search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளவரசு"

    • தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் இருப்பவர் தம்பி ராமையா.
    • ராஜாகிளி படமானது 2024 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் இருப்பவர் தம்பி ராமையா. ஏற்கனவே சமுத்திரகனி தம்பி ராமையா, ஆகியோர் இணைந்து சாட்டை, அப்பா, வினோதய சித்தம் போன்ற படங்களில் நடித்திருந்த நிலையில் தற்பொழுது மீண்டும் ராஜாகிளி என்ற புதிய படத்தில் இணிந்து நடித்துள்ளனர்.

    'மாநாடு', 'கங்காரு', 'மிகமிக அவசரம்' உள்ளிட்ட படங்களை தயாரித்த வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் கதையின் நாயகனாக சமுத்திரக்கனியும், கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், மியாஸ்ரீ சவுமியா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் முக்கிய வேடங்களில் எம்.எஸ்.பாஸ்கர், பழ.கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், பிரவின்.ஜி, இயக்குனர் மூர்த்தி, 'கும்கி' அஸ்வின், ரேஷ்மா, வெற்றிக்குமரன், 'கும்கி' தரணி, தீபா, பாடகர் கிரிஷ், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்தை தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையா இயக்கியுள்ளார்.

    இப்படத்திற்கு கதை , வசனம், திரைக்கதை, பாடல்வரிகள் மற்றும் இசையமைப்பாளராக தம்பி ராமையா பணியாற்றியுள்ளார். மேலும் படத்திற்கு கேதர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். நேற்று (ஜூன் 19) தம்பி ராமையாவின் பிறந்தநாளை முன்னிட்டு பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ராஜாகிளி படமானது 2024 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். எனவே படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இளவரசு சார்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
    • இந்த விவகாரத்தை கைவிடுவதில் ஆட்சேபனை இல்லை என்று காவல்துறை தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

    தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018-ஆம் ஆண்டு சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக தியாகராயர் நகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாக புகாரளித்திருந்தது. இந்த புகார் தொடர்பான விசாரணையை விரைவில் முடித்து இறுதி அறிக்கையை நான்கு மாதங்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    ஆனால், அந்த உத்தரவின் அடிப்படையில் காவல்துறையினர் குறிப்பிட்ட விசாரணையை முடிக்கவில்லை என்று ஒளிப்பதிவாளர் சங்கத்தின் சார்ப்பில் அதன் செயலாளரும் நடிகருமான இளவரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது நடிகர் இளவரசு காவல்நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் அது தொடர்பான கண்காணிப்பு கேமராக்கள் காவல் நிலையத்தினரால் சமர்பிக்கப்பட்டது. இதற்கு இளவரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து 13-ஆம் தேதி தான் வாக்குமூலம் அளித்ததாகவும் 12-ஆம் தேதி மாமல்லபுரத்தில் படப்பிடிப்பில் இருந்ததாகவும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் அனைத்தும் போலியானவை என தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து குறிப்பிட்ட தேதியில் நடிகர் இளவரசு எங்கே இருந்தார் என்பதற்கான மொபைல் லோகேஷன்களையும் மற்றும் அழைப்புகள் தாக்கல் செய்யப்பட்டது. காவல் துறை சமர்ப்பித்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி நடிகர் இளவரசு 12-ஆம் தேதி காவல் நிலையத்தில் ஆஜரானதாக கூறி மன்னிப்பு கோரினால் அதை ஏற்க தயாராக இருப்பதாக தெரிவித்து காவல்துறை தாக்கல் செய்த விவரங்களுக்கு விளக்கமளிக்குபடி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தவறான தகவல்களை அளித்ததற்காக இளவரசு சார்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி காவல்துறை நிலைபாடு என்ன என்ற கேள்வியை எழுப்பினார். மன்னிப்பு கேட்டதால் இந்த விவகாரத்தை கைவிடுவதில் ஆட்சேபனை இல்லை என்று காவல்துறை தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

    மேலும், தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க முறைகேடு புகார் 2018-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட நிலையில் அதன் மீது இன்னும் முழுமையான விசாரணை நடத்தி முடிக்கவில்லை என்ற அதிருப்தியை நீதிபதி பதிவு செய்தார். தொடர்ந்து, இளவரசு புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை காவல்துறையினர் சாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளனர். நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் வரை பாண்டிபஜார் காவல் நிலைய குற்றப்பிரிவில் காவல் ஆய்வாளர்களாக இருந்த அனைவரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

    • ஒளிப்பதிவாளர் சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக தியாகராயர் நகர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
    • இறுதி அறிக்கையை நான்கு மாதங்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018-ஆம் ஆண்டு சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக தியாகராயர் நகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாக புகாரளித்திருந்தது. இந்த புகார் தொடர்பான விசாரணையை விரைவில் முடித்து இறுதி அறிக்கையை நான்கு மாதங்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    ஆனால், அந்த உத்தரவின் அடிப்படையில் காவல்துறையினர் குறிப்பிட்ட விசாரணையை முடிக்கவில்லை என்று ஒளிப்பதிவாளர் சங்கத்தின் சார்ப்பில் அதன் செயலாளரும் நடிகருமான இளவரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது நடிகர் இளவரசு காவல்நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் அது தொடர்பான கண்காணிப்பு கேமராக்கள் காவல் நிலையத்தினரால் சமர்பிக்கப்பட்டது. இதற்கு இளவரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து 13-ஆம் தேதி தான் வாக்குமூலம் அளித்ததாகவும் 12-ஆம் தேதி மாமல்லபுரத்தில் படப்பிடிப்பில் இருந்ததாகவும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் அனைத்தும் போலியானவை என தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து குறிப்பிட்ட தேதியில் நடிகர் இளவரசு எங்கே இருந்தார் என்பதற்கான மொபைல் லோகேஷன்களையும் மொபைல் அழைப்புகளையும் தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மொபைல் லோகேஷன் மற்றும் அழைப்புகள் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இளவரசு 12-ஆம் தேதி படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால் மாமல்லபுரம் செல்லவில்லை என்றும் தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

    காவல் துறை சமர்ப்பித்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி இளவரசு காவல் நிலையத்தில் ஆஜரான ஆவணங்கள் இருக்கிறது நீதிமன்றத்தில் பொய் சொல்ல வேண்டாம் என்று தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் 12-ஆம் தேதி காவல் நிலையத்தில் ஆஜரானதாக கூறி மன்னிப்பு கோரினால் அதை ஏற்க தயாராக இருப்பதாக தெரிவித்த நீதிபதி இல்லாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்து காவல்துறை தாக்கல் செய்த விவரங்களுக்கு விளக்கமளிக்குபடி இளவரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளை தள்ளி வைத்தார். 

    ×