search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "8-ம் திருமுறை"

    • இறைவனை போற்றிப் பாடிய மாணிக்கவாசகர்.
    • திருவாசகம், பன்னிரு திருமுறைகளில் 8-ம் திருமுறையாக போற்றப்படுகிறது.

    மனதை உருகச்செய்யும் செய்யுள்களால் இறை வனை போற்றிப் பாடிய மாணிக்கவாசகர், அதனை 'திருவாசகம்' என்ற பெயரில் தொகுத்தார். இந்த திருவாசகம், பன்னிரு திருமுறைகளில் 8-ம் திருமுறையாக வைத்து போற்றப்படுகிறது. இந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.

    பாடல்:-

    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

    பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

    வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

    செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்

    எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்.

    விளக்கம்:-

    புல்லாகவும், சிறு செடிகளாகவும், புழுவாகவும், மரமாகவும், எத்தனை மிருகங்கள் உள்ளனவோ அவை அனைத்துமாகவும், பறவைகளாகவும், பாம்பாகவும், கல்லாகவும், அதன் அடியில் வாழும் உயிராகவும், மனிதரவும், உடல் நீங்கிய பேய்களாகவும், பலதரப்பட்ட கணக்கூட்டங்களாகவும், வலிமை மிகுந்த அசுரர்களாகவும், முனிவராகவும், தேவராகவும், அசைவதும், அசைவற்றதும் கொண்டு உருவான இந்த பிரபஞ்சம் முழுவதும் சென்று, எல்லாப் பிறப்பும் பிறந்து களைத்து விட்டேன், எம்பெருமானே.

    ×