search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளநீர் ஹேர் வாஷ்"

    • எலக்ட்ரோலைட்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
    • இளநீர் கூந்தல் வறட்சி அடைவதை தடுக்க உதவும்.

    இளநீர் சுவையான பானம் மட்டுமல்ல கூந்தலுக்கு எண்ணற்ற நன்மைகளையும் வழங்கக்கூடியது. கூந்தல் பராமரிப்பில் இளநீரை பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்களை பார்ப்போம்.

    உச்சந்தலையில் நீர்ச்சத்து:

    இளநீரில் வைட்டமின்கள், தாதுக்கள், எலக்ட்ரோலைட்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை `ஹேர் வாஷாக' பயன்படுத்தும்போது முடிகளுக்கும், உச்சந்தலைக்கும் போதுமான நீர்ச்சத்தை அளிக்கும். இந்த இயற்கை நீரேற்றம், கூந்தல் வறட்சி அடைவதை தடுக்க உதவும். பொடுகு போன்ற பிரச்சினைகளையும் குறைக்கும்.

    முடி உடைதல்:

    இளநீரில் இருக்கும் ஈரப்பதமூட்டும் பண்புகள் முடி நெகிழ்வுத்தன்மை அடைவதற்கு வழிவகுக்கிறது. முடி வெடிப்பு, முடி உடைதல் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. இளநீரை பயன்படுத்துவதால் நன்கு நீரேற்றமடைந்திருக்கும் கூந்தல், `ஹேர் பிரஷ்' கொண்டு சீவுவதாலோ, சுற்றுப்புற காரணிகளாலோ சேதம் அடைவதற்கான வாய்ப்பும் குறைவு. ஒருவேளை பாதிப்படைந்தாலும் விரைவாகவே இயல்புக்கு திரும்பும் தன்மை கொண்டது.

    முடி உதிர்தல்:

    மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கூந்தல் பராமரிப்பின்மை உள்பட பல்வேறு காரணிகள் முடி உதிர்தலுக்கு காரணமாக அமையலாம். இளநீரில் உள்ளடங்கி இருக்கும் ஊட்டச்சத்து பண்புகள் இந்த பிரச்சினைகளை தீர்க்க உதவும். முடி உதிர்வை குறைக்கும். மயிர்கால்களை வலுவாக்கி முடியையும் பலப்படுத்தும். முடி உதிர்தலை குறைக்கும்.

     பி.எச். சமநிலை:

    இளநீரின் பி.எச் அளவு கூந்தலின் இயற்கையான பி.எச் அளவை ஒத்திருக்கும். அதனால் இளநீரை ஹேர் வாஷாக பயன்படுத்துவது பி.எச். சமநிலையை மீட்டெடுக்க உதவும். கூந்தல் ஆரோக்கியத்திற்கு உகந்த சூழலை உருவாக்கும். இந்த சமச்சீரான பி.எச் அளவுகள் மென்மையான, பளபளப்பான கூந்தலுக்கு வித்திடும்.

    இயற்கை கண்டிஷனர்:

    இளநீர், வணிக ரீதியான ஹேர் கண்டிஷனர்களுக்கு சிறந்த இயற்கை மாற்றாகவும் விளங்கக்கூடியது. கூந்தலில் ஏற்படும் முடிச்சுகள் மற்றும் சிக்கல்களை நீக்கி மிருதுவாக்க உதவுகிறது. சீப்பு, ஹேர் பிரஷ் கொண்டு தலைமுடியை சீவுவதையும் எளிதாக்குகிறது. சுருள் முடி, அடர்த்தியான முடி கொண்டவர்கள் கூந்தலை அலசுவதற்கு இளநீரை பயன்படுத்துவது சிறந்த தேர்வாக அமையும்.

    பிரகாசம்:

    இளநீரில் உள்ளடங்கி இருக்கும் நீரேற்ற பண்புகள் கூந்தல் பிரகாசத்திற்கும் பங்களிக்கின்றன. இளநீரை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பொலிவிழந்த முடியை பளபளப்பானதாக மாற்றலாம். தலைமுடியை ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் பராமரிக்கலாம்.

     மென்மை:

    கடுமையான ரசாயனங்கள் கொண்ட சில வணிக ரீதியான முடி தயாரிப்பு பொருட்களுடன் ஒப்பிடும்போது இளநீரை உச்சந்தலையில் பயன்படுத்தினால் கூந்தல் மென்மையாக இருக்கும். ஒவ்வாமை உள்ளிட்ட எளிதில் பாதிப்படையும் கூந்தல் உள்பட அனைத்து வகையான முடிகளுக்கும் இளநீரை பயன்படுத்தலாம். இதனை `ஹேர் வாஷாக' பயன்படுத்துவது இயற்கையாகவே கூந்தலை சுத்திகரிப்பு செய்த திருப்தியை கொடுக்கும்.

    வாசனை:

    கூந்தல் பராமரிப்புக்கு அப்பால், இளநீர் இனிமையான நறுமணத்தை வழங்கும். இயற்கையான நறுமண சிகிச்சையாக செயல்படும். கூந்தலுக்கு புத்துணர்ச்சியையும், வாசனையையும் ஏற்படுத்துவதோடு மனநிலையையும் மேம்படுத்தும்.

    முடி வளர்ச்சி:

    இளநீரில் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. மேலும் இந்த ஊட்டச்சத்துக்கள் மயிர்கால்களுக்கு ஊட்டமளித்து, ஆரோக்கியமான, வலுவான முடி வளர்ச்சியை தூண்டுகின்றன. இளநீரை `ஹேர் வாஷாக' வழக்கமாக பயன்படுத்துவது அடர்த்தியான, நீளமான கூந்தலுக்கு வித்திடும்.

    ×