என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » ராஜசேகரபாண்டியன்
நீங்கள் தேடியது "ராஜசேகரபாண்டியன்"
- சேரன் இயக்கிய வெப் சீரிசில் ஆரி நடித்திருந்தார்.
- இந்த படத்தை ராஜசேகரபாண்டியன் இயக்குகிறார்.
சேரனின் ஜர்னி வெப் சீரிசை தொடர்ந்து நடிகர் ஆரி நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஆரிக்கு ஜோடியாக லக்ஷமி மேனன் நடிக்கிறார். இந்த படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/02/07/2007700-aari-new-movie.webp)
மெட்ராஸ் டெக் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் ராஜசேகரபாண்டியன் இயக்குகிறார். படக்குழு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய இதர தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
முன்னதாக நடிகர் ஆரி சேரன் எழுதி, இயக்கிய வெப் சீரிஸ்- சேரனின் ஜர்னி-யில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சோனி லிவ் ஒ.டி.டி. தளத்தில் வெளியான இந்த வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது.
×
X