என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திவ்யா தேஷ்முக்"

    • செஸ் விளையாட்டில் வீரர்களுக்கு நிகராக வீராங்கனைகள் பாராட்டுகளை பெறுவதில்லை.
    • மாறாக எனது உடை, முடி, வார்த்தை உச்சரிப்பு உள்ளிட்ட பிற தேவையில்லா விஷயங்களை கவனிக்கின்றனர்.

    நெதர்லாந்தில் நடைபெற்ற செஸ் தொடரில் இந்திய இளம் வீராங்கனை திவ்யா தேஷ்முக் 12-ம் இடம் பிடித்தார். 18 வயதான அவர் இது போன்று வெற்றி பெறுவதை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவது வழக்காமக கொண்டிருந்தார்.

    இந்நிலையில் இதற்கு பலர் பாலியல் சார்ந்த சர்ச்சை கூறிய கருத்துக்களை பதிவிடுவதாக அவர் வருத்தத்துடன் கூறினார்.

    இது குறித்து திவ்யா தேஷ்முக் கூறியதாவது:-

    நான் விளையாடிய போட்டிகளில் சில முக்கிய நகர்வுகளை செய்தேன். இதனால் என்னைப்பற்றி நானே பெருமையும் பட்டேன். ஆனால் பார்வையாளர்கள் அதை பற்றி எந்த அக்கறையும் கொள்ளவில்லை.

    மாறாக எனது உடை, முடி, வார்த்தை உச்சரிப்பு உள்ளிட்ட பிற தேவையில்லா விஷயங்களை கவனிக்கின்றனர். தொடர்ந்து இது போன்ற கருத்துக்களை சந்தித்து வருகிறேன். இதனால் நான் மிகவும் வருத்தமடைந்தேன்.

    செஸ் விளையாட்டில் வீரர்களுக்கு நிகராக வீராங்கனைகள் பாராட்டுகளை பெறுவதில்லை. பெண்கள் சிறப்பாக செஸ் விளையாடினாலும், பார்வையாளர்கள் அவர்களின் திறமையை கவனிக்காமல் இருப்பது சோகமான உண்மையாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×