என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமர்சீதா"

    • வெற்றியைக் காரணமாக்கி ஆசீர்வதித்தமையால் இதற்கு ‘வெற்றிலை’ என்று பெயர் வந்தது.
    • திருமணங்களில் வெற்றிலை தாம்பூலம் கொடுப்பது வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதால்தான்.

    ராமதூதன் அனுமானுக்கு துளசி மாலை சார்த்துவதால் ஸ்ரீராம கடாட்சம் பெற்று நல்ல கல்வி, செல்வம் ஆகியவை பெறலாம்.

    அசோக வனத்தில் சீதையைக் கண்டு ராமபிரானின் நிலையை விளக்கமாக எடுத்துரைத்ததைப் பார்த்த சீதா சந்தோஷமடைந்து அனுமனை ஆசீர்வதிக்க எண்ணி அருகில் வளர்ந்திருந்த கொடிகளின் இலைகளைக் கிள்ளி தலையில் தூவி ஆசீர்வதித்தாள்.

    'இந்த இலை உனக்கு வெற்றியைத் தரட்டும்' என்றாளாம்.

    வெற்றியைக் காரணமாக்கி ஆசீர்வதித்தமையால் இதற்கு 'வெற்றிலை' என்று பெயர் வந்தது.

    ஆகையால், பக்தர்கள் தன் வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அது வெற்றியடைய வேண்டும் என்ற காரணத்தினால் வெற்றிலை மாலையை சார்த்தி தன் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

    திருமணங்களில் வெற்றிலை தாம்பூலம் கொடுப்பது வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதால்தான்.

    எலுமிச்சம் பழம் ராஜாக்களுக்கு கொடுக்கக்கூடிய மரியாதை நிமித்த மான பழம். மற்றொன்று சம்ஹார தொழில் செய்யும் கடவுள்களுக்கு மிகவும் பிடித்தமான பழம்.

    நரசிம்மன், வராகம், கருடன் ஆகிய சக்திகள் அனுமானிடத்தில் ஒருங்கே அமைந்துள்ளதாலும், ஈஸ்வரனின் அம்சம் ஆனதாலும் இவருக்கு எலுமிச்சம் பழ மாலை சார்த்தி வழிபடுவோர் வாழ்வில் எதிரிகளின் தொல்லை நீங்கப் பெறுவர்.

    • ஆஞ்சநேயர், சிவபெருமானின் வடிவாக அவதரித்தவர் என்று புராணங்கள் எடுத்துரைக்கின்றன.
    • சஞ்சீவி ஆஞ்சநேயர் - இவரை வழிபட்டால் நோய் நொடிகள் விலகும்.

    ஆஞ்சநேயரின் சில வடிவங்களை வணங்கினால் அதற்கு ஏற்ற பலன்கள் நமக்கு கிடைக்கும்.

    ஆஞ்சநேயர், சிவபெருமானின் வடிவாக அவதரித்தவர் என்று புராணங்கள் எடுத்துரைக்கின்றன.

    ஆஞ்சநேயரின் சில வடிவங்கள் சிறப்பு வாய்ந்தவையாக இருக்கின்றன.

    எந்த வடிவ ஆஞ்சநேயரை வணங்கினால் என்ன கிடைக்கும் என்பதை பார்ப்போம்...

    1. வீர ஆஞ்சநேயர் - இவரை வழிபட்டால் தைரியம் வந்து சேரும்.

    2. பஞ்சமுக ஆஞ்சநேயர் - இவரை வழிபட்டால் பில்லி, சூன்யம், மாய மந்திரங்களால் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.

    3. யோக ஆஞ்சநேயர் - இவரை வழிபட்டால் மன அமைதியும், மன உறுதியும் கிடைக்கும்.

    4. பக்த ஆஞ்சநேயர் - இவரை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.

    5. சஞ்சீவி ஆஞ்சநேயர் - இவரை வழிபட்டால் நோய் நொடிகள் விலகும்.

    • ஆதித்ய ஹ்ருதயம் சூரியனைக் குறித்த ஒரு துதி.
    • இது விசேஷ மந்திரங்கள் அடங்கிய ஒன்று! ராமர் இதை ஓதி ராவணனை எதிர் கொண்டார்.

    ஸ்ரீ ராமர் ராவணனை எதிர்த்து போர் புரிந்த பொழுது, அகஸ்திய மாமுனிவர் ராமர் எதிரே தோன்றி ஆதித்ய ஹ்ருதயம் என்னும் சக்தி வாய்ந்த மந்திரத்தை உபதேசித்து அருளினார்.

    ஆதித்ய ஹ்ருதயம் சூரியனைக் குறித்த ஒரு துதி.

    இது விசேஷ மந்திரங்கள் அடங்கிய ஒன்று! ராமர் இதை ஓதி ராவணனை எதிர் கொண்டார்.

    ராவணன் மீது பலம் பொருந்திய பாணங்கள் பாய்ந்தாலும் அவன் சமாளித்து மீண்டும் மீண்டும் எழுவதைக் கண்டார் ராமர்.

    அருகில் இருந்த விபீஷணன் ராமரைக் குறிப்பாக பார்த்தார்.

    விபீஷணன் ஏதோ சொல்ல விரும்புவதைத் தெரிந்து கொண்ட ராமர் விபீஷணனை அருகில் அழைத்தார்.

    ராமரை நோக்கி விபீஷணன், "ஐயனே! அன்னையை அனவரதமும் (காம வசத்தால்) நினைத்துக் கொண்டே

    இருக்கிறான் ராவணன் உலகத்திற்கே அருள்பாலிக்கும் அன்னையை அவன் இடைவிடாது அடி மனத்திலிருந்து

    நினைப்பதால் இயல்பாகவே நினைப்பவர் தம்மைக் காக்கும் அன்னையின் சக்தி அவனைக் காக்கிறது

    ஆகவே அந்த ஆசையை முதலில் நீங்கள் அழித்தால், பின்னர் அவன் அழிந்து விடுவான்"

    என்று ராவணனின் உயிர் ரகசியத்தைக் கூறினார்.

    உடனே ராமர், ஒரு பாணத்தை எடுத்து அவன் நாபியை நோக்கி அடித்தார்.

    அடிவயிற்றில் இருந்த அன்னை நினைவு போனவுடன் அது ராவணன் மரணத்திற்கு வழி வகுத்தது.

    அடுத்து பத்து பாணங்களால் பத்துக் தலைகளையும், இருபது பாணங்களால் இருபது கைகளையும் அறுத்துக் தள்ளினார் ராமர்.

    ஆக முப்பத்தியொரு பாணங்களை ராமர் செலுத்தி ராவணனை அழித்ததை துளசிதாசர் அழகாக அரக்கன் அழிவின் ரகசிய விளக்கமாக ராமசரித மானசத்தில் கூறுகிறார்.

    ஆதித்ய ஹ்ருதயம் தரும் பலன்கள்

    இப்படி பலம் பொருந்திய எதிரியை அழிக்க  வழி வகுத்தது ஆதித்ய ஹ்ருதயம்,

    எதிரி அழியத் தகுந்த உபாயங்களைத் தானே கண்டு பிடித்து அழிக்கும் மந்திரம் ஆதித்ய ஹ்ருதயம்.

    ஆதித்ய ஹ்ருதயத்தைத் தினமும் ஓதினால் பெரும் பயன் பெறலாம் என மகான்களும் ஞானிகளும் காலம் காலமாகக் கூறி வருகின்றனர்.

    • தசரத மகாராஜாவின் இறந்த தினம் வந்தது.
    • சீதாதேவி, தசரத மகாராஜாவுக்கு சிரார்த்தம் செய்து வைத்தாள்.

    ராமர், சீதை, லட்சுமணன் ஆகிய மூவரும், 14 ஆண்டுகள் வனவாச காலத்தில் ஒவ்வொரு இடமாக சென்று கொண்டே இருந்தனர். அப்போது ராமபிரானின் தந்தையான தசரத மகாராஜாவின் இறந்த தினம் வந்தது.

    இந்த காலகட்டத்தில் ராமரும், லட்சுமணனும் கயா பகுதியில் இருந்தனர். தந்தைக்கு சிரார்த்தம் செய்வதற்கு தேவையான பொருட்களை எடுத்து வருவதற்காக, ராமரும், லட்சுமணரும் வனத்தின் அடர்ந்த பகுதிக்குச் சென்றனர். அவர்கள் வருவதற்கு கால தாமதம் ஆனது.


    அந்த காலத்தில் யாருக்காக சிரார்த்தம் செய்கிறோமோ, அவர்கள் நேரடியாக வந்து உணவை சாப்பிட்டு விட்டுச் செல்வார்கள். ராமரும், லட்சுமணரும் வர தாமதமான சமயத்தில், தசரத மகாராஜா வந்துவிட்டார்.

    அவர் சீதாதேவியிடம், "எனக்கு மிகவும் பசிக்கிறது" என்று கூற, சீதாதேவியும் உணவை தயார் செய்து தசரதருக்கு அளித்தார். அதற்கு கயாவில் உள்ள ஒரு வேதியரும் மந்திரம் சொல்லி நடத்திக் கொடுத்தார். இதையடுத்து தசரத மகாராஜா மகிழ்ச்சியுடன் பித்ருலோகம் திரும்பிச் சென்றார்.

    அதன்பிறகுதான் ராமரும், லட்சுமணரும் வந்து சேர்ந்தனர். அவர்களிடம் சீதாதேவி, தசரத மகாராஜா வந்ததைப் பற்றியும், அவருக்கு சிரார்த்தம் சொல்லி உணவிட்டதையும் கூறினார்.

    ராமர், "இதை எப்படி நம்புவது?" என்று கேட்க, அதற்கு சீதாதேவி, சிரார்த்தம் செய்து வைத்த வேதியரை சாட்சியாக அழைத்தாள். அந்த வேதியரோ, 'பெண் சிரார்த்தம் செய்து முடித்துவிட்டாள் என்று சொன்னால் தவறாகிவிடும்' என்று தயங்கி, "நான் சிரார்த்தம் செய்யவில்லை" என்று கூறிவிட்டார்.

    உடனே சீதாதேவி, பல்குனி நதியை சாட்சியாக அழைத்தாள். பல்குனி நதியோ, "வேதியர் சொல்வது சரிதான். நான் இந்த பெண் சிரார்த்தம் கொடுத்ததைப் பார்க்கவில்லை" என்று கூறிவிட்டது.

    சீதாதேவி இப்போது அக்னியை சாட்சியாக அழைத்தாள். அக்னி, 'நானும் பார்க்கவில்லை' என்று கூறியது. அடுத்ததாக பசுவை சாட்சிக்கு அழைத்தாள், சீதாதேவி. பசுவோ, 'அக்னி பகவானே 'நான் பார்க்கவில்லை' என்று நழுவி விட்டார்.

    நான் பார்த்ததாக சொன்னால், அது சரியாக இருக்காது' என்று கருதி, அதுவும் "நான் பார்க்கவில்லை" என்று சொன்னது.


    அப்பொழுது அங்கிருந்த அட்சய வடத்தை (ஆலமரம்) சீதாதேவி சாட்சியாக அழைக்க, அட்சய வடம் "சீதாதேவி, தசரத மகாராஜாவிற்கு உணவிட்டது சத்தியம்.. சத்தியம்.. சத்தியம்.." எனக் கூறியது.

    இதனால் ராமரும், லட்சுமணரும் மகிழ்ச்சியடைந்தனர். இதையடுத்து சீதாதேவி, வேதியரை நோக்கி "நீங்கள் சிரார்த்தம் செய்துவைத்து விட்டு, நான் செய்யவில்லை என்று கூறியதை ஏற்க முடியாது. எனவே நீ எப்போதும் பசியுடனேயே இருப்பாய்" என்று சபித்தாள்.


    அதேபோல் பல்குனி நதியை நோக்கி, "நீ இன்றில் இருந்து வறண்டு போவாய்" என்றும், அக்னியிடம், "நீ இன்று முதல் நல்லவற்றை மட்டுமின்றி, அசுத்தங்களையும் எரிப்பாய்" என்றும், பசுவை நோக்கி "இன்றுமுதல் உன்னை யாரும் பூஜிக்க மாட்டார்கள்" என்றும் சாபமிட்டாள்.

    ஆனால் அட்சய வடத்தைப் பார்த்து, "இனி உன் நிழலில் யார் ஒருவர் முன்னோருக்காக சிரார்த்த பிண்டம் வைக்கிறார்களோ, அவர்களின் 10 தலைமுறையினரும் மோட்சம் செல்வார்கள்" என்று வரம் அருளினாள்.


    வேதியர், அக்னி, பல்குனி நதி, பசு ஆகிய நால் வரும், சீதாதேவியிடம் தங்களின் வருத்தத்தை வெளிப்படுத்தினர். ராமரும் அவர்களுக்கு அருள்செய்யும்படி சீதாதேவியிடம் கூறினார். எனவே சீதாதேவி "யாரும் வருந்தவேண்டாம். வேதியரே.. கயா தலத்தில் கயாவாலி வேதியர்களுக்கு யார் அன்னம் கொடுக்கிறார்களோ, அவர்களின் வம்சத்தில் பஞ்சம் என்பதே இருக்காது.


    அக்னியே.. அனைத்து தேவ காரியங்களிலும் நீ இன்றி எதுவும் நடக்காது. பல்குனி நதியே.. நீ வறண்டு போனாலும், உன்னை நினைத்து யார் சங்கல்பம் செய்கிறார்களோ, அவர்களுக்கு கங்கையில் குளித்த பலன் கிடைக்கும்.

    பசுவே, உன் முன்பாக நின்று யாரும் உன்னை பூஜிக்க மாட்டார்கள். ஆனால் உன் பின்புறத்தை பூஜிப்பவர்களுக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும்" என்று வரம் அருளினாள்.

    ×