search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்கழி மாதபிறப்பு"

    • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருச்செந்தூர்:

    மார்கழி மாதப்பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

    அதிகாலை 3.30 மணிக்கு விஸ்வ ரூபம், 4 மணிக்கு உதயமார் த்தாண்ட அபிஷேகம், 4.30 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை, 5.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 7.30 மணிக்குள் கால சந்தி தீபாராதனை, 7.30 மணிக்கு மேல் உச்சிக்கால அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் பல்வேறு இடங்களில் பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 5 மணிக்கு தங்கத்தேர் கிரிவீதி உலா, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், இரவு 7 மணிக்கு ராக்கால தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8-8.30 மணிக்குள் பள்ளியறை தீபாராதனை நடைபெற்று கோவில் நடை திருக்காப்பிடப்படும்.

    முக்கிய விழா நாட்களான வருகிற 27-ந் தேதி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கோவில் அதிகலை 2 மணிக்கும், ஜனவரி 1-ந் தேதி ஆங்கில புத்தாண்டு மற்றும் ஜனவரி 15-ந் தேதி (திங்கள்கிழமை) தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு கோவில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும்நடைபெறுகிறது.

    ×