என் மலர்
நீங்கள் தேடியது "வெள்ள பாதிப்பு மெட்ரோ"
- புயல் வெள்ள பாதிப்பால் மெட்ரோவுக்கு ரூ.210 கோடி அளவுக்கு சேதம் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- சென்னை மெட்ரோ நிறுவனம் சேத மதிப்பு கணக்கீடு செய்து தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
சென்னை:
மிச்சாங் புயல் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழு இரு தினங்களாக ஆய்வு செய்தது. மிச்சாங் புயல் பாதிப்பு குறித்த ஆய்வறிக்கை ஒரு வாரத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என மத்திய குழு அதிகாரி தெரிவித்தார்.
இதற்கிடையே, மிச்சாங் புயலால் பாதிப்பு அடைந்த மக்களுக்கு வெள்ள நிவாரணமாக 6,000 ரூபாய் அளிக்கப்படுகிறது. இதற்காக வியாழன், வெள்ளி, சனி ஆகிய 3 நாட்களில் டோக்கன் வினியோகம் செய்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை ரேஷன்கடைகளில் மக்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மிச்சாங் புயல் வெள்ள பாதிப்புகளால் மெட்ரோவுக்கு ரூ.210 கோடி அளவுக்கு சேதம் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்ட திட்டத்தில் ரூ.15 கோடியும், 2ம் கட்ட திட்டத்தில் ரூ.195 கோடியும் சேத மதிப்பாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ நிறுவனம் சேத மதிப்பு கணக்கீடு செய்து தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது.