என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கேழ்வரகு ரெசிப்பிகள்"
- உடல் எடையை குறைக்க உதவும் குதிரைவாலி ராகி களி.
- உடலுக்கு தேவையான புரதச்சத்து, நார்ச்சத்தை கொண்டுள்ளது.
அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது கம்பு, சோளம், வரகு, சாமை, திணை, குதிரைவாலி, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் நம் உடலுக்கு தேவையான புரதச்சத்து மற்றும் நார்ச்சத்தை அதிகம் கொண்டுள்ளது. இதனை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்தக் கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
குதிரைவாலி அரிசி- ஒரு கப்
கேழ்வரகு மாவு- ஒன்றரை கப்
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
முதலில் குதிரைவாலி அரிசியை 3 முறை நன்றாக கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை அரைமணிநேரம் மூடி போட்டு ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு பங்கிற்கு 3 மக்டங்கு தண்ணீர்விட்டு வேக வைத்துக்கொள்ள வேண்டும். அரைப் பதத்திற்கு அரிசி வெந்தவுடன் கேழ்வரகு மாவைச் சேர்த்து கெட்டி இல்லாமல் மிதமான தீயில் வைத்து கிளற வேண்டும். பருப்பு மத்து கொண்டு நன்றாக கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
அவ்வாறு கிளறும்போது ஒட்டாமல் நன்றாக வெந்துவரும் அப்போது தண்ணீரில் கையை நனைத்துவிட்டு, களியை தொட்டுப்பார்த்தால், அது கையில் ஒட்டாமல், அல்வா பதத்தில் இருக்கவேண்டும். குதிரைவாலி ராகி களி தயார்.
இந்த களியை கீரைக்குழம்பு, மீன்குழம்பு, கறிக்குழம்பு, கருவாட்டுக்குழம்பு ஆகியவை வைத்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும். ஆனால் உடல் எடை குறைக்கும் முயற்சியை மேற்கொள்பவர்கள் இதனை மோரில் சின்னவெங்காயம் சேர்த்து இந்த களியையும் கரைத்து காலை வேளைகளில் குடிக்கலாம். கீரை வகைகளை சைட் டிஷ்சாக வைத்து மதிய சாப்பாடாகவும் சாப்பிடலாம்.
பலன்கள்
கால்சியம் இருப்பதால் எலும்புகளுக்கு வலு சேர்க்கும். இரும்புச்சத்து இருப்பதால் ரத்த உற்பத்திக்கு உதவும். கொழுப்பைக் குறைக்கும். குதிரைவாலியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்னை வராமல் தடுக்கும். கேழ்வரகு உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தந்து வலுவைச் சேர்க்கும். எடை குறைக்க நினைப்பவர்கள் தினமும் சாப்பிடலாம். பெண்கள், இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்ல உணவு.
- முன்னோர்கள் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருந்தது அவர்களின் உணவு முறை.
- கேழ்வரகில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
நம் முன்னோர்கள் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவியாக இருந்தது அவர்களின் உணவு முறை. அவற்றில் ஒன்றான கேழ்வரகின் நன்மைகள் மற்றும் அவற்றில் செய்யப்படும் ரெசிப்பிகள் எல்லோருக்கும் பிடிக்கும். கேழ்வரகில் புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் பி3 போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த அருமையான ராகி மாவை வைத்து ஒரு சுவையான வால்நட் ராகி சாக்லேட் கேக் செய்யலாம் வாங்க...
தேவையான பொருட்கள்:
ராகி மாவு- 3/4 கப்
கோதுமை மாவு- 3/4 கப்
கோகோ பவுடர்- 1/4 கப்
உப்பு- தேவையான அளவு
பேக்கிங் பவுடர்- ஒரு ஸ்பூன்
பேக்கிங் சோடா- ஒரு டீஸ்பூன்
நாட்டுசர்க்கரை- ஒரு கப்
காபி தூள்- ஒரு ஸ்பூன்
எண்ணெய்- 3 ஸ்பூன்
வினிகர்- ஒரு ஸ்பூன்
வெனிலா எசன்ஸ்- ஒரு டீஸ்பூன்
டார்க் சாக்கலேட்- 200 கிராம் (துருவியது)
கிரீம்- 150 மி.மி
வால்நட்- 1/2 கப் (நறுக்கியது)
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ராகி மாவு, கோகோ பவுடர் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு ஆகியவற்றை சலித்து எடுத்து கலந்துகொள்ள வேண்டும். மற்றொரு கிண்ணத்தில் நாட்டுசர்க்கரை, காபி தூள், வினிகர் மற்றும் வெதுவெதுப்பான தண்ணீரினை ஊற்றி நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் எண்ணெய், தயிர், வெனிலா எசன்ஸ் ஆகியவற்றையும் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.
இந்த கலவையை மாவு வைத்திருக்கும் பவுலில் சிறிது சிறிதாக ஊற்றி கட்டி இல்லாமல் நன்றாக கலக்க வேண்டும். அதனுடன் வால்நட், , டார்க் சாக்லேட் கலந்து ஒரு கேக் டிரேயில் பட்டர் பேப்பர் வைத்து அதில் கேக் கலவையை ஊற்றி வைக்க வேண்டும்.
ஏற்கனவே குக்கரில் ஒரு ஸ்டாண்ட் வைத்து அதனை 10 நிமிடத்திற்கு ஃப்ரிஹீட் செய்து அதனுள் கேக் டிரே வைத்து 45 நிமிடத்திற்கு மூடி போட்டு வேக வைக்க வேண்டும். பின்னர் திறந்து பார்த்து குச்சியை அதனுள் அழுத்தி எடுத்தால் அதில் ஒட்டாமல் வர வேண்டும். பின்னர் வெளியே எடுத்து பார்த்தால் சுவையான வால்நட் ராகி சாக்லேட் கேக் தயார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்