என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.100 கோடி வசூல்"

    • உலகம் முழுவதும் 400 திரையரங்குகளில் "நெரு" வெளியானது
    • திரைப்படம் வெளியாகி 25 நாட்களிலேயே இந்த சாதனையை புரிந்துள்ளது

    கடந்த 2023 டிசம்பர் 21 அன்று மலையாள திரையுலக முன்னணி நடிகரான மோகன்லால் கதாநாயகனாக நடித்த "நெரு" திரைப்படம் உலகெங்கும் வெளியானது.

    இந்தியாவில் 500 திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் 400 அரங்குகளிலும் வெளியானது.

    2013ல் மோகன்லால் கதாநாயகனாக நடித்து வெற்றிகரமாக ஓடிய "திரிஷ்யம்" திரைப்படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப், நெரு திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

    2021ல் இதே கூட்டணியின் "திரிஷ்யம்-2" வெளியாகி வெற்றி திரைப்படமாக அமைந்தது.

    வெளியாகி 25 நாட்களை நெருங்கும் நிலையில், திரைப்பட வெற்றிக்கு முக்கிய மைல்கல்லாக கருதப்படும் ரூ.100 கோடியை உலக வசூலில் தொட்டு விட்டதாக திரைப்பட குழு அறிவித்துள்ளது.

    வெற்றியில் மகிழ்ச்சியடைந்துள்ள மோகன்லால் திரைப்பட குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    ஐஎம்டிபி (IMDb) திரைப்பட மதிப்பீட்டு புள்ளிகளில் இத்திரைப்படம் 10க்கு 7.8 என மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பார்வை இழந்த பெண்ணின் மீது தாக்குதல் நடத்தி, சட்டத்தை வளைத்து, தண்டனையில் இருந்து தப்பித்த ஒரு பணக்கார இளைஞனுக்கு, மீண்டும் சட்டத்தின் மூலமே தண்டனை பெற்று தரும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் மோகன்லால் சிறப்பாக நடித்திருப்பது உலகெங்கும் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

    ×