என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை பேருந்து"

    • பேருந்தில் இருக்கைக்கு கீழே இருந்த பலகை உடைந்து விபத்து.
    • ஓட்டை வழியே கீழே விழுந்த பெண் சிறிது தூரம் தொங்கியபடியே சென்றார்.

    சென்னையில் ஓடும் பேருந்தில் ஏற்பட்ட ஓட்டையில் பெண் பயணி சரிந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் செல்லும் தடம் எண் 59 பேருந்து அமைந்தகரை அருகே சென்றபோது பேருந்தில் இருக்கைக்கு கீழே இருந்த பலகை உடைந்து விபத்துக்குள்ளானது.

    ஓட்டையில் சறுக்கியபடி கீழே விழுந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டது. பேருந்தின் ஓட்டை வழியே கீழே விழுந்த பெண் சிறிது தூரம் தொங்கியபடியே சென்றுள்ளார்.

    இதில் அந்த பெண்ணுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    • ஓட்டுநர்கள், நடத்துநர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
    • வாராந்திர ஓய்வு நாட்களை மாற்றி அமைத்து சிறப்பு பேருந்துகளை இயக்கி செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் 320 கூடுதல் இணைப்பு பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

    அதன்படி, சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையங்களுக்கு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    ஓட்டுநர்கள், நடத்துநர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

    அத்தியாவசிய தேவைக்கு கிளை மேலாளர் மற்றும் மண்டல மேலாளரிடம் முன் அனுமதி பெற்று விடுப்பு எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    வாராந்திர ஓய்வு நாட்களை மாற்றி அமைத்து சிறப்பு பேருந்துகளை இயக்கி செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நாளை முதல் ஜனவரி 13ம் தேதி வரை கூடுதல் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

    ×