search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலைநேர சூரிய ஒளி நன்மைகள்"

    • குறைந்தது 20 நிமிடங்களாவது சூரிய ஒளியில் இருக்க வேண்டும்.
    • உங்கள் உடலுக்கும், மனதுக்கும் நல்லது.

    விடியற்காலையில் எழுந்து வெளியே சென்று இயற்கையான சூழ்நிலையில் சிறிது நேரத்தை செலவிடுவது பெண்களுக்கு சிரமமான காரியம்தான். இருந்தாலும் காலைநேர சூரிய ஒளி உடலில் படுமாறு குறைந்தது 20 நிமிடங்களாவது இருக்க வேண்டும். இது உங்கள் உடலுக்கும், மனதுக்கும் நல்லது. காலைநேர சூரிய ஒளி உங்கள் வாழ்க்கையில் பல்வேறு நேர்மறையான மாற்றங்களை உண்டாக்கும்.

    காலைநேர சூரிய ஒளி உடலில் படுவதன் மூலம் 'வைட்டமின் டி' சத்து இயற்கையான முறையில் உடலுக்கு கிடைக்கும். இதன் உதவியால் உடல் தேவையான அளவு கால்சியம் சத்தைப் பெற்று எலும்புகளை வலுவாக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    'வைட்டமின் டி, இதய நோய்கள், ரத்த அழுத்தம் மற்றும் நுரையீரல் சார்த்த நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும். சூரிய ஒளி உடலில் படும்போது மனநிலையை நிதானமாகவும், அமைதியாகவும் மாற்ற உதவி செய்யும் `செரோடோனின்' ஹார்மோன் போதுமான அளவு சுரக்கும். காலைநேர சூரிய ஒளி உடலில் படுமாறு தினமும் 30 நிமிடங்கள் வேகமான நடைப்பயிற்சி செய்வதன் மூலம், உடல் எடை வெகுவாக குறையும்.

    `காலைநேர சூரிய ஒளி உடலில் படுமாறு இருப்பவர்களுக்கு தூக்கத்துக்கு காரணமான 'மெலடோனின்' ஹார்மோன் சீராக சுரக்கும். இதன் மூலம் இரவு நேரத்தில் ஆழ்ந்த, நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும்.

    காலையில் இயற்கையான சூரிய ஒளியில் நேரம் செலவிடுபவர்களுக்கு 'சர்க்கேடியன் ரிதம்' எனப்படும் உயிர் கடிகாரம் சீராக செயல்படும். அதாவது உள் உறுப்புகள் அனைத்தும் சரியான நேரத்தில் தங்களுடைய வேலைகளை சீராக செய்யும்.

    இயற்கையான சூரிய ஒளி, மனநிலையை நேர்மறையாக மாற்றும் சக்தி கொண்டது. இதன்மூலம் மகிழ்ச்சிக்கு காரணமான 'எண்டோர்பின்' ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும். இது, நாள் முழுவதும் உங்களை உற்சாகத்தோடு இயங்கச் செய்யும்.

    தினமும் காலையில் வெளியே சென்று சூரிய ஒளியில் நிற்க முடியாதவர்கள் வாரத்தில் 3 நாட்களாவது இருக்க முயற்சி செய்யுங்கள். இதற்காக குறிப்பிட்ட நாட்களையும், நேரத்தையும் ஒதுக்கி அதை தவறாமல் பின்பற்றுங்கள்.

    இதற்காக முந்தைய நாளின் இரவிலேயே தேவையான திட்டமிடுதல்களை செய்து விடுங்கள். கடிகாரத்தில் அலாரம் வைப்பது. அடுத்த நாள அதிகாலையில் வெளியே செல்லும்போது அணிய வேண்டிய உடைகளை எடுத்துவைப்பது ஆகிய வேலைகளை இரவே செய்து முடித்துவிடுங்கள்.

    வெளியே செல்ல முடியாதவர்கள், வீட்டிலேயே சூரிய ஒளி நேரடியாக படும் இடத்தில் உட்கார்ந்து தியானம் செய்பலாம் போகா பயிற்சிகளை மேற்கொள்ளலாம். காலைநேரத்தில் எழுந்து தோட்ட வேலைகளில் ஈடுபடலாம்.

    காலை நேர சூரிய ஒளியில் நேரத்தை செலவிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இயற்கையுடன் இணைந்திருக்கும் அந்த தருணங்கள், உங்கள் மனநிலை, ஆற்றல் நிலைகள் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வில் ஆழமான, நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

    ×