ளது.

    நமது கிருஷ்ண உணர்வை உயிர்ப்பிப்பதன் மூலம் பவுதிக இயற்கைக்கு எதிரான மாயை உடனேயே நிறுத்த முடியும்.

    கிருஷ்ண உணர்வு என்பது செயற்கையாக மனதில் திணிக்கப்படும் ஒன்றல்ல, இந்த உணர்வே உயிர்வாழியின் உண்மையான சக்தியாகும்.

    இந்த தெய்வீக அதிர்வை நாம் கேட்கும் போதும், இந்த உணர்வு புத்துயிர் பெறுகிறது.

    ஹரா என்ற வார்த்தை பகவானின் சக்தியை குறிப்பதாகும்.

    கிருஷ்ண, ராம என்ற வார்த்தைகள் கடவுளையே குறிப்பதாகும்.

    கிருஷ்ண, ராம என்பதன் பொருள் மிக உன்னத ஆனந்தம் என்பதாகும்.

    ஹரா என்பது பகவானின் அதி உன்னத சக்தியை குறிக்கிறது.

    இது பேச்சு வழக்கில் ஹரே என்று மாறி உள்ளது.

    இந்த மந்திரமானது பகவானை அடைய நமக்கு உதவுகிறது.

    ஹரே, கிருஷ்ண, ராம என்ற மூன்று வார்த்தைகள் மஹா மந்திரத்தின் தெய்வீக விதைகளாகும்.

    மந்திர உச்சாடனமானது கட்டுண்ட அத்மாக்களுக்கு பாதுக்கு கொடுப்பதற்காக கடவுளிடமும் அவரது

    உள்ளுர சக்தியான ஹரா (ராதாராணி) விடமும் விடுவிக்கும் ஒரு ஆன்மீக அழைப்பாகும்.

    தாயை நினைத்து கதறும் ஒரு குழந்தையின் அழுகைக்கு சமமானது.

    இந்த மந்திர உச்சாடனம், ஹரா என்ற தாய் ஹரி அல்லது கிருஷ்னர் என்று அழைக்கப்படும்

    உன்னதமான தந்தையின் அருளைப் பெறுவதற்கு பக்தர்களுக்கு உதவுகிறார்.

    ஆகவே ஆன்மீக தன்னுணர்வை அடைவதற்கு

    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே

    என்ற இந்த மகாமந்திரத்தை உச்சரிப்பதை தவிர, இந்த கலியுகத்தில் வேறு சக்தி வாய்ந்த மந்திரம் ஒன்றுமில்லை.

    தற்போதைய கெட்ட விளைவுகளை முறியடிக்க ஒரே வழி இந்த 6 நாமங்களே, பிறரிப் பெருங்கடலைக் கடக்க

    இப்புனித நாமங்களை தினமும் சொல்லுங்கள்.

    உங்கள் மனம் பக்குவப்படுவதை நீங்கள் உணர்வீர்கள்.


    ×