search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேகா ஆகாஷ்"

    • திருநாவுக்கரசரின் 2-வது மகனான சாய் விஷ்ணுவுடன் நடிகை மேகா ஆகாஷ்க்கு திருமணம் நடைபெற்றது.
    • தனுஷுடன் 'என்னை நோக்கி பாயும் தோட்டா', சிம்புவுடன் 'வந்தா ராஜாவா தான் வருவேன்' என்ற படத்தில் நாயகியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'பேட்ட' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மேகா ஆகாஷ் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, தனுஷுடன் 'என்னை நோக்கி பாயும் தோட்டா', சிம்புவுடன் 'வந்தா ராஜாவா தான் வருவேன்' என்ற படத்தில் நடித்து பிரபலமானார்.

    கடைசியாக இவரது நடிப்பில், 'சபாநாயகன், வடக்குப்பட்டி ராமசாமி, மழை பிடிக்காத மனிதன்' உள்ளிட்ட படங்கள் வெளியாகி வெற்றிப்பெற்றது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி திருநாவுக்கரசரின் 2-வது மகனான சாய் விஷ்ணுவுடன் நடிகை மெகா ஆகாஷ்க்கு திருமணம் நடைபெற்றது.

    சென்னையில் நடைபெற்ற சாய் விஷ்ணு - மேகா ஆகாஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் திமுகவின் பல அமைச்சர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'பேட்ட' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக்கினார் மேகா ஆகாஷ்
    • கடந்த 22-ந் தேதி சாய் விஷ்ணு என்பவருடன் மேகா ஆகாஷுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.

    2017 ஆம் ஆண்டு `லை' என்ற தெலுங்கு படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமாகினார் நடிகை மேகா ஆகாஷ்.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'பேட்ட' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மனதில் பதிந்தார். அதனைத்தொடர்ந்து, தனுஷுடன் 'என்னை நோக்கி பாயும் தோட்டா', சிம்புவுடன் 'வந்தா ராஜாவா தான் வருவேன்' என்ற படத்தில் நடித்து பிரபலமானார்.

    கடைசியாக இவரது நடிப்பில், 'சபாநாயகன், வடக்குப்பட்டி ராமசாமி, மழை பிடிக்காத மனிதன்' உள்ளிட்ட படங்கள் வெளியாகி வெற்றிப்பெற்றது.

    கடந்த 22-ந் தேதி சாய் விஷ்ணு என்பவருடன் மேகா ஆகாஷுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது. இது தொடர்பான புகைப்படங்களை நடிகை மேகா பகிர்ந்து தனது ஆசை நிறைவேறியதாக இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சி பதிவை பகிர்ந்திருந்தார்.

    அதனைத்தொடர்ந்து, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேகா ஆகாஷை திருமணம் செய்யும் சாய் விஷ்ணு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி திருநாவுக்கரசரின் 2-வது மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், மேகா ஆகாஷ் சென்னையில் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டிற்கு நேரில் சென்றார். குடும்பத்தினருடனும், வருங்கால கணவருடனும் சென்ற மேகா ஆகாஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளார்.

    அப்பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்பொழுது பகிர்ந்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விஜய் ஆண்டனி இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் நடித்தார்.
    • இப்படம் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகியது.

    ரோமியோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் நடித்தார்.

    இந்த படத்தில் சரத்குமார், சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன், பிருத்வி அம்பெர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி ரிலீசாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    திரைப்படம் தற்பொழுது ஓடிடியில் வெளியாகியுள்ளது . இப்படம் ஓடிடி தளமான அமேசான் பிரமில் இன்று வெளியாகியுள்ளது. திரைப்படம் வெளியாகி 14 நாட்களிலே ஓடிடியில் வந்தது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சந்தானம் நடித்துள்ள திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'.
    • இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

    'டிக்கிலோனா' படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தீபக் ஒளிப்பதிவு செய்ய சிவன் நந்தீஸ்வரன் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். இப்படம் பிப்ரவரி 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு சமீபத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்தது.


    இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. 'சாமி இல்லனு சொல்லிட்டு சுத்துன ராமசாமி தான நீ' போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.



    ×