search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி நபர்"

    • நிர்வாகம் பரம்ஜித் கவுர் விண்ணப்பத்தை நிராகரித்தது, மேலும் சிங் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
    • பயோமெட்ரிக் கருவியில் பதிந்த அவரது கைரேகைகள் உண்மையான வேட்பாளரின் கைரேகைகளுடன் பொருந்தாததால் சிக்கினார்.

    பஞ்சாப் மாநிலம் ஃபரித்கோட் பகுதியில் உள்ள ஆங்ரேஸ்சிங் என்ற நபர்,சுகாதாரப் பணியாளர்களுக்கான அரசாங்க தேர்வின் போது தனது காதலி போல் வேடம் போட்டு போலியாக நடிக்க முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டார்.

    அதிகாரிகளின் அறிக்கைகளின்படி, "ஆங்ரேஸ்சிங் பெண் வேடத்தில் ஜனவரி 7 ஆம் தேதி கோட்காபுராவின் டிஏவி பப்ளிக் பள்ளியில் தேர்வு எழுத வந்துள்ளார். அதற்காக, மேக்கப், பொட்டு மற்றும் சல்வார் கமீஸ் அணிந்து போலி வாக்காளர் மற்றும் ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி தேர்வு எழுத வந்தார்" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆவணங்கள் இருந்தபோதிலும், பயோமெட்ரிக் கருவியில் பதிந்த அவரது கைரேகைகள் உண்மையான வேட்பாளரின் கைரேகைகளுடன் பொருந்தாததால் சிங்கின் திட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.

    முதற்கட்ட விசாரணையில், அவர் தனது காதலி பரம்ஜித் கவுர் என்ற பெண்ணுக்காக போலி ஆவணங்களை பயன்படுத்தி தன்னை பெண்ணாக சித்தரித்து தேர்வு எழுத வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து, நிர்வாகம் பரம்ஜித் கவுர் விண்ணப்பத்தை நிராகரித்தது, மேலும் சிங் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    சிங்கின் மீது புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் இப்போது கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் என்றும், முழுமையான விசாரணையில் அவரது செயல்களுக்கான கூடுதல் காரணத்தை கண்டறியப்படும் என்றும் எஸ்பி சிங் கூறினார்.

    ×