search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேக் ரெசிப்பி"

    • சாக்லேட் என்று கூறினால் யாருக்கு தான் பிடிக்காது.
    • சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

    சாக்லேட் என்று கூறினால் யாருக்கு தான் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப் பொருள். இந்த சாக்லேட்டை வைத்து பல விதமான ஸ்வீட் வகைகளும், ஐஸ்கிரீம் வகைகளையும், கேக் வகைகளையும் நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். உங்க வீட்டில் இருக்கும் குட்டீஸ்களுக்கு இந்த ராகி சாக்லேட் கேக்கை செய்து கொடுத்து அசத்துங்கள். வாங்க எப்படி செய்யலாம்னு பாக்கலாம்...

    தேவையான பொருட்கள்:

    ராகி மாவு- ஒரு கப்

    கோ கோ பவுடர்- அரை கப்

    முட்டை- 2

    நாட்டுசர்க்கரை- ஒரு கப்

    பேக்கிங் சோடா- ஒரு ஸ்பூன்

    பேக்கிங் பவுடர்- கால் டீஸ்பூன்

    ஆயில்- ஒரு குழு கரண்டி

    வெனிலா எசன்ஸ்- ஒரு ஸ்பூன்

    செய்முறை:

    முதலில் ஒரு மிக்சி ஜாரில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்ற வேண்டு. பின்னர் அதில் ஆயில், கோ கோ பவுடர் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக அடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு அதே மிக்சி ஜாரில் ஜலித்து வைத்துள்ள ராகி மாவு, நாட்டு சர்க்கரை, பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர், தேவைப்பட்டால் சிறிதளவு பால் சேர்த்து மிக்சியில் அடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இதனை வெண்ணெய் தடவிய ஒரு கேக் மோல்டில் ஊற்றி ஓவன் அல்லது குக்கரில் வைத்து வேக வைத்து எடுத்தால் சுவையான, ஊட்டச்சத்து நிறைந்த ராகி சாக்லேட் கேக் தயார். கோடை விடுமுறையில் வீட்டில் இருக்கும் உங்க வீட்டு குட்டீஸ்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்க.

     

    • ரசமலாய் பலரும் விரும்பி சாப்பிடும் ரெசிபியாக உள்ளது.
    • தித்திக்கும் சுவையுடன் கேக்

    பாலில் தயாராகும் இனிப்பு பலகாரங்களில் ரசமலாய் பலரும் விரும்பி சாப்பிடும் ரெசிபியாக உள்ளது. அதன் தித்திப்பை மேலும் மெருகேற்றி சுவைத்து சாப்பிடுவதற்கு, சுவையான ரசமலாய் கேக். விழா நாள்களிலும், பூஜை நாள்களிலும் ஒரே மாதிரியான ஸ்வீட் பலகாரங்கள் சாப்பிட்டு சோர்வடைந்து விட்டீர்களா. இதேபோல் உங்களுக்கான மாறுபட்ட ரெசிபியான தித்திக்கும் சுவையுடன் கூடிய ரசமலாய் கேக் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பால்- 1 லிட்டர்

    கண்டன்ஸ்டு மில்க்- 250 கிராம்

    சர்க்கரை- 300 கிராம்

    குங்குமப்பூ- தேவையான அளவு

    கிரீம்- தேவையான அளவு

    பாதாம், பிஸ்தா- அலங்கரிக்க

    பேக்கிங் பவுடர்- ஒரு ஸ்பூன்

    பேக்கிங் சோடா- கால் டீஸ்பூன்

    எண்ணெய்- ஒரு மூடி

    வினிகர்- ஒரு ஸ்பூன்

    ஏலக்காய் தூள்- ஒரு சிட்டிகை

    ரோஸ் வாட்டர்- ஒரு ஸ்பூன்

    டோண்டு மில்க்- 200 மில்லி

    செய்முறை:

    முதலில் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பானை பாலை ஊற்ற வேண்டும். அதில் குங்குமப்பூ சேர்த்து சிறிது நேரம் மூடி வைத்தால் அது மஞ்சள் நிறமாக மாறி இருக்கும். பின்னர் அதில் வினிகர், ரோஸ் வாட்டர், எண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

    அதன்பிறகு அதில் கோதுமை மாவு அல்லது மைதா மாவு ஆகியவற்றை சலித்து சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் ஏலக்காய் தூள், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா கலந்து கட்டி இல்லாமல் கேக் மாவு பதத்திற்கு கலந்து அதனை கேக் பவுலில் உள்ளே வெண்ணெய் தடவி அதில் ஊற்றிக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு அடி கனமான பாத்திரத்தை வைத்து உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்து 15 நிமிடத்துக்கு ஃப்ரிஹீட் செய்ய வேண்டும். அதன்பிறகு கேக் கலவையை உள்ளே வைத்து 45 நிமிடங்களுக்கு மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.

    அதன்பிறகு கேக்கை வெளியே எடுக்க வேண்டும். இப்போது ஒரு பவுலில் பால் மற்றும் கண்டன்ஸ்டு மில்க், கொழுப்பு நீக்கப்படாத பால், குங்குமப்பூ சேர்த்து நனறாக கலந்துகொள்ள வேண்டும்.

    இப்போது வேகவைத்த கேக்கை எடுத்து ஒரு பிளேட்டில் வைத்து அதில் பல் குத்தும் குச்சை வைத்து கேக்கின் மேல் குத்திவிட வேண்டும். பின்னர் நாம் ஏற்கனவே கலந்துவைத்துள்ள பாலை மேலே ஊற்ற வேண்டும். அதன்பிறகு கேக்கின் மீது கிரீம் தடவி பாதாம், பிஸ்தா கலவையை மேலே தூவி அலங்கரித்து எடுத்தால் தித்திப்பான ரசமலாய் கேக் தயார்.

    • ஒடிசாவின் பாரம்பரிய இனிப்பு வகை.
    • `சேனா போடா' என்றால் எரிக்கப்பட்ட சீஸ் என அர்த்தம்.

    இந்தியாவின் கிழக்கில் அமைந்திருக்கும் ஒடிசா மாநிலத்தில் உள்ள பிரபலமான உணவுகளில், `சேனா போடா' எனப்படும் ஒருவகை இனிப்பு தனித்துவமான சுவை கொண்டதாகும். `சேனா போடா' என்றால் எரிக்கப்பட்ட சீஸ் என அர்த்தம். இது ஒடிசாவின் பாரம்பரிய இனிப்பு வகை. இந்த அற்புதமான சுவை நிறைந்த இனிப்பை நாம் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

    தேவையான பொருட்கள்:

    பனீர்-கால் கிலோ

    சர்க்கரை- 1 கப்

    ரவை- 2 ஸ்பூன்

    நெய்- 2 ஸ்பூன்

    ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்

    முந்திரி, பாதாம், பிஸ்தா நட்ஸ்- 2 ஸ்பூன்

    திராட்சை- 1 ஸ்பூன்

    செய்முறை:

    முதலில் பன்னீரை எடுத்து கைகளாலேயே நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் அதிலேயே ரவை சேர்த்து கலக்கி 15 நிமிடங்கள் அப்படியே ஊற விட வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, நெய் சேர்த்து ஒன்றாகக் கலந்து, பன்னீர் மற்றும் ரவை கலவையை அதில் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் அதில் கொஞ்சம் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாகப் பிசைந்தால், நல்ல கிரீமி பதத்திற்கு மாறிவிடும். அதை அப்படியே நன்றாக சில நிமிடங்கள் பிசைந்து கொண்டே இருங்கள்.

    அடுத்ததாக பிசைந்து வைத்துள்ள கலவையில், காய்ந்த திராட்சை மற்றும் நட்ஸ்களைப் போட்டு கலக்கி விடவும். இவை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் தவிர்த்து விடலாம். அனைத்தும் ஒன்றாகக் கலக்கப்பட்ட மாவை ஒரு பாத்திரத்தில் நெய் தடவி அப்படியே சமமாகப் பரப்பி விடுங்கள்.

    இதை தயாரிப்பதற்கு உங்கள் வீட்டில் மைக்ரோவேவ் ஓவன் இருந்தால் எளிதாக இருக்கும். இல்லை அடுப்புதான் பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால், முன்கூட்டியே ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கி, மாவு ஊற்றி வைத்துள்ள பாத்திரத்தை உள்ளே வைத்து சுமார் 30 முதல் 45 நிமிடங்கள் மிதமான சூட்டில் வேக விடுங்கள்.

    பத்து நிமிடத்திற்கு ஒருமுறை திறந்து பார்த்துக் கொண்டே இருங்கள். மேல் பகுதி பொன் நிறமாக மாறியதும் நடுவில் ஏதேனும் குச்சியை வைத்து உள்ளே வெந்துவிட்டதா என குத்திப் பாருங்கள்.

    எல்லாம் சரியாக வெந்ததும் வெளியே எடுத்து, அந்த பாத்திரத்தில் இருந்து சேனா போடாவை வெளியே அகற்றி, அப்படியே சூடாக வெட்டி சாப்பிட்டால் சுவை வேற லெவலில் இருக்கும். இதனுடன் ஒரு ஸ்கூப் வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து சாப்பிட்டால், நீங்கள் சொர்க்கத்திற்கே சென்றது போல உணர்வீர்கள். நிச்சயம் இந்த உணவை ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள்.

    • பழங்கால பழமையான பானின் சுவையை கேக்கில் இணைக்கப்போகிறோம்.
    • குல்கந்த் இல்லாமல் பான் முழுமையடையாது.

    இன்றைய பான் கேக் ரெசிபியில், பழங்கால பழமையான பானின் சுவையை கேக்கில் இணைக்கப்போகிறோம். பான் ஒரு பிரபலமான வாய் ப்ரெஷ்னர். கேக்கில் உள்ள இந்த தனித்துவமான சுவை மிகவும் அருமை. குல்கந்து இல்லாமல் பான் முழுமையடையாது. குல்கந்து என்பது ரோஜா இதழ்களின் இனிப்பு. எனவே நமது இன்றைய கேக் வெறும் பான் கேக்காக மட்டும் இருக்கப் போவதில்லை, மாறாக அது பான் குல்கந்த் கேக்காக இருக்க போகிறது. வாங்க எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

    தேவைப்படும் பொருட்கள்:

    மைதா மாவு - 175 கிராம்

    பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்

    பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்

    பால்- 50 கிராம்

    இளம் வெற்றிலைகள்- 5

    வினிகர் - 2 டீஸ்பூன்

    சமையல் எண்ணெய் - 75 மி.லி.

    பொடித்த சர்க்கரை- 150 கிராம்

    பச்சை நிறம் - 2 துளிகள்

    கிர்ணி பழ விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்

    வெற்றிலை எசன்ஸ் - 2 துளிகள்

    குல்கந்து - 1 டேபிள் ஸ்பூன்

    பொடித்த பிஸ்தா பகுப்பு - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    வெற்றிலைகளை 40 மி.லி. தண்ணீர் ஊற்றி அரைத்து, வடிகட்டி சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். ஓவனை 350 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் சூடுபடுத்த வேண்டும்.

     அகலமான கிண்ணத்தில் மைதா மாவு, பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிக் சோடா சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பாலையும், வினிகரையும் ஒன்றாகக் கலந்து 10 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும். இப்போது பால் திரிந்து இருக்கும்.

     மற்றொரு கிண்ணத்தில் எண்ணெய் மற்றும் பொடித்த சர்க்கரையை கொட்டி நன்றாக அடித்து கலக்க வேண்டும். அதனுடன் மைதா மாவு கலவை. பால்- வினிகர் கலவையை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

     பின்னர் அதில் வெற்றிலை சாறு, வெற்றிலை எசன்ஸ், பச்சை நிறம் மற்றும் குல்கந்து, கிர்ணி பழ விதைகள் மற்றும் பொடித்த பிஸ்தா ஆகியவற்றை போட்டு மீண்டும் நன்றாக கலக்க வேண்டும்.

     இந்த கலவையை கேக் தயாரிக்கும் டிரேயில் ஊற்றி. 40 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும். இறுதியா கிர்ணி பழ விதைகள் மற்றும் பிஸ்தா பருப்புகள் கொண்டு கேக்கை அலங்கரித்து பரிமாறலாம்.

    • கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கேக் தான் பிரதான இனிப்பு.
    • கேக் வகைகளில் லவங்கப்பட்டை கேக் வித்தியாசமானது.

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கேக் தான் பிரதான இனிப்பு. ஒரு சுவையான மற்றும் எளிதான செய்ய கூடிய கிறிஸ்துமஸ் கேக். சிறுவர்களுக்கும் மற்றும் பெரியோர்களுக்கும் பிடிக்க கூடிய ஒரு கேக் இது. கேக் வகைகளில் லவங்கப்பட்டை கேக் வித்தியாசமானது.

    தேவைப்படும் பொருட்கள்:

    மைதா மாவு - 2 கப்

    பேக்கிங் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்

    லவங்கப்பட்டை தூள் - 1 டேபிள் ஸ்பூன்

    சர்க்கரை - 1 கப்

    வெண்ணெய் - 1 கப்

    வெனிலா எசன்ஸ் - 2 டீஸ்பூன்

    முட்டை - 3

    பால் - 5 கப்

    உப்பு - கால் டீஸ்பூன்

    சிரப் தயாரிக்க:

    லவங்கப்பட்டை தூள் - கால் டீஸ்பூன்

    வெண்ணெய் 6 டேபிள் ஸ்பூன்

    சர்க்கரை - ஒரு கப்

    வெனிலா எசன்ஸ்- 1 டீஸ்பூன்

    தண்ணீர் - 4 கப்

    செய்முறை:

    ஓவனை 350 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் ஃப்ரிஹீட் செய்ய வேண்டும். அகலமான கிண்ணத்தில் லவங்கப்பட்டை தூள், மைதா மாவு, பேக்கிங் பவுடர், உப்பு இவற்றை கொட்டி சலித்துக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த கலவையில் பாலை ஊற்றி நன்றாக கட்டி இல்லாமல் அடித்து கலக்க வேண்டும். மற்றொரு பெரிய கிண்ணத்தில் சர்க்கரை, வெண்ணெய், வெனிலா எசன்ஸ் ஆகியவற்றை போட்டு மென்மையான கிரீம் போல அடித்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி மீண்டும் நன்றாக அடித்துக்கொள்ளவு வேண்டும். இப்போது இரண்டு கலவைகளையும் ஒன்றாக சேர்த்து அடித்து கலக்கவும். பின்னர் அதை டிரேயில் ஊற்றி 40 நிமிடங்கள் வேகவைத்து எடுக்க வேண்டும். வெந் ததும் ஓவனில் இருந்து வெளியே எடுத்து ஆறவைக்க வேண்டும்.

    அடிகனமான சிறிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் லவங்கப்பட்டை தூள், வெண்ணெய், சர்க்கரை, வெனிலா எசன்ஸ், தண்ணீர் ஆகியவற்றை போட்டு மிதமான தீயில் சூடுபடுத்தவும். சர்க்கரை முழுவதுமாக கரைந்து கலவை கெட்டியாகத் தொடங்கும்போது அடுப்பில் இருந்து இறக்கி இந்த சிரப்பை கேக்கின் மீது ஊற்ற வேண்டும். இப்போது சுவையான லவங்கப்பட்டை கேக் தயார்.

    ×