என் மலர்
நீங்கள் தேடியது "ஆணாதிக்கம்"
- பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் குறித்து வெளிப்படையாக பேசுபவர் ராதிகா
- நடிகர்கள் திடீரென மூட் சரியில்லை என சென்று விடுவார்கள் என்றார் ராதிகா
மராத்தி, தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழி திரைப்படங்களில் நடித்தவர் 38 வயதான ராதிகா ஆப்தே (Radhika Apte).
ராதிகா, வேலூரில் பிறந்தவர். ராதிகாவின் பெற்றோர் வேலூர், கிறிஸ்துவ மருத்துவ கல்லூரியில் மருத்துவர்களாக பணியாற்றியவர்கள்.
திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் சம்பவங்களுக்கு எதிராக தயங்காமல் குரல் கொடுத்து வருபவர், ராதிகா ஆப்தே.
திரைத்துறையில் தனது போராட்டங்கள் மற்றும் அனுபவங்கள் குறித்து ஒரு பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அதில் ராதிகா தெரிவித்ததாவது:
பல மொழி திரைப்படங்களில் நான் நடித்துள்ளேன். ஆனால், நான் மிகவும் போராட வேண்டி இருந்தது "டோலிவுட்" (Tollywood) எனப்படும் தெலுங்கு திரைப்பட உலகம்.
அதிக ஆணாதிக்கம் நிறைந்த திரைத்துறை தெலுங்கு படத்துறைதான்.
பெண்களை அவர்கள் நடத்தும் விதம் சிறிதும் சகித்து கொள்ள முடியாது. பெண்களுக்கு அதில் வழங்கப்படும் பாத்திர படைப்புகளும் படத்தில் பங்கு பெறும் நடிகர்கள் நடந்து கொள்ளும் விதமும் எனக்கு பிடிக்காது.
படப்பிடிப்பு தளங்களில் மரியாதையாக நடத்த மாட்டார்கள். நடிகர்கள் திடீரென "மூட்" சரியில்லை என கூறி சென்று விடுவார்கள். ஆனால், படக்குழுவினர் நடிகர்களை எதுவும் கேட்க மாட்டார்கள்.
நான் தொடர்ந்து அங்கு பிரச்சனைகளை அனுபவித்தேன். இறுதியில், எனக்கு டோலிவுட் ஒத்து வராது என உணர்ந்து, தெலுங்கு படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

2016ல் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த "கபாலி", திரைப்படத்தில் "குமுதவல்லி" எனும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து விமர்சகர்களை ஈர்த்தவர் ராதிகா ஆப்தே என்பது குறிப்பிடத்தக்கது.