search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வறண்ட கூந்தல் மென்மையாக"

    • முடி ஈரப்பதத்தை இழக்காமல் இருக்க, ஆப்பிள் சீடர் வினிகர் பெஸ்ட் சாய்ஸ்.
    • வாரம் ஒருமுறை ஓர் அவகாடோ போட்டு அப்ளை செய்யவும்.

    இயற்கையிலேயே மென்மையான கேசம் கொண்ட பெண்களுக்குக்கூட, பனிக்காலத்தில் கேசத்தின் ஈரத்தன்மை போய், வறண்ட சருமமாக மாறிவிடும். இதில் இருந்து தற்காத்துக் கொண்டு, உங்கள் முடியைப் பட்டுப்போல மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றசில டிப்ஸ்…

    * முடி தன் இயற்கையான ஈரப்பதத்தை இழக்காமல் பாதுகாக்க, ஆப்பிள் சீடர் வினிகர் பெஸ்ட் சாய்ஸ். இது, அனைத்து சூப்பர் மார்க்கெட் மற்றும் காஸ்மெடிக் கடைகளில் கிடைக்கும். இதனுடன் சம அளவு தண்ணீர் கலந்து… தலைக்கு குளித்து முடித்ததும் கடைசியாக இதனை தலையில் விட்டு அலசவும். வறண்டு டல்லாக இருக்கும் முடிக்குப் புத்துயிர் கொடுக்கும்.

    * வாரம் ஒருமுறை ஓர் அவகாடோ பழத்தின் சதைப்பகுதியுடன், முடியின் அளவைப் பொறுத்து ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் தயிர் கலந்து முடிக்கு பேக் போல அப்ளை செய்யவும். அரை மணி நேரத்துக்குப் பின் தரமான ஷாம்புவால் முடியை அலசவும். இது சிறந்த கண்டிஷனர்.

    * ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து, அதனுள் ஒரு சிறிய கிண்ணத்தில் 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்ப்பால் ஊற்றி சூடுபடுத்தவும். வெதுவெதுப்பான சூட்டில் இந்தப் பாலை தலையில் தடவி, வெந்நீரில் பிழிந்தெடுத்த டவலினால் தலையைக் கட்டி, இருபது நிமிடங்கள் கழித்து அலசலாம்.

    * கால் கப் பாதாம் எண்ணெயுடன், ஒரு முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்துக் கலந்து பேஸ்ட் செய்து, தலையிலும் முடியிலும் அப்ளை செய்து 40 நிமிடங்கள் ஊறவைத்து அலசவும். இது கேசத்தை நன்றாகக் க்ளீன் செய்வதுடன், ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.

    * சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கக்கூடிய பிளெய்ன் மயோனைஸ் (சில்லி, சாக்லேட் போன்ற ஃப்ளேவர்கள் தவிர்க்கவும்) வாங்கி, இரண்டு ஸ்பூன் மயோனைஸுடன் ஒரு ஸ்பூன் ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெயைக் கலந்து, தலையில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து அலசினால், முடியானது மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். முட்டையின் வெள்ளைக் கருவில் ஒரு ஸ்பூன் வினிகர் சேர்த்து நன்றாக அடித்துக் கலக்கினால், ஹோம் மேட் மயோனைஸ் ரெடி.

    ×