search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முட்டை ரெசிப்பி"

    • வீட்டில் உள்ள குட்டீஸ்களுக்கு மிகவும் பிடிக்கும்.
    • பள்ளிகளுக்கு குழந்தைகளுக்கு ஸ்நாக்காக செய்துகொடுக்கலாம்.

    வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சற்று வித்தியாசமாக மொறு மொறு சுவையில் எக் ஃபிரான்கி ஃபிரை தயார் செய்யலாம். எப்போதும் சமோசா அல்லது சப்பாத்தி ரோல், ஸ்பிரிங் ரோல் போன்று செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக இந்த மாதிரி டிரை பண்ணிப்பாருங்க. உங்கள் வீட்டில் உள்ள குட்டீஸ்களுக்கு மிகவும் பிடிக்கும். அனைவரும் இதனை விரும்பி சாப்பிடுவர். பள்ளிகளுக்கு குழந்தைகளுக்கு ஸ்நாக்காக செய்துகொடுக்கலாம். நிச்சயமாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    கோதுமை மாவு - 100 கிராம்

    சின்ன வெங்காயம் - 50 கிராம்

    உருளைக்கிழங்கு- 4

    முட்டை - 2

    எள்ளு- 1/4 தேக்கரண்டி

    கரம் மசாலாதூள் - அரை தேக்கரண்டி

    மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி

    எண்ணெய் - தேவையான அளவு

    மிளகுத்தூள் - தேவையான அளவு

    கொத்தமல்லி - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் முட்டையை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை ஒரு முட்டையை 4 பாகமாக வருமாறு வெட்டிக் கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு கோதுமை மாவில் உப்பு மற்றும் எள் அல்லது சோம்பு சேர்த்து கலந்து தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மாவினை சப்பாத்தி மாதிரி வட்டமாக திரட்டிக்கொள்ள வேண்டும்.

    இப்போது மசாலா தயார் செய்யலாம். வேகவைத்த உருளைக்கிழங்கை தோல் உரித்து நன்றாக மசித்துக்கொள்ள வேண்டும். அதில் வெட்டி வைத்துள்ள வெங்காயம், கரம்பசாலா தூள், மிளகாய் தூள், மஞ்சள்தூள், உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து ஒன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

    பின்னர் நாம் ஏற்கனவே திரட்டி வைத்துள்ள சப்பாத்திக்கு மேல் இந்த மசாலா கலவைகளை பரப்பி விட வேண்டும். பிறகு பீட்ஸா கட்டர் கொண்டு வட்ட வடிவமான சப்பாத்தியை 6 பாகங்களாக வருமாறு வெட்டிக்கொள்ள வேண்டும். வெட்டிய பாகங்களில் வெட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை வைக்க வேண்டும். பின்னர் இதனை சுருள் போல உருட்டி அதன் ஓரங்களை மசாலா வெளியே வராதவாறு ஒட்ட வேண்டும். இப்போது சமோசாக்கள் தயார்.

     அதன்பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொன்றாக போட்டு பொறித்து எடுக்க வேண்டும். சுவையான எக் ஃபிரான்கி ஃபிரை தயார். குழந்தைகள் மிகவும் விரும்புவர்.

    • மாலை நேரங்களில் டீ காபியுடன் சுட சுட ஸ்னாக்சாக சாப்பிடலாம்.
    • குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

    மாலை நேரங்களில் டீ காபியுடன் சுட சுட ஸ்னாக்ஸ் ஆக சாப்பிடுவதற்கு அல்லது மதிய உணவு உடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் இந்த முட்டை 65 இருக்கும். இதுபோன்று மாலை நேரங்களில் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். முட்டையை வைத்து பொடிமாஸ், ஆம்லெட், கிரேவி, குழம்பு என பல வகைகளிலும் ருசித்து சாப்பிட்டு இருப்போம், இன்று முட்டையை வைத்து 65 வித்தியாசமாக செய்வது எப்படி என பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    முட்டை- 5

    மிளகுத்தூள்- கால் ஸ்பூன்

    மிளகாய் தூள்- 1ஸ்பூன்

    காஷ்மீர் மிளகாய்த்தூள்- 1ஸ்பூன்

    மஞ்சள்தூள்- கால் ஸ்பூன்

    சோளமாவு- 1ஸ்பூன்

    கரம் மசாலா- 1ஸ்பூன்

    இஞ்சிபூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்

    எலுமிச்சை- பாதியளவு

    அரிசிமாவு-1ஸ்பூன்

    எண்ணெய்- தேவையான அளவு

    உப்பு சிறிதளவு

    செய்முறை:

    ஒரு சிறிய பாத்திரத்தில் எண்ணெய் லேசாக தடவி முட்டைகளை உடைத்து ஊற்றிக் கால் ஸ்பூன் மிளகுத்தூள், கால் ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக அடித்து கலக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் சிறிதளவு ஊற்றி முட்டை கலவையை அந்த பாத்திரத்தை மேல் வைத்து ஒரு மூடி போட்டு அதை மிதமான சூட்டில் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

    அதன்பிறகு ஆவியில் வேகவைத்த முட்டையை எடுத்து சிறு சிறு பீசாக வெட்டிக்கொள்ள வேண்டும். ஒரு தட்டில் மிளகாய்த்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் காஷ்மீர் மிளகாய்த்தூள், சோள மாவு, அரிசி மாவு, தேவையான அளவு உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து மீன் பொரிப்பதற்கு மசாலா ரெடி செய்வது போல் செய்து அதில் வெட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை பிரட்டி எடுக்க வேண்டும்.

    பின்னர் மற்றொரு பாத்திரத்தில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை சேர்த்து பொரித்தெடுக்கவும். மசாலா பிரியாமல் வரும். இப்போது மொறு மொறுவென முட்டை 65 ரெடி. நம் குழந்தைகளுக்கு இந்த மாதிரி புதுமையான முறையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

    • முட்டையை அனைவரும் விரும்பி சாப்பிடுவோம்.
    • மிகவும் ஸ்பெஷலானது முட்டை மசாலாதான்.

    நமக்குத் தேவையான அனைத்து வைட்டமின் சத்துகளும் நிறைந்த `உலகின் மிகச் சிறந்த உணவு வகைகளில் ஒன்று முட்டை. முட்டையை அனைவரும் விரும்பி சாப்பிடுவோம். அதில் மிகவும் ஸ்பெஷலானது முட்டை மசாலாதான். அதுவும் தபாக்களில் செய்யப்படும் முட்டை மசாலா அதன் சுவையே தனி தான். அந்த தாபா ஸ்டைல் ஸ்பெஷல் முட்டை குழம்பு வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளலாம்.

    தேவையான பொருட்கள் :

    வேகவைத்த முட்டை - 6

    பெரிய வெங்காயம் - 2

    தக்காளி விழுது - 3

    பூண்டு - 2 டீஸ்பூன் (நறுக்கியது)

    இஞ்சி - 2 டீஸ்பூன் (நறுக்கியது)

    கடலை மாவு - 2 டீஸ்பூன்

    சிவப்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி

    சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்

    காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

    கரம் மசாலா தூள் - 3/4 டீஸ்பூன்

    கசூரி மேத்தி (உலர்ந்த வறுத்து பொடித்தது) - 1 டீஸ்பூன்

    சீரகம் - 1 டீஸ்பூன்

    காய்ந்த சிவப்பு மிளகாய் - 2

    எண்ணெய் - 3 டீஸ்பூன்

    வெண்ணெய் - 1 டீஸ்பூன்

    நறுக்கிய கொத்தமல்லி இலை - 3-4 டீஸ்பூன்

    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை :

    மசாலாவிற்கு தேவையான வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை நன்றாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு நன்கு பழுத்த தக்காளியை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அடுப்பில் ஒரு வாணலியை வைத்து கசூரி மேத்தியை போட்டு 30 வினாடிகள் வறுத்து ஆறவைத்து கரடுமுரடான பொடியாக நசுக்கி எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி முட்டைகளை போட்டு வேகவைத்து அதன் ஓட்டை நீக்கி கொள்ள வேண்டும்.

    பின்னர் அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளற வேண்டும். இப்போது வேகவைத்த முட்டைகளை அதனுடன் சேர்த்து குறைந்த வெப்பத்தில் 1-2 நிமிடங்களுக்கு பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அடுத்து மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் மற்றும் காய்ந்த சிவப்பு மிளகாய் சேர்க்க வேண்டும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வெங்காயம் வெளிர் பழுப்பு நிறமாக மாறும் வரை சிறிதளவு உப்பு சேர்த்து சுமார் 8 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வதக்க வேண்டும்.

    வெங்காயம் பொன்னிறமாக மாறியவுடன் நறுக்கிய இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து குறைந்த வெப்பத்தில் மற்றொரு 2 நிமிடங்களுக்கு வதக்கவும். இப்போது அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதைச் சேர்த்து நன்கு கலந்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். தக்காளி முழுவதுமாக வெந்து தொக்கு பதத்திற்கு எண்ணெய் பிரியும் வரை நன்கு சமைக்க வேண்டும்.

    பிறகு அதில் 2 டீஸ்பூன் கடலை மாவை 2 டேபிள் ஸ்பூன் தண்ணீரில் கலந்து சேர்த்து குறைந்த வெப்பத்தில் 2-3 நிமிடங்கள் தொடர்ந்து கிளறி வதக்க வேண்டும். அடுத்து அதில் 200 மில்லி தண்ணீரைச் சேர்த்து அதனுடன் காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் வறுத்த கசூரி மேத்தி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து மிதமான தீயில் ஒரு நிமிடத்திற்கு சமைக்கவும்.

    தற்போது வறுத்துவைத்துள்ள முட்டைகளை அதில் போட்டு நன்கு கலந்து மூடி வைத்து சுமார் 5 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் சமைக்க வேண்டும். அதனுடன் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்து கலந்து மேலும் இரண்டு நிமிடங்களுக்கு குறைந்த தீயில் வைத்து சமைத்து இறக்க வேண்டும்.

    `தாபா ஸ்டைல் முட்டை மசாலா' தயார்… இதை நீங்கள் சப்பாத்தி, தோசை, இட்லி, ரொட்டி அல்லது சாதத்துடன் சூடாக பரிமாறவும்.

    • குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.
    • காலை உணவாக எடுத்துக்கொள்ள ஏற்றது.

    குழந்தைகளுக்கு காலை உணவாக அவர்களுக்கு பிடித்த வகையில் ஆரோக்கியமாகவும், சுவை நிறைந்ததாகவும் செய்து கொடுக்க நீங்கள் விரும்பினால் இந்த `முட்டை சீஸ் ரோல்' தான் சரியான தேர்வு. முட்டை, சீஸ் வைத்து குழந்தைகளுக்கு பிடித்தவாறு எவ்வாறு `முட்டை சீஸ் ரோல்' செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

    தேவையான பொருட்கள் :

    முட்டை - 3

    உப்பு - தேவையான அளவு

    சிவப்பு மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்

    பிரெட் துண்டுகள் - 3

    வெண்ணெய் - 3 தேக்கரண்டி

    சாண்ட்விச் சீஸ் - 3

    செய்முறை :

    முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் முட்டையுடன் சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிவப்பு மிளகாய் சேர்த்து நன்கு அடித்து கொள்ள வேண்டும். உங்களுக்கு விருப்பம் இருந்தால் இதில் நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்து கொள்ளலாம். இவை அனைத்தையும் நன்றாக கலந்து எடுத்து தனியே வைத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு ஒரு பிரெட் துண்டை எடுத்து அதன் நான்கு பக்கங் ஓரங்களையும் வெட்டி எடுத்துவிட வேண்டும். பின்னர் வெட்டிய பிரெட் துண்டுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி சீசில் தடவி வைக்க வேண்டும்.

    அடுத்து அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து வெண்ணெய் தடவி சூடானதும் அதில் நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்ற வேண்டும். பிறகு முட்டைகளை மெதுவாக கல்லில் பரப்பி அதன் மேல் சீஸ் தூவிய ரொட்டியை வைத்து முட்டையை கொண்டு சுற்றி நன்றாக சமைக்கவும். முட்டை மற்றும் பிரெட் நன்றாக வெந்தவுடன் எடுத்து குழந்தைகளுக்கு சூடாக பரிமாறுங்கள்.

    • முட்டை சுக்கா எல்லா சாதத்துக்குமே ரொம்ப டேஸ்டா இருக்கும்.
    • சுவையான முட்டை சுக்கா எப்படி செய்வது தெரிஞ்சுக்கலாம் வாங்க.

    பொதுவாக முட்டையில் ஆம்லெட், பொரியல், குழம்பு, வறுவல் இது மாதிரி செய்தா எல்லாருமே அதிகமாக சாப்பிடுவாங்க. அதுலயும் இந்த மாதிரி சுக்கா எல்லாம் செய்து இந்த போது ரொம்பவே பிடிக்கும். இந்த முட்டை சுக்கா எல்லா சாதத்துக்குமே ரொம்ப டேஸ்டா இருக்கும் சேர்த்து வைத்து சாப்பிடுவதற்கு. இந்த மாதிரி மட்டன் சுக்கா ஸ்டைல நீங்களும் முட்டை சுக்கா டிரை பண்ணி வீட்ல எல்லாரும் கொடுத்து பாருங்க எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். சரி வாங்க இந்த சுவையான முட்டை சுக்கா எப்படி செய்வது தெரிஞ்சுக்கலாம் வாங்க.

    தேவையான பொருட்கள்:

    முட்டை- 5

    சோம்பு- 1 ஸ்பூன்

    மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன் தூள்

    துருவிய தேங்காய்- 2 ஸ்பூன்

    சின்ன வெங்காயம்- 6

    தக்காளி- 1

    கிராம்பு- 2

    பட்டை - 1 துண்டு

    தனியா விதைகள்- 1 ஸ்பூன்

    மிளகு- 3 ஸ்பூன்

    கறிவேப்பிலை- 1 கொத்து

    கொத்தமல்லி- சிறிதளவு

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய்- தேவையான அளவு

    செய்முறை

    முட்டையை வேக வைத்து ஓட்டை உரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மஞ்சள் கருவை உடையாமல் முட்டையை வெள்ளை கருவை தனியாக எடுத்து சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    அதன்பிறகு ஒருமிக்சி ஜாரில் பட்டை, சோம்பு, தனியா விதைகள், மிளகுகு சேர்த்து அரைக்க வேண்டும். அதில் துருவிய தேங்காய், சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அடுப்பில் வாணலியில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர்  மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிடவும். பிறகு இதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிறிது நீரை ஊற்றி கிளறி விட வேண்டும். மசாலா நன்றாக சுண்டி வந்த பிறகு அதில் நறுக்கிய முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

    இறுதியாக எடுத்து வைத்த மஞ்சள் கருவை சேர்த்து உடைக்காமல் மசாலாவில் கலந்து விட்டு கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் ருசியான சேலம் சுக்கா வறுவல் தயார்.

    • குழந்தைகளுக்கு வேகவைத்த முட்டை என்றாலே பிடிக்காது.
    • மீண்டும் மீண்டும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

    இன்றைய சமையல் குறிப்பு பதிவில் நாம் பார்க்க இருப்பது கறிவேப்பிலை முட்டை மசாலா எப்படி செய்வது என்பதை பற்றி தான். பொதுவாக குழந்தைகளுக்கு வேகவைத்த முட்டை என்றாலே பிடிக்காது. அதனால் அந்த முட்டையை சாப்பிட மறுப்பார்கள். ஆனால் நீங்கள் இந்த பதிவில் கூறியுள்ள வேகவைத்த கறிவேப்பிலை முட்டை மசாலா ரெசிபியை ஒருமுறை செய்து கொடுத்துப்பாருங்க..! அதன் பிறகு அவர்களே மீண்டும் மீண்டும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். சரி வாங்க பதிவினுள் செல்லலாம்.

    தேவையான பொருட்கள்:

    முட்டை – 8

    கறிவேப்பில்லை – 1 கைப்பிடி அளவு

    மிளகு – 2 டீஸ்பூன்

    சீரகம் – 2 டீஸ்பூன்

    சோம்பு – 2 டீஸ்பூன்

    இஞ்சு – 2 சிறிய துண்டு

    பூண்டு – 10 பற்கள்

    சின்ன வெங்காயம் – 14

    மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்

    மிளகாய்தூள் – 2 டீஸ்பூன்

    எண்ணெய் – தேவையான அளவு

    உப்பு – தேவையான அளவு

    தண்ணீர் – தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் நாம் எடுத்துவைத்துள்ள 8 முட்டைகளையும் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு போட்டு அடுப்பில் நன்கு வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதனை தோல் உரித்து இரண்டு பாதியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

    பின்னர் ஒரு மிக்சி ஜாரில் 2 டீஸ்பூன் மிளகு, 2 டீஸ்பூன் சீரகம், 2 டீஸ்பூன் சோம்பு, 2 சிறிய துண்டு இஞ்சி, 10 பற்கள் பூண்டு மற்றும் 14 சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

    அடுத்து மிக்சியில் இருக்கும் பொருட்களுடன் 2 டீஸ்பூன் மிளகாய்தூள், 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பில்லை, தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு மசாலா பதத்திற்கு அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

    பின்னர் நம் முன்னரே வேகவைத்து நறுக்கிவைத்துள்ள முட்டையின் மீது நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை தடவிக்கொள்ளுங்கள். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி நாம் மசாலா தடவி வைத்துள்ள முட்டையை அதனுடன் சேர்த்து முன்னும் பின்னும் பிரட்டி போட்டு நன்கு வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

    இப்பொழுது மிகவும் ருசியான கருவேப்பிலை முட்டை மசாலா தயார். நீங்களும் இந்த கறிவேப்பிலை முட்டை மசாலாவை உங்கள் வீட்டில் செய்து சுவைத்துப்பாருங்கள்.

    ×