என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமையல் துணுக்குகள்"

    • ஊறுகாய், கடுகு எண்ணெய் ஊற்றி செய்தால் விரைவில் கெட்டுப்போகாது.
    • வாழைப்பழத்தை மிக்சியில் கூழாக்கி ஆப்பம் வார்த்தால் சுவையாக இருக்கும்.

    * பொதுவாக எந்த ஊறுகாய் செய்தாலும் கடுகு எண்ணெய் ஊற்றி செய்தால் விரைவில் கெட்டுப்போகாது. வடநாட்டினர் பெரும்பாலும் பின்பற்றும் வழியும் இதுதான்.

    * குலோப்ஜாமூனை ஆறவைத்த சர்க்கரை பாகில் போட்டு ஊறவைத்தால் விரிசல் விழாது, உடைந்தும் போகாது.

    * முந்திரி பருப்பை எறும்பு அரிக்காமல் இருக்க சிறிதளவு பச்சை கற்பூரத்தை போட்டு வைக்கலாம்.

    * பீட்ரூட்டை உலர வைத்து பொடி செய்து செயற்கை கலருக்கு பதிலாக பயன்படுத்தலாம். உணவுப் பொருட்கள் பார்ப்பதற்கு அழகான நிறங்களில் இருக்கும். உடலுக்கும் எந்த தீங்கும் ஏற்படாது.

    * தேங்காயோடு பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து அரைத்தால் தேங்காய் சட்னி மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.

    * கோதுமை மாவு போட்டு வைக்கும் டப்பாவில் கொஞ்சம் பிரியாணி இலைகளையும் சேர்த்தால் வண்டு வராது.

    * சமையல் செய்யும்போது உடலில் சூடான எண்ணெய் பட்டுவிட்டால், அந்த இடத்தில் உருளைக்கிழங்கை அரைத்து பூசினால் கொப்பளம் வராது.

    * குலோப்ஜாமூன் ஜீரா மீந்துவிட்டால், அதில் மைதா மாவை சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து சப்பாத்தி போல் திரட்டி, சதுர துண்டுகளாக வெட்டி எண்ணெய்யில் பொரித்தால் சுவையான இனிப்பு பிஸ்கட் ரெடி.

    * ஆப்பத்திற்கு மாவு கலக்கும் போது இரண்டு மஞ்சள் வாழைப்பழத்தை மிக்சியில் கூழாக்கி சேர்த்து ஆப்பம் வார்த்தால் மிகுந்த சுவையாக இருக்கும்.

    * உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு வறுவல் செய்யும்போது மேலாக சிறிது ரொட்டி தூளை தூவினால் கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.

    • வடைக்கு மாவு அரைக்கும் போது உப்பை கடைசியாக சேர்க்க வேண்டும்.
    • தேங்காய் பர்பிக்கு தேங்காய் துருவலை வறுத்த பின்னர் பர்பி செய்தால் கெட்டியாக வரும்.

    * பயத்தம் மாவு உருண்டை செய்யும்போது வெல்லத்தை மிக்சியில் தூள் செய்து அத்துடன் வறுத்து சலித்த பயத்தம் மாவை போட்டு அரைத்தால் மாவு கட்டி இல்லாமல் இருக்கும்.

    * வடைக்கு உளுந்து அரைக்கும் போது கடைசியில்தான் உப்பு சேர்க்க வேண்டும். முன்பே சேர்த்தால் மாவு இளகிவிடும்.

    * ஒருவருக்கு மட்டும் காபி போட வேண்டும் என்றால் சிறிது சர்க்கரை கலந்த காபித்தூளை டீ வடிக்கட்டியில் போட்டு வெந்நீர் ஊற்றினால் கெட்டியான டிகாஷன் கிடைக்கும்.

    * சப்பாத்தியை சிறு துண்டுகளாக செய்து, அத்துடன் உருளைக்கிழங்கு குருமாவை சேர்த்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    * உளுந்தம் பருப்பு அதிகமாகவும், கடலை பருப்பு கொஞ்சமாகவும் போட்டு மிளகாய், கெட்டி காயம், உப்பு சேர்த்து வறுத்து அரைத்தால் இட்லி பொடி நல்ல சுவையாக இருக்கும்.

    * சாம்பார் சாதம் செய்யும்போது அரிசி, பருப்பு, காய்கறி கலவை, சாம்பார் பொடி ஆகியவற்றை மட்டும் தண்ணீரில் வேக வைக்க வேண்டும். உப்பு, புளிக்கரைசலை தாளிக்கும் போது கொதிக்க வைத்து சேர்க்க வேண்டும். அப்போதுதான் சாதம் குழைவாக இருக்கும்.

    * அப்பம் செய்யும் போது அரிசி, தேங்காய் அரைத்த கலவையில் வெல்லத்தை தண்ணீரில் நன்றாக கரையவிட்டு ஆறிய பின்பு தான் ஊற்ற வேண்டும். சூடாக ஊற்றினால் அப்பம் சரியாக வராது.

    * தேங்காய் பர்பி செய்யும்போது தேங்காய் துருவலை ஈரப்பசை போக சிறிது வறுத்த பின்னர் பர்பி செய்தால் கெட்டியாக வரும்.

    * வாய் குறுகலான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் முளைக்கீரையை வைத்தால் அடுத்த நாள் கீரை பசுமை நிறம் மாறாமல், வதங்காமல் இருக்கும்.

    • கூட்டோ, குழம்போ கொதித்த பின் தீ எரியும் அளவை குறைத்து விட்டால் எரிபொருள் சிக்கனம் செய்யலாம்.
    • வெற்றிலையை அலமாரி மூலையில் வைத்தால் கரப்பான் பூச்சி வராது.

    * அடுப்பில் வைத்த பாத்திரம் தீய்ந்து கருகி போனால் உப்பு நீரில் ஒரு நாள் இரவு முழுக்க ஊற வைத்து மறுநாள் காலையில் அழுத்தி தேய்க்க சுத்தமாகி விடும்.

    * தயிர் புளித்துப்போனால் அதில் 4 டம்ளர் நீர் ஊற்றி அரைமணி நேரம் கழித்து மேலே நிற்கும் நீரை மட்டும் கீழே ஊற்றி விட்டால் தயிர் புளிக்காது.

    * பாட்டில் மூடியை திறக்க முடியாமல் போனால் ஈரத்துணியால் மூடியை இறுகப்பற்றி கொண்டு திருகினால் சுலபமாக கழன்று விடும்.

    * கூட்டோ, குழம்போ கொதித்த பின் தீ எரியும் அளவை குறைத்து விட்டால் எரிபொருள் சிக்கனம் செய்யலாம்.

    * மிளகாய் தூள் கெட்டுப் போகாமல் இருக்க அதில் சிறிதளவு பெருங்காயக் கட்டியைப் போட்டு வைத்தால் நீண்ட நாள் காரம், மணம் மாறாமல் இருக்கும்.

    * சாம்பார் செய்து இறக்குவதற்கு முன் 2 தக்காளிகளை மிக்சியில் அரைத்து சேர்க்க அதிக ருசி கிடைக்கும்.

    * மாங்காய், எலுமிச்சை, நார்த்தங்காயை இட்லி தட்டில் வைத்து சிறிது நேரம் வேக வைத்து, ஊறுகாய் போட்டால் விரைவாக ஊறும், சத்துக்களும் வீணாகாது.

    * லேசான தீக்காயம் என்றால் ஒரு வாழைப்பழத்தை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி சூடுபட்ட இடத்தில் வைத்தால் குளுகுளுவென்று இருக்கும். அரிப்பு ஏற்படாது.

    * அரிசி, தானியங்களை வைக்கும் டப்பாவில் பூச்சிகள் தொல்லை இருந்தால் அதில் பூண்டு அல்லது மஞ்சள் துண்டு போட்டால் பூச்சிகள் அண்டாது.

    * வெற்றிலையை அலமாரி மூலையில் வைத்தால் கரப்பான் பூச்சி வராது.

    * புரோட்டாவிற்கு மாவு பிசையும் போது அதில் சிறிதளவு மில்க் மெயிட் சேர்க்க ருசியாக இருக்கும்.

    * பூண்டுவை அரைமணி நேரம் தண்ணீரில் ஊற வைத்தால் அதன் மேல் தோலை எளிதாக நீக்கி விடலாம்.

    * உளுந்து வடை மாவில் சிறிது நெய் சேர்த்தால் வடை மொறு மொறுப்பாக இருக்கும். அதிக எண்ணெய் செலவாகாது.

    * கட்லெட்டில் அதிக ருசி கிடைக்க அதற்குரிய மாவில் சிறிதளவு ரொட்டித் தூள் அல்லது ரவை சேர்க்க வேண்டும்.

    • பஜ்ஜி மாவில் சிறிது இட்லி மாவு சேர்த்து பஜ்ஜி செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
    • பருப்பு வேகவைக்கும்போது, விளக்கெண்ணெய் சேர்த்தால், பருப்பு நன்கு குழைந்து வரும்.

    ஆட்டுக்குடல் குழம்பு வைக்கும்போது அதில் தேங்காய் சிரட்டை போட்டு வேகவைத்தால், ஆட்டுக்குடல் சீக்கிரம் வெந்து விடும்.

    பஜ்ஜி மாவில் சிறிது இட்லி மாவு சேர்த்து பஜ்ஜி செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

    முட்டை ஆம்லெட் செய்யும்போது, காரம் சாப்பிடாதவர்கள் பச்சை மிளகாயை தவிர்த்து குடை மிளகாயை சேர்த்தால், சுவை கூடுதலாகும்.

    ரசத்திற்கு மிளகு, சீரகம் அரைக்கும்போது அதனுடன் சிறிது கொள்ளுவையும் சேர்த்தால் ரசத்தின் சுவை கூடும்.

    சாம்பார் தயாரிப்பதற்கு பருப்பு வேகவைக்கும்போது, அதில் விளக்கெண்ணெய் சேர்த்தால், பருப்பு நன்கு குழைந்து வரும்.

    புளிச்சோறு, ரசம், வத்தக்குழம்பு போன்ற புளி சம்பந்தப்பட்ட உணவு தயார் செய்யும்போது அதில் சிறிதளவு வெல்லம் சேர்த்தால், சுவை கூடும்.

    புளி சாதம், எலுமிச்சை சாதம் போன்றவற்றுக்கு, நிலக்கடலையை வறுத்துப் போடாமல், எண்ணெய்யில் பொரித்துப்போட்டால், மொறு மொறு என்று இருக்கும்.

    பீன்ஸ், முட்டைக்கோஸ் கூட்டு செய்யும்போது தேங்காய், சீரகம் அரைத்து சேர்த்தால், ருசியாக இருக்கும்.

    பாசிப்பயறு, கொண்டைக்கடலை சுண்டல் செய்யும்போது, தேங்காய் துருவலுடன் சிறிது இஞ்சி துருவல் சேர்த்து தாளித்தால் சுவை கூடும்.

    குலோப் ஜாமூன் ஜீரா மீந்து விட்டால், பாயசம் செய்யும் போது சர்க்கரைக்கு பதிலாக ஜீராவை கலந்து கொண்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

    • வடைக்கு மாவு அரைக்கும்போது சிறிது தயிர் விட்டு அரைத்தால் வடை சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
    • பொங்கல் செய்யும்போது தண்ணீர் அதிகமாகி விட்டதா! கவலை வேண்டாம்.

    * தேங்காய்க்கு மாற்றாக சர்க்கரை வள்ளிக்கிழங்கை கரகரப்பாக அரைத்து குருமாவில் சேர்த்துச் சமைத்தால் குருமா புதுமையான சுவையுடன் இருக்கும்.

    * வடைக்கு மாவு அரைக்கும்போது சிறிது தயிர் விட்டு அரைத்தால் வடை சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

    * புளியோதரை தயாரிக்கும்போது அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் வறுத்த கடலை மாவை சேர்த்துப் பாருங்கள். புளியோதரை சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும்.

    * பெருங்காயம் கட்டியாகி விட்டதா? அதில் இரண்டு பச்சை மிளகாயைப் போட்டு வையுங்கள். இளகி விடும்.

    * தோசை மாவு சற்று புளித்திருந்தால் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி நறுக்கி கடுகு தாளித்துப் போட்டு சுவையான ஊத்தப்பம் தயார் செய்யலாம்.

    * சலித்த சப்பாத்தி மாவை வீணாக்காதீர்கள். அடை மாவில் கலந்து சுவையான அடை செய்யலாம்.

     

    * பொங்கல் செய்யும்போது தண்ணீர் அதிகமாகி விட்டதா! கவலை வேண்டாம். அத்துடன் சிறிதளவு ரவையை வறுத்துக் கலந்து விட்டால் கெட்டியாகி விடும்.

    * ரசம் தாளிக்கும்போது தண்ணீரில் பெருங்காயம், கறிவேப்பிலையைப் போடாமல் தாளிக்கும் எண்ணெயில் போட்டால் ரசம் நல்ல மணமாகவும் ருசியாகவும் இருக்கும்.

    * வெண்டைக்காய் பொரியல் செய்யும்போது வறுத்த வேர்க்கடலையை பொடித்துப் போட்டு வதக்கினால் பொரியல் மிகவும் ருசியாக இருக்கும்.

    * இட்லிக்கு சட்னி செய்யும்போது பொட்டுக்கடலை, தேங்காயுடன் வறுத்த வேர்க்கடலையையும் சேர்த்து அரைத்தால் சட்னி மிகவும் ருசியாக இருக்கும்.

    * ரவா கேசரி, அல்வா போன்ற இனிப்பு வகைகள் செய்யும்போது கடைசியில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தால் இனிப்பு திகட்டாது. சுவையாக இருக்கும்.

    • கீரைகள் வாடாமல் இருக்க வேர் பாகத்தை தண்ணீரில் மூழ்கும்படி வைக்க வேண்டும்.
    • மீன் கெட்டுப் போனதா, இல்லையா என்று அறிய மீனை தண்ணீரில் போட்டு தெரிந்து கொள்ளலாம்.

    சப்பாத்தி மாவுடன் சிறிது வேக வைத்த உருளைக்கிழங்கையும், சிறிதளவு பாலையும் சேர்த்து பிசைந்து தயார் செய்தால் சப்பாத்தி மென்மையாகவும், ருசியாகவும் இருக்கும்.

    ஒரு துணியில் ஒருஸ்பூன் அளவு உப்பு முடிந்து மாவில் போட்டுவைத்திருந்தால் மாவில் வண்டு பிடிக்காமல் இருக்கும்.

    கொத்தமல்லி தழை, புதினா வாடி விட்டால் அவற்றை தூக்கி எறிந்துவிடாமல் மிக்ஸியில் அரைத்துப்பொடி செய்து காய்கறி வறுவலில் தூவி இறக்கினால் சுவையாகவும், ருசியாகவும் இருக்கும்.

    கீரைகள் வாடாமல் இருக்க வேர் பாகத்தை தண்ணீரில் மூழ்கும்படி வைக்க வேண்டும். இலைப்பாகத்தை ஈரத்துணியில் மூடி வைக்கலாம். அப்படி செய்தால் கீரைக்கட்டு வாடாமல் இருக்கும்.

    சுண்டல் கெட்டுப்போகாமல் இருக்க கொப்பரைத்தேங்காயைத் துருவி, வதக்கிப் போடவும்.

    சாதம் குழைந்து போய் விட்டால் கொஞ்சம் நல்லெண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி அடுப்பை சிறு தீயில் சிறிது நேரம் வைத்துவிட்டு வடித்தால் சாதம் குழைவாக இல்லாமல் கொஞ்சம் பதமாக இருக்கும்.

    மீன் கெட்டுப் போனதா, இல்லையா என்று அறிய மீனை தண்ணீரில் போட்டு தெரிந்து கொள்ளலாம். மீன் தண்ணீருக்குள் மூழ்கினால் கெடவில்லை என்பதை அறியலாம்.

    உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வதற்கு முன்பு உருளைக்கிழங்கை சீவி தண்ணீரில் ஊறப்போட்டு கழுவ வேண்டும். பின்பு மோரில் சிறிதுநேரம் ஊற விட்டு வடித்து எடுத்து பொரித்தால் சிப்ஸ் வெள்ளையாக இருக்கும்.

    தக்காளிப் பழங்களை சிறிது உப்பு கரைத்த நீரில் போட்டு வையுங்கள். பழம் கெடாது, சுவையும் மாறாது.

    ×