என் மலர்
நீங்கள் தேடியது "நெல்லி"
- இந்த இரு ஆலயங்களையும் உருவாக்கியதே அங்கு வாழ்ந்த சித்தர்கள்தான்.
- குறிப்பாக தாத்திரீஸ்வரர் ஆலய தூண்களில் நிறைய சித்தர்கள் உள்ளனர்.
இந்த ஊரில் உள்ள "தாத்திரீஸ்வரர்" ஆலயமும் "ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள்" ஆலயமும் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழம்பெருமைக் கொண்டது.
இந்த இரு ஆலயங்களையும் உருவாக்கியதே அங்கு வாழ்ந்த சித்தர்கள்தான்.
நூற்றுக்கணக்கான சித்தர்கள் ஒருங்கே இத்தலத்தில் வாழ்ந்ததாக கருதப்படுகிறது.
அவர்களைப் பற்றிய தகவல்கள் இப்போதுதான் கொஞ்சம், கொஞ்சமாக வெளியில் தெரியத் தொடங்கியுள்ளது.
1972ம் ஆண்டு சுவடிகள் மூலம்தான் இங்கு உறைந்துள்ள சித்தர்கள் பற்றி கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆன்மிக ஆய்வாளர்கள் சித்தர் காட்டில் முகாமிட்டு இரு ஆலயங்களிலும் அங்குலம், அங்குலமாக தோண்டித் துருவிப் பார்த்தனர்.
அப்போது ஆலய கருங்கல் தூண்களில் சித்தர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டிருப்பதைக் கண்டு பிரமித்துப் போனார்கள்.
குறிப்பாக தாத்திரீஸ்வரர் ஆலய தூண்களில் நிறைய சித்தர்கள் உள்ளனர்.