search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதித்ய ஹிருதயம்"

    • அவரே மருத்துவர் ஆவார், அவரே மனு, வாயு, மற்றும் அக்னி,
    • பருவங்களின் காரணம் அவரே, உலகை உய்வித்து வைத்திருக்கின்ற ஒளியின் இருப்பிடம் அவரே

    இனி இந்த சூரிய தேவனுக்குரிய மிக பலம் வாய்ந்த துதியான ஆதித்ய ஹ்ருதயம் எவ்வாறு ராம பிரானுக்கு கும்ப முனி என்று அழைக்கப்படும் அகத்திய முனிவரால் எப்படி உபதேசிக்கப்பட்டது என்பதைப் பார்ப்போமா?

    யுத்த களத்திலே ராவணனை கடைசியாக எப்படி அழிப்பது என்று யோசித்துக் கொண்டு ராம பெருமாள் என்ற போது,

    பல தேவர்களுடனும், கந்தவர்களுடனும், ரிஷகளுடனும் சேர்ந்து ராம ராவண யுத்தத்தை கவனித்துக் கொண்டிருந்த

    பெரும் சிறப்பு வாய்ந்த கும்ப முனி என்று அழைக்கப்படுபவரும், அம்மையப்பரின் திருக்கல்யாணத்தின் போது

    வடக்கு திசை தாழ்ந்து தெற்கு உயர்ந்த போது உலகைச் சமப்படுத்த வந்தவருமான அகஸ்திய முனிவர், ராமனிடம் வந்து பேசத் தொடங்கினார்.

    "பெரும் தோள்வலி படைத்தவனே, ராமா! என்றுமே அழியாத ஒரு ரகசியத்தை உனக்கு உரைக்கின்றேன்.

    கேள், நான் கூறப்போவது ஆதித்ய ஹ்ருதயம் என்கிற துதி. இது சாஸ்வதமானது, புனிதமானது,

    அழிவற்றது, எல்லா பாவங்களையும், ஒழிக்க வல்லது, எல்லா எதிரிகளையும் அழிக்க வல்லது, மன குழப்பத்தையும்,

    துன்பத்தையும், வேரோடு அறுக்க வல்லது, ஆயுளை வளர்க்க வல்லது, பெறும் சிறப்பு வாய்ந்தது.

    தேவர்களாலும், அசுரர்களாலும் வணங்கப்படுபவனும், உலகுக்கே ஒளி தருபவனும், தினம் தவறாமல்

    தோன்றுபவனுமான உனது இஷ்வாகு குல தெய்வமான சூரியனைப் பற்றிய துதி இது.

    உலகை மட்டுமல்லாமல் தேவர்களையும் கூட வாழ் விப்பவர் சூரிய பகவான், அவரே பிரம்மா, விஷ்ணு,

    சிவபெருமான், அவரே கந்தன், ப்ரஜாபதி, இந்திரன், குபேரன், அவரே காலன், யமன், சோமன், வருணன், அவரே அனைத்து பித்ருக்களும் ஆவார்.

    அவரே அஷ்ட வஸக்கள் ஆவாதர், அவரே மருத்துவர் ஆவார், அவரே மனு, வாயு, மற்றும் அக்னி,

    பருவங்களின் காரணம் அவரே, உலகை உய்வித்து வைத்திருக்கின்ற ஒளியின் இருப்பிடம் அவரே,

    உலகின் மூச்சுக் காற்று அவரே, என்று தொடங்கிய சூரிய பகவானின் பெருமைகளையும், சிறப்புகளையும் கொண்டது.

    • ஆதித்ய ஹ்ருதயம் சூரியனைக் குறித்த ஒரு துதி.
    • இது விசேஷ மந்திரங்கள் அடங்கிய ஒன்று! ராமர் இதை ஓதி ராவணனை எதிர் கொண்டார்.

    ஸ்ரீ ராமர் ராவணனை எதிர்த்து போர் புரிந்த பொழுது, அகஸ்திய மாமுனிவர் ராமர் எதிரே தோன்றி ஆதித்ய ஹ்ருதயம் என்னும் சக்தி வாய்ந்த மந்திரத்தை உபதேசித்து அருளினார்.

    ஆதித்ய ஹ்ருதயம் சூரியனைக் குறித்த ஒரு துதி.

    இது விசேஷ மந்திரங்கள் அடங்கிய ஒன்று! ராமர் இதை ஓதி ராவணனை எதிர் கொண்டார்.

    ராவணன் மீது பலம் பொருந்திய பாணங்கள் பாய்ந்தாலும் அவன் சமாளித்து மீண்டும் மீண்டும் எழுவதைக் கண்டார் ராமர்.

    அருகில் இருந்த விபீஷணன் ராமரைக் குறிப்பாக பார்த்தார்.

    விபீஷணன் ஏதோ சொல்ல விரும்புவதைத் தெரிந்து கொண்ட ராமர் விபீஷணனை அருகில் அழைத்தார்.

    ராமரை நோக்கி விபீஷணன், "ஐயனே! அன்னையை அனவரதமும் (காம வசத்தால்) நினைத்துக் கொண்டே

    இருக்கிறான் ராவணன் உலகத்திற்கே அருள்பாலிக்கும் அன்னையை அவன் இடைவிடாது அடி மனத்திலிருந்து

    நினைப்பதால் இயல்பாகவே நினைப்பவர் தம்மைக் காக்கும் அன்னையின் சக்தி அவனைக் காக்கிறது

    ஆகவே அந்த ஆசையை முதலில் நீங்கள் அழித்தால், பின்னர் அவன் அழிந்து விடுவான்"

    என்று ராவணனின் உயிர் ரகசியத்தைக் கூறினார்.

    உடனே ராமர், ஒரு பாணத்தை எடுத்து அவன் நாபியை நோக்கி அடித்தார்.

    அடிவயிற்றில் இருந்த அன்னை நினைவு போனவுடன் அது ராவணன் மரணத்திற்கு வழி வகுத்தது.

    அடுத்து பத்து பாணங்களால் பத்துக் தலைகளையும், இருபது பாணங்களால் இருபது கைகளையும் அறுத்துக் தள்ளினார் ராமர்.

    ஆக முப்பத்தியொரு பாணங்களை ராமர் செலுத்தி ராவணனை அழித்ததை துளசிதாசர் அழகாக அரக்கன் அழிவின் ரகசிய விளக்கமாக ராமசரித மானசத்தில் கூறுகிறார்.

    ஆதித்ய ஹ்ருதயம் தரும் பலன்கள்

    இப்படி பலம் பொருந்திய எதிரியை அழிக்க  வழி வகுத்தது ஆதித்ய ஹ்ருதயம்,

    எதிரி அழியத் தகுந்த உபாயங்களைத் தானே கண்டு பிடித்து அழிக்கும் மந்திரம் ஆதித்ய ஹ்ருதயம்.

    ஆதித்ய ஹ்ருதயத்தைத் தினமும் ஓதினால் பெரும் பயன் பெறலாம் என மகான்களும் ஞானிகளும் காலம் காலமாகக் கூறி வருகின்றனர்.

    • திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ளது சூரியனார் கோவில்.
    • கருவறையில் சூரியனார் மேற்கு முகமாக நின்று காட்சி தருகிறார்.

    இந்தியாவில் மட்டுமின்றி, ஐரோப்பா, தென் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளிலும் சேதம் அடைந்த நிலையில் சூரியனார் கோவில்கள் காணப்படுவதாக அறிய முடிகிறது. சூரியனை முழுமுதற் தெய்வமாகக் கொண்டதுதான் சவுமார மதம் ஆகும். இந்தியாவில் ஒடிசாவில் பூரி நகருக்கு அருகில் கோனார்க் சூரியனார் கோவில் உள்ளது.

    தமிழ்நாட்டிலும் மகாபலிபுரத்தில் சூரியனுக்கு சிலை உள்ளது. மார்க்கண்டேய புராணத்தில் `ஓம்' என்ற ஒலி உலகத்தில் முதலில் தோன்ற, அவ்வொலியின் விளைவாக `ஒளி' தோன்றியதாகக் கூறப்படுகிறது. பன்னிரண்டு ராசிகளில் சிம்ம ராசிக்கு அதிபதி, சூரியன்.

    பன்னிரண்டு ராசிகளில் சூரியன் வலம் வருவதைக் கொண்டு, 12 சூரியர்கள் இருப்பதாகவும் சொல்வதுண்டு. சூரியனை வணங்க அகத்தியரால், `ஆதித்ய ஹிருதயம்' என்ற மந்திரம் ஏற்படுத்தப்பட்டது. இந்த மந்திரத்தை, ராம- லட்சுமணர்களுக்கு விஸ்வாமித்திரர் உபதேசித்ததாக ராமாயணம் மூலம் அறிகிறோம்.

    தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ளது, சூரியனார் கோவில். மேற்கு நோக்கி அமைந்த இந்த ஆலயத்தின், கருவறையில் சூரியனார் மேற்கு முகமாக நின்று காட்சி தருகிறார். இவருக்கு இடதுபுறம் உஷாதேவியும், வலதுபுறம் பிரத்யுஷா தேவி என்னும் சாயாதேவியும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். சூரிய பகவான் தன்னுடைய இரு கரங்களிலும் செந்தாமரை மலரை ஏந்தி புன்சிரிப்புடன் அருள்கிறார்.

    இந்த ஆலயத்தில் உள்ள நடராஜர், காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சியை தரிசித்த பின் சூரியனாரை வணங்குதல் முறையாகும். இந்த கோவிலில் சூரியனைத் தவிர, மற்ற கோள்களான சந்திரன், அங்காரகன், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது ஆகியோருக்கும் தனித்தனியாக சன்னிதிகள் உள்ளன.

    • சூரிய தேவனுக்குரிய மிக பலம் வாய்ந்த துதி ஆதித்ய ஹ்ருதயம் எனப்படும்.
    • யுத்த களத்திலே ராவணனை கடைசியாக எப்படி அழிப்பது என்று ராமர் யோசித்துக்கொண்டிருந்தார்.

    சூரிய தேவனுக்குரிய மிக பலம் வாய்ந்த துதி ஆதித்ய ஹ்ருதயம் எனப்படும்.

    இந்த துதி எவ்வாறு ராமபிரானுக்கு அகத்திய முனிவரால் உபதேசிக்கப்பட்டது என்பது தெரியுமா?

    யுத்த களத்திலே ராவணனை கடைசியாக எப்படி அழிப்பது என்று ராமர் யோசித்துக்கொண்டிருந்தார்.

    அப்போது அகஸ்திய முனிவர், ராமனிடம் வந்து பேசத் தொடங்கினார்.

    பெரும் தோள்வலி படைத்தவனே, ராமா! என்றுமே அழியாத ஒரு ரகசியத்தை உனக்கு உரைக்கின்றேன். கேள், நான் கூறப்போவது ஆதித்ய ஹ்ருதயம் என்கிற துதி.

    இது சாஸ்வதமானது, புனிதமானது, அழிவற்றது, எல்லா பாவங்களையும், ஒழிக்க வல்லது, எல்லா எதிரிகளையும் அழிக்க வல்லது, மன குழப்பத்தையும், துன்பத்தையும், வேரோடு அறுக்க வல்லது, ஆயுளை வளர்க்க வல்லது, பெறும் சிறப்பு வாய்ந்தது.

    தேவர்களாலும், அசுரர்களாலும் வணங்கப்படுபவனும், உலகுக்கே ஒளி தருபவனும், தினம் தவறாமல் தோன்றுபவனுமான உனது இஷ்வாகு குல தெய்வமான சூரியனைப் பற்றிய துதி இது.

    உலகை மட்டுமல்லாமல் தேவர்களையும் கூட வாழ்விப்பவர் சூரிய பகவான், அவரே பிரம்மா, விஷ்ணு, சிவபெருமான், அவரே கந்தன், ப்ரஜாபதி, இந்திரன், குபேரன், அவரே காலன், யமன், சோமன், வருணன், அவரே அனைத்து பித்ருக்களும் ஆவர்.

    அவரே அஷ்ட வஸக்கள் ஆவாதர், அவரே மருத்துவர் ஆவார், அவரே மனு, வாயு, மற்றும் அக்னி, பருவங்களின் காரணம் அவரே, உலகை உய்வித்து வைத்திருக்கின்ற ஒளியின் இருப்பிடம் அவரே, உலகின் மூச்சுக் காற்று அவரே, என்று தொடங்கிய சூரிய பகவானின் பெருமைகளையும், சிறப்புகளையும் கொண்டது.

    ×