என் மலர்
நீங்கள் தேடியது "டிடி3"
- வுண்டர்பார்பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
- என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்திருக்கும் நடிகை அனிக்கா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
நடிகர் தனுஷ் பா பாண்டி படத்தின் மூலம் 2017-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குனர் அவதாரம் எடுத்தார். தற்போது நடிகர் தனுஷ், தான் நடிக்கும் 50-வது படத்தை இயக்கி வருகிறார்.
தொடர்ந்து, தனுஷ் இயக்கும் மூன்றாவது படம் குறித்த தகவல் சர்ப்ரைசாக வெளியிடப்பட்டு இருக்கிறது. தனது வுண்டர்பார்பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில், இளம் பட்டாளமே களம் இறங்கியுள்ளது. என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்திருக்கும் நடிகை அனிக்கா, பிரியா வாரியர், பவிஷ், ரபியா, மேத்யூ, ரம்யா, வெங்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, DD3 குறித்த அப்டேட் 24.12.2023 (இன்று) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நடிகர் தனுஷ் இயக்கும் மூன்றாவது படத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தளத்தில், "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்" என்கிற தனது படத்தின் பெயரை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்," DD3- நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்.. ஒரு வழக்கமான காதல் கதை" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த பதிவுடன் DD3 போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டருக்கான லிங்க்கும் வெளியிடப்பட்டுள்ளது.
தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் அடுத்த ஆண்டு டிசம்பர் 21ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
- முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார்.
இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து இப்படத்தின் அடுத்த பாகம் உருவாகி வருகிறது.
முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கியுள்ளார். DD Next Level என்ற தலைப்பிடப்பட இடப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இப்படத்தில், இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை தி பீபுல் ஷோ மற்றும் நிஹரிகா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த ஜனவரி 21 ஆம் தேதி படக்குழு வெளியிட்டது.
அதில் படம் மே மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்ததை குறிக்கும் விதமாகப் படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.
சமீபத்தில் வெளியான மதகஜராஜா படத்தில் சந்தானம் காமெடியனாக வெகு காலத்திற்குப் பிறகு தோன்றியிருந்தது ரசிகர்களை நெகிழ வைத்தது.
எனவே டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் மூலம் சந்தானம் மீண்டும் காம்பேக் கொடுக்க வேண்டும் என்று பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.