search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒலிம்பிக் ஹாக்கி"

    • இந்திய மகளிர் அணி அரையிறுதியில் ஜெர்மனியிடம் தோல்வியடைந்தது.
    • 3-வது இடத்துக்கான போட்டியில் முதல் பாதியில் ஜப்பான் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

    இந்த ஆண்டில் பாரிசில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெறுவதற்கான எஃப்எச் மகளிர் ஒலிம்பிக் குவாலிபயர் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

    இதில், இந்தியா - ஜெர்மனி அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டத்தில், இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்த நிலையில் போட்டியானது 2-2 என சமநிலை அடைந்தது. இதனால் பெனால்டி முறை பின்பற்றப்பட்டது. இதில் 4-3 என்ற கணக்கில் ஜெர்மனி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அமெரிக்காவுடன் இணைந்து பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றது.

    தோல்வியடைந்தாலும் ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற இந்திய அணிக்கு மற்றொரு வாய்ப்பு இருந்தது. அது என்னவென்றால் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ஜப்பானை இந்தியா வீழ்த்த வேண்டும்.

    இந்நிலையில் இந்தியா- ஜப்பான் அணிகள் இன்று மோதியது. இதில் முதல் பாதியில் ஜப்பான் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஜப்பான் 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணியின் ஒலிம்பிக் கனவு இதோடு முடிவுக்கு வந்தது. 

    ×