என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுதலை 1"

    • நெதர்லாந்தில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது.
    • திரைப்பட விழாவில் மூன்று தமிழ் படங்கள் திரையிடப்படுகின்றன.

    ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25-ம் தேதி துவங்கி பிப்ரவரி 4-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. சர்வதேச அளவில் முக்கிய மற்றும் பிரபலமான திரைப்பட விழாவாக இது பார்க்கப்படுகிறது.


     

    இந்த நிலையில், ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் "லைம்லைட்" பிரிவில் திரையிட விடுதலை - 1, 2 மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்கள் தேர்வாகி உள்ளன. இதேபோன்று "பிக் ஸ்கிரீன்" பிரிவில் இயக்குனர் ராமின் "ஏழு கடல் ஏழு மலை" படம் திரையிட தேர்வாகி இருக்கிறது.


     

    சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரையுலகின் மூன்று படங்கள் தேர்வாகி இருப்பது ரசிகர்கள் இடையே பாராட்டை பெற்று வருகிறது.

    • சூரி நடிப்பில் உருவான திரைப்படம் ‘விடுதலை 1’ மற்றும் ‘விடுதலை 2’.
    • இப்படங்கள் நெதர்லாந்தில் திரையிடப்பட்டது.

    தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் பல முன்னணி திரைப்பிரபலங்கள் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சூரி முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


    இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சூரி நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் 'கொட்டுக்காளி', 'கருடன்', 'ஏழு கடல் ஏழு மலை' போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து நடிகர் சூரி நடிப்பில் உருவான 'விடுதலை 1', 'விடுதலை 2', 'ஏழு கடல் ஏழு மலை' போன்ற படங்கள் நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது.


    இதில், 'விடுதலை' முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமல்லாமல், பார்வையாளர்கள் ஐந்து நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டல் கொடுத்து படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இதனை ரெட் ஜெயன் மூவிஸ் நிறுவனம் தங்களது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளது.


    ×