search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குதிரைவாலி ராகி களி"

    • உடல் எடையை குறைக்க உதவும் குதிரைவாலி ராகி களி.
    • உடலுக்கு தேவையான புரதச்சத்து, நார்ச்சத்தை கொண்டுள்ளது.

    அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது கம்பு, சோளம், வரகு, சாமை, திணை, குதிரைவாலி, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் நம் உடலுக்கு தேவையான புரதச்சத்து மற்றும் நார்ச்சத்தை அதிகம் கொண்டுள்ளது. இதனை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்தக் கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.

    தேவையான பொருட்கள்:

    குதிரைவாலி அரிசி- ஒரு கப்

    கேழ்வரகு மாவு- ஒன்றரை கப்

    உப்பு- தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் குதிரைவாலி அரிசியை 3 முறை நன்றாக கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை அரைமணிநேரம் மூடி போட்டு ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு பங்கிற்கு 3 மக்டங்கு தண்ணீர்விட்டு வேக வைத்துக்கொள்ள வேண்டும். அரைப் பதத்திற்கு அரிசி வெந்தவுடன் கேழ்வரகு மாவைச் சேர்த்து கெட்டி இல்லாமல் மிதமான தீயில் வைத்து  கிளற வேண்டும். பருப்பு மத்து கொண்டு நன்றாக கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

    அவ்வாறு கிளறும்போது ஒட்டாமல் நன்றாக வெந்துவரும் அப்போது தண்ணீரில் கையை நனைத்துவிட்டு, களியை தொட்டுப்பார்த்தால், அது கையில் ஒட்டாமல், அல்வா பதத்தில் இருக்கவேண்டும். குதிரைவாலி ராகி களி தயார்.

    இந்த களியை கீரைக்குழம்பு, மீன்குழம்பு, கறிக்குழம்பு, கருவாட்டுக்குழம்பு ஆகியவை வைத்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும். ஆனால் உடல் எடை குறைக்கும் முயற்சியை மேற்கொள்பவர்கள் இதனை மோரில் சின்னவெங்காயம் சேர்த்து இந்த களியையும் கரைத்து காலை வேளைகளில் குடிக்கலாம். கீரை வகைகளை சைட் டிஷ்சாக வைத்து மதிய சாப்பாடாகவும் சாப்பிடலாம்.

     பலன்கள்

    கால்சியம் இருப்பதால் எலும்புகளுக்கு வலு சேர்க்கும். இரும்புச்சத்து இருப்பதால் ரத்த உற்பத்திக்கு உதவும். கொழுப்பைக் குறைக்கும். குதிரைவாலியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்னை வராமல் தடுக்கும். கேழ்வரகு உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தந்து வலுவைச் சேர்க்கும். எடை குறைக்க நினைப்பவர்கள் தினமும் சாப்பிடலாம். பெண்கள், இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்ல உணவு.

    ×