என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஷாம்பு"
- தேங்காய் எண்ணெயை ஷாம்பூவில் கலந்தும் பயன்படுத்தலாம்.
- உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
முடியை வலுப்படுத்த நாம் பல வகையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். இதில் முடி பராமரிப்பு நடைமுறை மிகவும் முக்கியமானது. கூந்தலை ஆரோக்கியமாக வைக்க தலைமுடிக்கு எண்ணெய் பயன்படுத்த வேண்டும் என்று மக்கள் நம்புகின்றனர்.
அதேபோல, ஷாம்பு போடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு எண்ணெய் தடவுவது அதிக நன்மை பயக்கும் என நம்பிக்கை உள்ளது. இதனால் கூந்தல் வலுவடைந்து, பளபளப்பை அதிகரிப்பதுடன், கூந்தலை மிருதுவாகவும் மாற்றுகிறது. இன்னும் சிலர், கூந்தல் பராமரிப்புக்காக ஷாம்பூவில் ஹேர் ஆயில் கலந்து முடிக்கு பயன்படுத்துவார்கள்.
ஹேர் ஆயிலை ஷாம்பூவுடன் கலந்து தடவுவதால் உண்மையில் ஏதாவது பலன் இருக்கிறதா என்ற கேள்வி பலருக்கும் எழும்.
ஷாம்பூவில் ஹேர் ஆயில் கலப்பது புதிதல்ல. இந்த செயல்முறை நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது. உண்மை என்னவென்றால், பலர் இது முடிக்கு நன்மை பயக்கும் என்று கருதுகின்றனர். இதை உறுதிப்படுத்த நிபுணர்களிடம் பேசினோம். ஷாம்புவில் கேரியர் ஆயில் அல்லது ஏதேனும் ஹேர் ஆயில் கலந்து தடவலாம் என்கிறார்கள். இது முடிக்கு மிகவும் நன்மை பயக்கும்.
தலை முடி உதிர்வதை நிறுத்துவதோடு, முடியை வலுவாக்கும். ஷாம்பூவில் ஹேர் ஆயில் கலந்து தடவினால், முடி உதிர்தல் பிரச்சனையை தீர்க்கலாம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
இருப்பினும், நீங்கள் எந்த வகையான ஷாம்பூவைப் பயன்படுத்துகிறீர்கள், எந்த அளவில் பயன்படுத்துகிறீர்கள் என்பதும் முக்கியம்.
இதுதவிர, நிரப்பப்பட்ட ஷாம்பு பாட்டிலில் ஹேர் ஆயிலைக் கலந்து குளிப்பதற்கு சிறிது நேரம் முன் தடவுவது நல்லது. இது உங்களுக்கு சேரவில்லை என்றால், மீண்டும் முயற்சிக்க வேண்டாம்.
நன்மைகள்:
பல முறை, சரியான அளவு எண்ணெய் மற்றும் ஷாம்பூவை கலந்து தடவுவது உச்சந்தலையில் இருந்து அரிப்புகளை அகற்ற உதவுகிறது. குறிப்பாக, ரோஸ்மேரி எண்ணெயை ஷாம்பூவில் தடவினால், இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
இருப்பினும், உங்கள் உச்சந்தலையில் அரிப்புக்கான காரணத்தை அறிந்து கொள்வது அவசியம். தூசி, மாசு போன்றவற்றால் அரிப்பு ஏற்பட்டால், இந்த ஷாம்பூவில் ரோஸ்மேரி எண்ணெயை கலந்து உபயோகிப்பது நன்மை பயக்கும்.
தேங்காய் எண்ணெயை ஷாம்பூவில் கலந்தும் பயன்படுத்தலாம். இவற்றில் ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இது உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
மாறிவரும் வானிலை மற்றும் மாசுபாட்டின் காரணமாக, முடி உலர்ந்து உயிரற்றதாகிறது. இதன் காரணமாக முடியின் ஊட்டச்சத்தும் முடிவடைகிறது. அதேசமயம் ஷாம்பு கலந்த எண்ணெயை கூந்தலில் தொடர்ந்து தடவி வந்தால், முடிக்கு ஊட்டமளிக்கிறது.
- அழகிய கூந்தலை விரும்பாத பெண்கள் யாரும் இல்லை.
- மசாஜ் செய்வது தலைப்பகுதிக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
நீளமான அழகிய கூந்தலை விரும்பாத பெண்கள் யாரும் இல்லை. இதை எப்படி எளிதில் பெறுவது என்று சொல்கிறோம்.
மசாஜ்
உங்கள் கூந்தலை எண்ணெய் மசாஜ் செய்வது தலைப்பகுதிக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இது தேவையான ஊட்டச்சத்தை கொண்டு சேர்க்க உதவும்.
அவ்வபோது ட்ரிம் செய்யவும்
நீங்கள் சலூனுக்கு செல்வதை விரும்பவில்லை என்பது எங்களுக்கு தெரியும். ஏனெனில் உங்கள் கூந்தலின் நீளம் குறைந்துவிடும் என்ற பயம்தானே! ஆனால், உண்மையில் உங்கள் கூந்தல் வேகமாக வளரவேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு ஒரு முறை கூந்தலை ட்ரிம் செய்வது அவசியம். இது உங்களை பிளவு பெற்ற கூந்தலில் இருந்து விடுவிக்கும்.
சப்ளிமென்ட்
சரியான விட்டமின்களை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். கடைகளில் கிடைக்கும் விட்டமின் மாத்திரைகளில் ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ் மற்றும் விட்டமின் பி அதிக அளவில் இருக்கும். இது கூந்தலின் ஆரோக்கியத்திற்கு அவசியம். பயோடின் போன்றசப்ளிமென்ட்களும் கூந்தலை ஆரோக்கியமாக்கும்.
ஷாம்பு
நல்ல ஷாம்பூ நல்ல கூந்தலை கொடுக்கும். ஷாம்பூ கூந்தலை நன்றாக கிளென்ஸ் செய்து தூசிகளில் இருந்து காத்து கூந்தலுக்கு ஆரோக்கியம் அளிக்கிறது.
குளிர்ந்த நீரில் கூந்தலை அலசவும்
இந்த எளிமையான டிப் உங்கள் கூந்தலுக்கு பல வித்தியாசங்களை ஏற்படுத்தும். உங்கள் கூந்தலை ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் கொண்டு சுத்தம் செய்ததும் குளிந்த நீரால் கூந்தலை அலசவும். இது உங்கள் கூந்தலில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவும். சூடான நீரில் தலைக்குளிப்பதை தவிர்க்கவும்.
ஹீட் ஸ்டலிங் செய்வதை குறைத்திடுங்கள்
ஸ்ட்ரெயிட்னர் மற்றும் கர்லர் போன்ற சாதனங்களை அடிக்கடி பயன்படுத்துவதை குறைத்திடுங்கள். இது உங்கள் கூந்தலை எளிதில் உடையச் செய்யும். சரியான ஹீட் புரொடெக்டிவ் கிரீம், ஸ்பிரேக்களை பயன்படுத்திய பிறகே இந்த சாதனங்களை கூந்தலில் பயன்படுத்தவேண்டும்.
- முடி ஈரப்பதத்தை இழக்காமல் இருக்க, ஆப்பிள் சீடர் வினிகர் பெஸ்ட் சாய்ஸ்.
- வாரம் ஒருமுறை ஓர் அவகாடோ போட்டு அப்ளை செய்யவும்.
இயற்கையிலேயே மென்மையான கேசம் கொண்ட பெண்களுக்குக்கூட, பனிக்காலத்தில் கேசத்தின் ஈரத்தன்மை போய், வறண்ட சருமமாக மாறிவிடும். இதில் இருந்து தற்காத்துக் கொண்டு, உங்கள் முடியைப் பட்டுப்போல மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றசில டிப்ஸ்…
* முடி தன் இயற்கையான ஈரப்பதத்தை இழக்காமல் பாதுகாக்க, ஆப்பிள் சீடர் வினிகர் பெஸ்ட் சாய்ஸ். இது, அனைத்து சூப்பர் மார்க்கெட் மற்றும் காஸ்மெடிக் கடைகளில் கிடைக்கும். இதனுடன் சம அளவு தண்ணீர் கலந்து… தலைக்கு குளித்து முடித்ததும் கடைசியாக இதனை தலையில் விட்டு அலசவும். வறண்டு டல்லாக இருக்கும் முடிக்குப் புத்துயிர் கொடுக்கும்.
* வாரம் ஒருமுறை ஓர் அவகாடோ பழத்தின் சதைப்பகுதியுடன், முடியின் அளவைப் பொறுத்து ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் தயிர் கலந்து முடிக்கு பேக் போல அப்ளை செய்யவும். அரை மணி நேரத்துக்குப் பின் தரமான ஷாம்புவால் முடியை அலசவும். இது சிறந்த கண்டிஷனர்.
* ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து, அதனுள் ஒரு சிறிய கிண்ணத்தில் 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்ப்பால் ஊற்றி சூடுபடுத்தவும். வெதுவெதுப்பான சூட்டில் இந்தப் பாலை தலையில் தடவி, வெந்நீரில் பிழிந்தெடுத்த டவலினால் தலையைக் கட்டி, இருபது நிமிடங்கள் கழித்து அலசலாம்.
* கால் கப் பாதாம் எண்ணெயுடன், ஒரு முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்துக் கலந்து பேஸ்ட் செய்து, தலையிலும் முடியிலும் அப்ளை செய்து 40 நிமிடங்கள் ஊறவைத்து அலசவும். இது கேசத்தை நன்றாகக் க்ளீன் செய்வதுடன், ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.
* சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கக்கூடிய பிளெய்ன் மயோனைஸ் (சில்லி, சாக்லேட் போன்ற ஃப்ளேவர்கள் தவிர்க்கவும்) வாங்கி, இரண்டு ஸ்பூன் மயோனைஸுடன் ஒரு ஸ்பூன் ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெயைக் கலந்து, தலையில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து அலசினால், முடியானது மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். முட்டையின் வெள்ளைக் கருவில் ஒரு ஸ்பூன் வினிகர் சேர்த்து நன்றாக அடித்துக் கலக்கினால், ஹோம் மேட் மயோனைஸ் ரெடி.
- பல்வேறு விதமான அழகு சாதன பொருட்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.
- சில பொருட்கள் எல்லாவகையான சருமத்திற்கும் ஒத்துக்கொள்ளாது.
காலாவதி சன்ஸ்கிரீன்:
சரும அழகை மேம்படுத்துவதற்கு பல்வேறு விதமான அழகு சாதன பொருட்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. ஒரு சில பொருட்கள் எல்லாவகையான சருமத்திற்கும் ஒத்துக்கொள்ளாது. அப்படி இருக்க சிலர் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் சிலவற்றை சருமத்திற்கு பயன்படுத்துவார்கள். அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அவற்றை ஏன் தவிர்க்க வேண்டும் என்பது பற்றியும் பார்ப்போம்.
கோடை காலத்தில் மட்டுமே சன்ஸ்கிரீன் பயன்படுத்துபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். வெயிலின் உக்கிரம் குறையத்தொடங்கியதும் அதனை பயன்படுத்துவதை நிறுத்திவிடுவார்கள். அடுத்த ஆண்டு கோடை காலத்திற்கு பயன்படுத்துவதற்காக பாதுகாத்து வைப்பார்கள். அப்படி சேமித்து வைக்கும்போது காலாவதி தேதியை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அதனை கவனிக்காமல் காலாவதியான சன்ஸ்கிரீனை மீண்டும் பயன்படுத்தினால் சரும ஒவ்வாமை பிரச்சினை ஏற்படும்.
பற்பசை:
சிலர் முகத்தில் ஏற்படும் முகப்பரு, கரும்புள்ளிகளை போக்குவதற்கு பல் துலக்க பயன்படும் பற்பசையை பயன்படுத்துவார்கள். அதனை சருமத்தில் உபயோகிப்பது சிலருக்கு சரும ஒவ்வாமை பிரச்சினையை உண்டாக்கும். மெலனின் உற்பத்தி அதிகமாகி சருமத்தில் நிறமாற்றமோ அல்லது கரும்புள்ளிகளோ உருவாகலாம். சரும எரிச்சல் பிரச்சினைகளையும் உண்டாக்கலாம். முகப்பருக்கள் மீது பற்பசை பூசினால் விரைவில் பருக்கள் மறைந்துவிடும் என்று சிலர் பரிந்துரைப்பதிலும் உண்மை இல்லை.
எலுமிச்சை:
எலுமிச்சை பழத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட சரும பராமரிப்பு பொருட்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அதில் உள்ளடங்கி இருக்கும் சிட்ரிக் அமிலத்தின் அளவை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் அதிக அளவு சிட்ரிக் அமிலம் கலந்திருந்தால் அது சிலருடைய சருமத்திற்கு ஒத்துக்கொள்ளாது. சருமத்தை சேதப்படுத்திவிடக்கூடும். சரும எரிச்சல், சரும வெடிப்பு போன்ற பாதிப்புகளையும் எதிர்கொள்ள நேரிடும். எலுமிச்சை சாறை நேரடியாக சருமத்தில் தடவுவதும் நல்லதல்ல.
தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு பொலிவு சேர்க்கும் என்ற கருத்து நிலவுகிறது. அதேவேளையில் முகத்திற்கு தேங்காய் எண்ணெய் உபயோகிப்பது கூடாது. உடலின் மற்ற பாகங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம். ஏனென்றால் தேங்காய் எண்ணெய்யில் உள்ளடங்கி இருக்கும் லாரிக் அமிலம் நிறைவுற்ற கொழுப்பாகும். அது சரும துளைகளை அடைத்து விடும். அதிலும் எண்ணெய் சருமம் கொண்டவர்கள் தேங்காய் எண்ணெய்யை உபயோகிக்கவே கூடாது. சரும துளைகளை அடைப்பதோடு முகப்பரு பிரச்சினையையும் ஏற்படுத்திவிடும்.
ஷாம்பு:
கூந்தலுக்கு மட்டுமே ஷாம்புவை பயன்படுத்த வேண்டும். அது கூந்தலில் படிந்திருக்கும் அழுக்கு, எண்ணெய் பிசு பிசுப்பு போன்றவற்றை போக்க உதவும். அதற்காக ஷாம்புவை கொண்டு முகத்தை சுத்தம் செய்வது கூடாது. ஏனெனில் ஷாம்பு கூந்தலை சுத்தம் செய்வதற்காகவே தயாரிக்கப்படுபவை. அவை மென்மைத் தன்மையுடைய சரும செல்களை கையாள்வதற்கு ஏற்றவையல்ல. ஷாம்புவை கொண்டு முகத்தை கழுவினால் சருமம் உலர்வடைந்துவிடும்.
- பலவிதமான பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.
- வீட்டிலேயே ஹேர் கன்டிஷர் செய்யலாம்.
அனைவருமே கூந்தலை பராமரிக்க பல வழிகளை மேற்கொண்டு வருகிறோம். கூந்தல் மென்மையாகவும் நீளமாகவும் இருப்பதற்கு கடைகளில் கிடைக்கும் பலவிதமான பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இவை அனைத்தும் நம் தலைமுடிக்கு நிரந்தரமானவை அல்ல என்பது நம்மில் பலபேருக்கு தெரிவதில்லை. எனவே எந்தவொரு பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு அளிப்பது இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்கள் மட்டுமே. எனவே, அந்த வகையில் இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி வீட்டிலேயே ஹேர் கன்டிஷர் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
ஆலிவ் எண்ணெய்- 2 ஸ்பூன்
கற்றாழை ஜெல்- 3 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்கள் முடியின் அளவிற்கு ஏற்ற அளவில் கற்றாழை ஜெல் மற்றும் ஆலிவ் எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது இவற்றை நன்றாக கலந்து கொண்டு, முடியின் வேர்க்கால்களில் இருந்து முடியின் நுனிபகுதி வரை நன்றாக அப்ளை செய்ய வேண்டும்.
அதன்பிறகு, ஒரு துண்டினை மிதமான வெந்நீரில் நனைத்து தலைமுடியில் 30 நிமிடங்கள் வரை கட்டிவிட வேண்டும். பின்னர் இறுதியாக, தலைமுடியை எப்போதும் போல் ஷாம்பு போட்டு சுத்தம் செய்து விட வேண்டும்.
முக்கிய குறிப்புகள்:
* எண்ணெய் பசையுள்ள தலைமுடியில் இந்த ஹேர் கண்டிஷரை பயன்படுத்த கூடாது.
* உலர்ந்த தலைமுடியில் பயன்படுத்தக் கூடாது. ஈரமாக உள்ள தலைமுடியில் மட்டுமே அப்ளை செய்ய வேண்டும்.
* கண்டிஷரை தயாரித்தவுடனே பயன்படுத்த வேண்டும். நீண்ட நேரம் வைத்து விட்டு பிறகு பயன்படுத்த கூடாது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்