search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஷ்மீரி மட்டன் புலாவ்"

    • வெள்ளை மட்டன் பிரியாணியை சாப்பிட்டிருக்கிறீர்களா...?
    • பிரியாணி கமகம என்று உங்களை சாப்பிட அழைக்கும்.

    வழக்கமான சிக்கன், மட்டன் பிரியாணியை ருசித்திருப்பீர்கள், வெள்ளை மட்டன் பிரியாணியை சாப்பிட்டிருக்கிறீர்களா...? இந்த கொங்குநாடு வெள்ளை மட்டன் பிரியாணி பார்ப்பதற்கு வெள்ளையாக இருந்தாலும், சுவையில் சுண்டியிழுக்கும். இதை எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    சீரகச் சம்பா அரிசி- 1 கிலோ

    மட்டன் (வெள்ளாட்டுக்கறி)-1 கிலோ

    வெங்காயம்- 200 கிராம்

    இஞ்சி பூண்டு பேஸ்ட்- 50 கிராம்

    புதினா-1 கைப்பிடி

    கொத்தமல்லி-1 கைப்பிடி

    பச்சைமிளகாய்-12

    தேங்காய்ப் பால்-1கப்

    பாதம்-50 கிராம்

    பிஸ்தா-25 கிராம்

    முந்திரி-25 கிராம்

    கசகசா-10 கிராம்

    பட்டை-2 துண்டு

    கிராம்பு-6

    சோம்பு-2 ஸ்பூன்

    ஏலக்காய்-3

    எலுமிச்சை- 1/2

    நெய்- 50

    தேங்காய் எண்ணெய்- 50 மி.லி.

    உப்பு- தேவையான அளவு

    உலர் திராட்சை - 2 ஸ்பூன்

    தயிர்- 100 கிராம்

    செய்முறை:

    முதலில் ஒரு பாத்திரத்தை கழுவி, அதில் சுத்தம் செய்து வைத்துள்ள மட்டனை போட்டு அதனுடன் தயிர், இரண்டாக வெட்டிய பச்சைமிளகாய் 5, புதினா, கொத்தமல்லி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு ஒரு ஸ்பூன், ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிசைந்து அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

    அடுத்து பாதம், பிஸ்தா, முந்திரி மற்றும் கசகசா இவற்றை சிறிது நேரம் ஊறவைத்து ஒரு மிக்சி ஜாரில் பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அதைத்தொடர்ந்து, ஊறவைத்த மட்டன் கலவையை ஒரு குக்கரில் சேர்த்து, மட்டன் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, 4-5 விசில் வரும் வரை வேகவைக்கவும்.

    அதன்பின் குக்கரை திறந்து, அதில் அரைத்து வைத்த கலவை, தேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

    அதன்பிறகு வேறொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு மற்றும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.

    பின்னர் அதில் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் வேகவைத்த மட்டனை தண்ணீர் இல்லாமல் எடுத்து இதில் சேர்த்து வதக்க வேண்டும்.

    இதைத்தொடர்ந்து இதில் தயிர், எலுமிச்சைச் சாறு சேர்த்து கிளற வேண்டும். மட்டன் வேகவைத்த தண்ணீரையே ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் என்கின்ற அளவுக்கு ஊற்ற வேண்டும்.

    அதன் பிறகு இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, கொதி வந்தவுடன், அரை மணி நேரம் ஊறவைத்த அரிசியை சேர்த்து, 90 சதவீதம் வெந்து வந்தவுடன் உலர் திராட்சை சேர்த்து மூடியிட்டு, 20 நிமிடம் 'தம்' போட்டு இறக்கினால், கொங்குநாடு வெள்ளை மட்டன் பிரியாணி கமகம என்று உங்களை சாப்பிட அழைக்கும்.

    • காஷ்மீரி மட்டன் புலாவ் கூடுதல் ருசியானது.
    • பிரியாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.

    ஆட்டு இறைச்சி புரதச்சத்து நிறைந்தது. இதனை உணவோடு சமைத்து சாப்பிடும்போது கூடுதல் சுவையை தரும். விழா காலங்களில் மட்டன் பிரியாணி சமைத்து சாப்பிட்டிருப்போம். காஷ்மீரி மட்டன் புலாவ் கூடுதல் ருசியானது. இது பிரியாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. சமையல் பொருட்கள் எல்லாமே பிரியாணிக்கு போடுவதை போலத்தான் இருக்கும் இருந்தாலும் செய்முறை கொஞ்சம் மாறுபட்டது.

    தேவையான பொருட்கள்:

    மட்டன் சாறு தயாரிக்க:

    ஆட்டு இறைச்சி கிலோ

    பெரிய வெங்காயம் - 1

    பூண்டு 6 பல்

    தண்ணீர் - 14 லிட்டர்

    சோம்பு - 2 டீஸ்பூன்

    கருப்பு ஏலக்காய் - 3

    பச்சை ஏலக்காய் 6

    கிராம்பு - 5

    மிளகு - ஒருடீஸ்பூன்

    ஜாதிபத்திரி -1

    உப்பு - தேவைக்கு

    புலாவ் தயாரிக்க

    பாசுமதி அரிசி -1கிலோ

    பச்சை ஏலக்காய் 4

    சீரகம் - 1 டீஸ்பூன்

    லவங்கப்பட்டை - 2

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    பச்சை மிளகாய் - 8

    தயிர் -கால்கப்

    பெரிய வெங்காயம் - 5

    நெய் - 5 டீஸ்பூன்

    தேங்காய் துண்டுகள் (நீளவாக்கில்

    மெலிதாக நறுக்கியது) -8

    பாதாம் (ஊறவைத்து தோல் உரித்தது)-10

    உலர் திராட்சை 20

    எண்ணெய் - தேவைக்கு

    உப்பு - தேவைக்கு

    செய்முறை:

    அரிசியை சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அதில் சுத்தம் செய்த ஆட்டு இறைச்சி, முழு வெங்காயம், பூண்டு, சோம்பு, கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், கிராம்பு, மிளகுதூள், ஜாதிபத்திரி மற்றும் உப்பு சேர்த்து 2 அல்லது 3 விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும். இந்த கலவை ஆறியதும் அதில் இருந்து இறைச்சியை தனியாக பிரித்து எடுத்து வைக்க வேண்டும்.

    வெங்காயங்களை நீளவாக்கில் மெலிதாக நறுக்கிக்கொள்ளவும். இந்த வெங்காயங்களை எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது அடுப்பில் மற்றொரு அடி கனமான பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் ஏலக்காய், சீரகம் சேர்த்து வதக்கவும். பின்பு அதனுடன் இறைச்சியை சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்க வேண்டும்.

    பின்னர் லவங்கப்பட்டை, இஞ்சி பூண்டு விழுது. தயிர், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து ௫ நிமிடங்களுக்கு வதக்க வேண்டும். அதன்பிறகு ஊறவைத்த அரிசியை அதில் சேர்த்து நன்றாகக் கிளறி. அதனுடன் இறைச்சி வேகவைத்த தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பின்பு அந்த கலவையில் பொரித்து வைத்துள்ள வெங்காயத்தில் பாதி அளவை சேர்த்துக் கிளற வேண்டும். 1௦ நிமிடங்கள் மூடிய நிலையில் வேக வைக்க வேண்டும்.

    அடுப்பில் வாணலியை வைத்து அதில் நெய் ஊற்றி சூடானதும் பாதாம், தேங்காய், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். இதை வெந்துக்கொண்டு இருக்கும் கலவையில் சேர்த்துக் கிளறி 5 நிமிடங்கள் குறைவான தீயில் வேகவைத்து இறக்கவும்.

    கடைசியாக மீதமுள்ள பொரித்த வெங்காயத்தை புலாவ் மேல் தூவ வேண்டும். அவ்வளவு தான் சுவையான காஷ்மீரி மட்டன் புலாவ் தயார்.

    ×