என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாக்குபதிவு எந்திரம்"
- உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவுக்காக எந்திரங்கள் தெலுங்கானா மாநிலத்திலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் வந்தன.
- தற்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் நடை பெறும் வாய்ப்பு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த 2006-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடந்தது. உள்ளாட்சி தேர்தலில் தேர்வாவான பிரதிநிதிகள் 2011-ம் ஆண்டு வரை பதவியில் இருந்தனர். அதன்பிறகு 12 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.
இதையடுத்து கடந்த 2021 ஆகஸ்டு மாதத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தல் பணிகள் நடந்தன.
உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவுக்காக எந்திரங்கள் தெலுங்கானா மாநிலத்திலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் வந்தன.
இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் புதுவை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்ககோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போனது. பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் எந்திரங்கள் வைக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் உள்ளாட்சித்தேர்தல் நடக்கவில்லை. இதனால், மாணவிகள் இடப்பற்றாக் குறையால் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பாரதிதாசன் மகளிர் அரசு கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் வாக்குப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் 3 கண்டெய்னர் லாரிகளில் நேற்று இரவு ஏற்றப்பட்டன.
அந்த லாரிகள் 2 தெலுங்கானாவுக்கும், ஒரு லாரி கர்நாடகத்துக்கும் சென்றது.
தற்போது பாரதிதாசன் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த எந்திரங்கள் எடுக்கப்பட்டதால், ஏற்கெனவே இடநெருக்கடியில் சிக்கி தவித்த மாணவிகள் தற்போது மீண்டுள்ளனர்.
அதே நேரத்தில் புதுவையில் தற்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் நடை பெறும் வாய்ப்பு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. வாக்குபதிவு எந்திரங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதால் புதுவையில் மீண்டும் உள்ளாட்சி தேர்தல் நடை பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.