search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகர்கோவில் நாகராஜா"

    • நாகராஜா திருக்கோவில் நாகர்கோவில் நகரத்தின் மத்தியில் அமைந்துள்ளது.
    • நாகராஜா திருக்கோவில் கி.பி.16ஆம் நூற்றாண்டு வரை சமணக் கோவிலாக இருந்தது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊருக்கு பெயர்க் காரணமாய் திகழ்வது அருள்மிகு நாகராஜா திருக்கோவில்.

    நாகராஜா திருக்கோவில் நாகர்கோவில் நகரத்தின் மத்தியில் அமைந்துள்ளது.

    இத்திருக்கோவில் கிழக்கு பார்த்து இருந்தாலும் தெற்கு திசையில் உள்ள கோபுரவாசல் வழியே பக்தர்கள் தரிசனத்துக்கு செல்வது வழக்கமாக இருக்கிறது.

    தலபுராணம்

    நாகராஜா திருக்கோவில் கி.பி.16ஆம் நூற்றாண்டு வரை சமணக் கோவிலாக இருந்தது.

    ஆரம்பகாலத்தில் நாகராஜா என்னும் தர்ணேந்திரன் இக்கோவிலின் முக்கிய தெய்வமாக இருந்தது.

    16ஆம் நூற்றாண்டு கல்வெட்டு குணவீரபண்டிதன், கமலவாகபண்டிதன் இருவரும் நாகராஜா பூஜையை மேற்பார்வையிட்ட சமணர்கள் எனத் தெரிவிக்கிறது.

    இவர்கள் ஆச்சாரியார்களாவர்.

    ஐநூறு ஆண்டுகளுக்கு முன் சமண தெய்வமாகவும் பாமர தெய்வமாகவும் இக்கோவிலில் இருந்திருக்கிறது.

    நாகர் வழிபாடு அப்போதே பரவியிருக்கலாம்.

    புராண கதைசமணத்தின் 23ஆம் தீர்தங்கரர் பார்சுவநாதர் இவருக்கு பிறவிகள் தோறும் துன்பமளித்தவர் சமடன்.

    இவர் கடைசி பிறவியில் மகிபாலன் என்னும் பெயரில் பிறக்கிறார் அப்போது பசுவதநாதருக்கு தாத்தா முறையாகிறது.

    மகிபாலன் ஒரு மரக்கட்டையை நெருப்பிலிட்டார், பார்சுவநாதனாக இருந்த சிறுவன் அந்த கட்டையில் இரு பாம்புகள் உள்ளன அவற்றை நெருப்பில் போடாதே என்கிறான் ஆனால் மகிபாலன் கேட்கவில்லை அதனால் பாம்புகள் இறக்கின்றன பார்சுவன் ஓதிய மந்திர மகிமையால் ஆண் பாம்பு நாகராஜனாகவும் (தர்ணேந்திரன்) பெண் பாம்பு நாகராணியாகவும் (பத்மாவதி) பிறக்கின்றனர்.

    ×