search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக வெற்றி கழகம்"

    • சூலக்கரைமேட்டில் உள்ள அரசு காப்பகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ராமமூர்த்தி சாலை வரை வாகனப் பேரணி மேற்கொண்டார்.

    தமிழக அரசின் நலத் திட்டங்கள் மக்களை சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் கள ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்தார்.

    அதன்படி, 2 நாள் பயணமாக இன்று விருதுநகர் சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்குள்ள தனியார் பட்டாசு ஆலையில், பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.

    இதைதொடர்ந்து, சூலக்கரைமேட்டில் உள்ள அரசு காப்பகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் மாணவிகளுடன் கலந்துரையாடினார். மாணவிகளுக்கு பரிசுகள், இனிப்புகள் வழங்கிய மு.க.ஸ்டாலின், காப்பகத்தில் அடிப்படிடை வசதிகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.

    அப்போது, மாணவி ஒருவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அப்பா என்று அழைத்தார். இந்த நெகிழ்ச்சி சம்பவம் குறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் நிறைவான நாள் என்று குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.

    இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ராமமூர்த்தி சாலை வரை வாகனப் பேரணி மேற்கொண்டார்.

    சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த மக்கள் முதலமைச்சருக்கு வரவேற்பை அளித்தனர்.

    • கட்சியில் புதிதாக இணைவதற்கு ஏராளமானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
    • அடுத்த மாநாட்டை இன்னும் சிறப்பாக நடத்துவோம் என கூறி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தினார்.

    சென்னை:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அவர் முதல் அரசியல் மாநாட்டை கடந்த மாதம் 27-ந் தேதி விக்கரவாண்டி வி சாலையில் நடத்தினார்.

    மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றதுடன் மாநாட்டு மேடையில் விஜய் தனது முதல் அரசியல் பேச்சை அதிரடியாக பேசி அரசியல் அரங்கை அதிர வைத்தார்.

    கட்சி கொள்கை, திட்டங்கள் திராவிட அரசியல் இரு மொழி கொள்கை மற்றும் பல்வேறு அரசியல் சார்ந்த விஷயங்களை அவரது பாணியில் விஜய் பேசியது தமிழகமே திரும்பி பார்க்கும் வகையில் அமைந்தது.

    இதைத் தொடர்ந்து கடந்த 3-ந் தேதி (ஞாயிறு) அன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    கூட்டத்தில் நிர்வாகிகளை தனித்தனியாக அழைத்து பேசி அவர்களை உற்சாகப்படுத்தியதுடன் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி விரைவில் வெளியிடுவேன் என்றார். முதல் மாநாட்டை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு தந்து வெற்றி மாநாடாக மாற்றிக் காட்டினீர்கள். அடுத்த மாநாட்டை இன்னும் சிறப்பாக நடத்துவோம் என கூறி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தினார்.

    செயற்குழு கூட்டம் முடிவடைந்ததை தொடர்ந்து விஜய் தனது 69-வது படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். 2-வது கட்டமாக நடந்து வரும் படத்தின் படப்பிடிப்பில் 15 நாட்கள் தொடர்ந்து விஜய் பங்கேற்ற பின்னர் மீண்டும் அரசியல் பணியில் சில நாட்கள் ஈடுபட இருக்கிறார்.

    கட்சி வளர்ச்சி மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை பற்றி கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் விஜய் மாதந்தோறும் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.

    இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

    மேலும் கட்சியில் புதிதாக இணைவதற்கு ஏராளமானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இணைப்பு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

    • தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
    • இவரது முதல் அரசியல் மாநாட்டிற்கு பல திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. தவெக மாநாடு நடைபெறும் திடலுக்கு விஜய் வருகை தந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    மாநாட்டு திடலில் ராம்ப்-ல் நடந்து சென்ற விஜய்யை நோக்கி தொண்டர்கள் கட்சி துண்டை வீசிய நிலையில், அதனை தனது கழுத்தில் அன்போடு அணிந்தபடி விஜய் நடந்து சென்றார்.

    விஜய் அவரது கட்சி கொள்கை மற்றும் அரசியல் சிந்தனைகளை தொண்டர்களுக்கு முன் ஆவேச உரையாற்றினார். இவரது முதல் அரசியல் மாநாட்டிற்கு பல திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

    இந்நிலையில் தற்பொழுது நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ், நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகர் பிரபு தேவா அவர்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
    • தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. தவெக மாநாடு நடைபெறும் திடலுக்கு விஜய் வருகை தந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    மாநாட்டு திடலில் ராம்ப்-ல் நடந்து சென்ற விஜய்யை நோக்கி தொண்டர்கள் கட்சி துண்டை வீசிய நிலையில், அதனை தனது கழுத்தில் அன்போடு அணிந்த படி விஜய் நடந்து சென்றார்.

    விஜய் அவரது கட்சி கொள்கை மற்றும் அரசியல் சிந்தனைகளை தொண்டர்கள் முன் ஆவேச உரையாற்றினார். இவரது முதல் அரசியல் மாநாட்டிற்கு பல திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

    அதைத்தொடர்ந்து தற்பொழுது இயக்குனர் பா.ரஞ்சித் நடிகர் விஜய்-க்கு வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் " என்கிற புவியியல் அமைப்பின் அடிப்படையான தத்துவத்தை தாங்கி தன் முதல் அரசியல் கன்னி பேச்சை முடித்திருக்கும் #தமிழகவெற்றிக்கழகம் தலைவர் திரு. விஜய் அண்ணா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! "ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு " மற்றும் சாதி மத வர்க பிரிவினை வாதத்திற்க்கும் ஊழலுக்கும் எதிராக செயல்படப்போவதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். மகிழ்ச்சி" என பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • திடலுக்குள் அனுமதிக்காததால் வெளியே காத்திருந்தனர்.
    • விஜய்யை பார்த்து விட வேண்டும் என்று ஆசையோடு காத்திருக்கிறேன்.

    வேலூர் அருகே உள்ள சோழவரத்தை சேர்ந்தவர் சுகன்யா. இவரது மகள் லாவண்யா அடுக்கம்பாறையில் டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார். நேற்று இரவு தாயும் மகளும் வேலூரில் இருந்து புறப்பட்டு மாநாட்டு திடலுக்கு வந்தனர்.

    திடலுக்குள் யாரையும் அனுமதிக்காததால் திடலுக்கு வெளியே விடிய விடிய இருவரும் காத்திருந்தனர். இதுபற்றி லாவண்யா கூறியதாவது:-

    எனக்கு விஜய்யை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.இதுவரை நேரில் பார்த்தது கிடையாது. எப்படியாவது இந்த முறை நேரில் பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் புறப்பட்டு வந்தோம். எங்கள் ஊரில் இருந்து என்னைப்போல் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்துள்ளார்கள்.

    கண்விழித்து விடிய விடிய காத்திருந்தது கஷ்டமாக தெரியவில்லை. எப்படியாவது இன்று விஜய்யை பார்த்து விட வேண்டும் என்று ஆசையோடு காத்திருக்கிறேன். எனக்கு இப்போது 17 வயது ஆகிறது. வருகிற தேர்தலில் முதல் ஓட்டு போடுகிறேன். அதுவும் விஜய்க்கு போடப் போகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கட்சி நிர்வாகிகள் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
    • போலீசார் பேனரை கிழித்த நபர்கள் யாரென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    விக்கிரவாண்டியில் நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றி கழகம் சார்பில் பிரம்மாண்ட மாநாடு நாளை மறுநாள் 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அக்கட்சி நிர்வாகிகள் சார்பில் திருப்பூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே திருப்பூர் கரட்டாங்காடு பஸ் நிறுத்தம் பகுதியில் இருபுறமும் தமிழக வெற்றி கழகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட பேனரை மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தி உள்ளனர். 2 நாட்களில் மாநாடு நடைபெற உள்ள நிலையில் பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் அக்கட்சி நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தநிலையில் பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதியில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கட்சி நிர்வாகிகள் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். போலீசார் பேனரை கிழித்த நபர்கள் யாரென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தவெக முதல் மாநில மாநாடு வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது.
    • தொகுதிக்கு 2 பெண்கள் உட்பட 7 பேர் தற்காலிக பொறுப்பாளர்களாக நியமனம்.

    தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக 234 தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது.

    ஒரு சட்டசபை தொகுதிக்கு 2 பெண்கள் உட்பட 7 பேர் தற்காலிக பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    சட்டசபை தொகுதி அளவில் மாநாட்டு பணிகளை ஒருங்கிணைக்க தற்காலிக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், மாவட்ட தலைவர்கள், அணி தலைவர்களுடன் தற்காலிக பொறுப்பாளர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்று மாலை 4 மணிக்கு பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கொடிக்கம்ப பூஜை நடைபெறுகிறது.
    • மணி என்பவருக்கு சொந்தமான இடத்தை 5 ஆண்டுகளுக்கு தவெக குத்தகைக்கு எடுத்துள்ளது.

    த.வெ.க முதல் மாநாடு நடைபெறும் இடத்தில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இன்று மாலை 4 மணிக்கு பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கொடிக்கம்ப பூஜை நடைபெறுகிறது.

    மணி என்பவருக்கு சொந்தமான இடத்தை 5 ஆண்டுகளுக்கு தவெக குத்தகைக்கு எடுத்துள்ளது.

    முதல் மாநாடு நினைவாக, 100 அடி உயரத்தில் நிரந்தர கொடிக்கம்பம் நட திட்டமிடப்பட்டுள்ளது. புயல், மழையை தாங்கும் வகையில் விண்ட் வெலாசிட்டிக்கு ஏற்ப கொடிக்கம்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    8 அடி ஆழத்தில் கொடிக்கம்பத்தின் அஸ்திவாரம் அமைக்கப்படுகிறது. கொடியின் பீடம் 120 சதுர அடி அளவில் அமைக்கப்படுகிறது.

    தொடர்ந்து, வரும் 27ம் தேதி மாநாடு தொடங்கும் முன், திடலின் எதிரே 100 அடி உயர கொடிக்கம்பத்தில் விஜய் கொடி ஏற்றுகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் வாழ்த்து தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    • நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துப் புதிய முயற்சிகளும் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள்.

    ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக விஜய் தனது எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தொழில் வளத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கு ஆதாரமாக விளங்கும் தொழில் கருவிகளையும், பயன்படுத்தும் வாகனங்களையும், அறிவை போதிக்கும் புத்தகங்களையும் வணங்கி வழிபடும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகிய திருநாள்களில். நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துப் புதிய முயற்சிகளும் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக வெற்றி கழக (த.வெ.க) கட்சிக் கொடியின் அறிமுக விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
    • மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், பொதுமக்களுக்கு வேட்டி, சேலை அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.

    தமிழக வெற்றி கழக கட்சி தலைவர் நடிகர் விஜய் கட்சிக் கொடியை கடந்த மாதம் அறிமுகம் செய்தார்.

    இந்நிலையில் விஜய் ரசிகர்கள் அம்பத்தூரில் ஆயிரம் பேருக்கு கட்சிக் கொடி, சிக்கன் பிரியாணி வழங்கி நல திட்டங்களோடு கொண்டாடிய விஜய் ரசிகர்கள் பலரது கவனத்தை ஈர்த்தனர். 

    அம்பத்தூரில் தமிழக வெற்றி கழக (த.வெ.க) கட்சிக் கொடியின் அறிமுக விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

    த.வெ.க கட்சியின் மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் 1000 பேருக்கு சிவப்பு மஞ்சள் நிறத்தில் யானை உருவத்துடன் கூடிய த.வெ.க கட்சி கொடியை வழங்கினர்.

    முன்னதாக விழாவில் கலந்து கொண்ட கூலித் தொழிலாளிகளுக்கு கட்சி கொடியை வழங்கி மகிழ்ச்சி அடைந்த அவர்கள் பின்னர் பெண்கள், இளைஞர் என அனைவருக்கும் கட்சிக் கொடியை கொடுத்தனர். 

    இதனைத் தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், பொதுமக்களுக்கு வேட்டி, சேலை அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கியதோடு சுமார் ஆயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கினர்.

    • 21 கேள்விகளை கேட்டு புஸ்சி ஆனந்துக்கு டி.எஸ்.பி. சுரேஷ் கடிதம்.
    • போலீஸ் அனுமதி கிடைக்காததால் தாமதமாகி உள்ளது.

    சென்னை:

    தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான விஜய் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளார்.

    தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி நடத்தி வரும் விஜய் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்த பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறார்.

    கடந்த மாதம் 22-ந் தேதி கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொடி மற்றும் பாடலை அவர் அறிமுகம் செய்தார்.

    இதனை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடத்த அவர் முடிவு செய்துள்ளார்.

    இதற்காக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் நேரில் சென்று மனு அளித்தார்.

    கடந்த மாதம் 28-ந் தேதி அளிக்கப்பட்ட இந்த மனுவில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு அனுமதி கேட்கப்பட்டு உள்ளது. சுமார் 1½ லட்சம் பேர் மாநாட்டில் பங்கேற்க இருப்பதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமலை, டி.எஸ்.பி. சுரேஷ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டுக்கு அனுமதி கேட்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி வி.சாலை பகுதியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மாநாடு நடைபெறும் இடம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்து உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருத் போலீசார் மாநாட்டுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம் என்று கூறியிருந்தனர்.

    இதன் தொடர்ச்சியாக 21 கேள்விகளை கேட்டு விஜய் கட்சியின் மாநில பொதுச் செயலாளரான புஸ்சி ஆனந்துக்கு டி.எஸ்.பி. சுரேஷ் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

    அதில் மாநாடு நடை பெறும் இடத்தில் எத்தனை பேர் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்படு கின்றன? மாநாட்டில் பங்கேற்க உள்ள முக்கிய பிரமுகர்கள் யார்-யார்? என்கிற தகவல்களை தெரி விக்குமாறு கேட்டுள்ளனர்.

    மாநாட்டுக்கு வருகை தர உள்ள பெண்கள், குழந்தை கள் எத்தனை பேர்? மாநாட்டுக்கு வருபவர்க ளுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ள னவா? சாப்பாடு பொட்ட லங்களாக வழங்கப்படு கிறதா? இல்லை அங்கேயே சமைத்து வழங்கப்படுகி றதா? என்பது போன்ற கேள்விகளும் போலீசார் அனுப்பிய நோட்டீசில் இடம் பெற்றிருந்தன.

    இதைத் தொடர்ந்து போலீசார் கேட்டுள்ள 21 கேள்விகளுக்கு முறைப்படி பதில் தயாராகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்தாலோ சித்து பதிலை தயாரித்துள்ள னர். இதனை விஜய்யிடம் காண்பித்து நேற்று ஆலோ சனை நடத்தி உள்ளனர். அப்போது சட்ட நிபுணர் களுடனும் விஜய் ஆலோ சனை மேற்கொண்டார்.

    கட்சியினர் தயாரித்து கொடுத்த 21 கேள்விகளுக் கான பதிலையும் விஜய் பொறுமையாக படித்து பார்த்து அனுமதி வழங்கி உள்ளார்.

    இதைத் தொடர்ந்து இந்த பதில் மனு வருகிற வெள்ளிக்கிழக்குள் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளிக்கப்பட உள்ளது.

    கட்சியின் மாநில பொதுச் செயலாளரான புஸ்சி ஆனந்த் நேரில் சென்று பதில் மனுவை அளிக்கிறார்.

    விஜய் கட்சியின் இந்த பதில் மனுவை வாங்கிக் கொள்ளும் போலீஸ் அதிகாரிகள் அதனை முழுமையாக படித்து பார்த்து மாநாட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்க உள்ளனர்.

    இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக நாங்கள் கேட்டுள்ள கேள்விகளுக்கு அவர்கள் என்ன பதில் அளிக்கிறார்கள்? என்பதை முதலில் பார்க்க வேண்டும்.

    இதன் பிறகு பதில் மனுவில் உள்ள சாதக, பாதகங்களை ஆராய்ந்து பார்த்து மாநாட்டுக்கு அனுமதி வழங்குவது பற்றி முடிவெடுப்போம் என்றார்.

    இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூறும்போது, மாநாட்டுக்கான பணிகள், போலீஸ் அனுமதி கிடைக்காததால் தாமதமாகி உள்ளது. எங்களது பதில் கடிதத்தை ஏற்றுக் கொண்டு போலீசார் அனுமதி வழங்குவார்கள் என்றே எதிர்பார்க்கிறோம் என நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    • தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு.
    • 23-ந்தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நடைபெறுகிறது.

    விக்கிரவாண்டி:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி ஆரம்பித்துள்ளார். இதற்கான கொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கட்சியின் முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்.

    இதற்காக முதலில் திருச்சி, மதுரையில் இடங்களை பார்வையிடப்பட்டது. அங்கு இடம் கிடைப்பதில் பிரச்சனை எழுந்ததால் இறுதியாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி. சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டது.

    இங்கு அடுத்த மாதம் 23-ந்தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நடைபெறுகிறது. சுமார் 85 ஏக்கர் பரப்பளவில் இந்த இடம் அமைந்துள்ளது.

    இங்கு மாநாட்டிற்கு வரும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எளிதாக வந்து செல்வதற்கு வசதியாக மாநாட்டுத் திடலில் இருந்து உள்ளே செல்வதற்காக 3 வழிகளும் வெளியே செல்வதற்காக 3 வழிகளிலும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மாநாட்டிற்கு வரும் அனைவருக்கும் முறையான உணவு, குடிநீர், கழிவறை, மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இவற்றுடன் தேவையான ஆம்புலன்ஸ் வாகனங்களும் நிறுத்தப்பட உள்ளது.

    இதற்கான அனுமதி கேட்டு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் நேற்று கலெக்டர் அலுவலகத்திலும், மாநாடுக்கு பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவத்திலும் மனு அளித்தார்.

    இதனைத் தொடர்ந்து நேற்று மாலை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமால் மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள வி.சாலைக்கு நேரில் சென்றார். அங்கு அவர் மேற்கொண்டார்.

    மாநாட்டிற்கு வரும் வாகனங்களை நிறுத்த போதுமான இடவசதி உள்ளதா? பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் மாநாடு நடத்த போதிய இடவசதிகள் இருக்கிறதா? என்பதை குறித்து பார்வையிட்டார்.

    அப்போது அவருடன் விழுப்புரம் டி.எஸ்.பி. சுரேஷ், விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் பாண்டியன்,சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து மற்றும் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் உடனிந்தனர்.

    இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, `விஜய் கட்சி மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து கட்சி தொண்டர்கள் கலந்து கொள்ள முடியுமா? என்பது குறித்து ஆய்வு செய்து அதன் அறிக்கை காவல் துறை சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு மாநாடு நடத்த அனுமதி அளிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

    ×