search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வலி குறையும்"

    • மூட்டுப் பகுதிகளை ஒன்றிணைக்கவும் பிசியோதெரபி அவசியம்.
    • எலும்பு முறிவு காயங்களுக்கு பிசியோதெரபிதான் பரிந்துரைக்கப்படுகிறது.

    விபத்தில் சிக்கியோ, நிலைதடுமாறி கீழே விழுந்தோ உள் உறுப்புகளில் ஏற்படும் வலியை போக்குவதற்கு `பிசியோதெரபி' சிகிச்சை முறை உதவுகிறது. கடுமையான காயம் அல்லது நாள்பட்ட நோய் பாதிப்புக்குள்ளாகுபவர்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதிலும் பிசியோதெரபிக்கு முக்கிய பங்குண்டு. பிசியோதெரபி சிகிச்சை மூலம் கிடைக்கும் 6 முக்கியமான நன்மைகள் குறித்து பார்ப்போம்.

    1. வலி குறையும்:

    கை மற்றும் கால் மூட்டு பகுதிகள் மற்றும் மென்மையான திசு பகுதிகளில் ஏற்படும் வலியை போக்குவதற்கு பிசியோதெரபி உதவும். விபத்தில் சிக்கி காயமடைந்திருக்கும் மூட்டுப் பகுதிகளை ஒன்றிணைக்கவும் பிசியோதெரபி அவசியம் தேவைப்படும். மற்ற காயங்களால் ஏற்படும் வலியை போக்கவும் மருத்துவர்களின் ஆலோசனை படி பிசியோதெரபி சிகிச்சை முறையை பின்பற்றலாம். கடுமையான மற்றும் நாள்பட்ட வலியால் சிரமப்பட்டாலோ அல்லது மீண்டும் மீண்டும் வலியை அனுபவித்தாலோ பிசியோதெரபி சிகிச்சை தான் சரியான தீர்வாக அமையும்

    2. கடுமையான காயம்:

    எலும்பு முறிவு போன்ற கடுமையான காயங்களுக்கு பிசியோதெரபிதான் பரிந்துரைக்கப்படுகிறது. அது கால்களையும், மூட்டு பகுதிகளையும் ஒருங்கிணைத்து இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு வழிவகுக்கிறது. உடலின் உள் பகுதியில் இருக்கும் வலியை கூட படிப்படியாக குணப்படுத்திவிடும் வல்லமை இதற்கு உண்டு.

    3. தலைவலி:

    தலைவலியால் அடிக்கடி அவதிப்படுபவர்கள் பிசியோதெரபி சிகிச்சை முறையை தேர்ந்தெடுக்கலாம். குறிப்பாக ஒற்றை தலைவலியை நிரந்தரமாக போக்குவதற்கு துணை புரியும். உடலில் ரத்த ஓட்டம் சீராக செல்வதற்கும், மன அழுத்தத்தை குறைப்பதற்கும் உதவி செய்யும். இந்த இயற்கையான முறை ஹார்மோன்கள் சீராக செயல்படவும் துணைபுரியும்.

    4. அறுவை சிகிச்சை:

    முதியோர்கள் உள்பட அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாதவர்கள் மாற்று முறை சிகிச்சையாக பிசியோதெரபியை முயற்சிக்கலாம். இது அறுவை சிகிச்சையை போல் வேகமாக குணப்படுத்தாது. ஆனாலும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு ஏற்றதாக அமைந்திருக்கும். சிலருக்கு அறுவை சிகிச்சையும், பிசியோதெரபி சிகிச்சையும் தேவைப்படலாம். எந்த வகை சிகிச்சை செய்தாலும் முழுமையாக குணமடைந்த பிறகு பிசியோதெரபி செய்வது உடல் நலனுக்கு நல்லது.

    5. விளையாட்டு:

    பொதுவாக விளையாட்டு வீரர்கள் பயிற்சியின்போதோ, போட்டியின்போதோ காயங்கள் ஏற்பட்டு அவதிப்படுவதுண்டு. குறிப்பாக முழங்கை, விலா எலும்புகள், மூட்டு பகுதிகள் காயம் அடைவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. அவர்களுக்கு பிசியோதெரபிதான் காயங்களை குணப்படுத்தி நிரந்தர தீர்வை அளிக்கும்.

    6. நீரிழிவு:

    நீரிழிவு நோயாளிகள் சில சமயங்களில் முழங்கால்கள், தோள்பட்டை, கழுத்து, முதுகு வலியால் அவதிப்பட நேரிடும். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது இந்த பிரச்சினை ஏற்படும். இத்தகைய வலியை கட்டுப்படுத்த சில பிசியோதெரபி பயிற்சிகள் உதவும்.

    ×