என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அதிமுக முன்னாள் அமைச்சர்கள்"
- 4 அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
- செந்தில் பாலாஜி, ராஜேந்திரன், கோவி. செழியன், சா.மு. நாசர் ஆகியோர் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டனர்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதில், 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டது.
4 பேர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். இதில், செந்தில் பாலாஜி, ராஜேந்திரன், கோவி. செழியன், சா.மு. நாசர் ஆகியோர் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டனர்
புதிய அமைச்சர்கள் 4 பேருக்கு நேற்று ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள கோவி செழியனுக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் வைகைச் செல்வன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நானும் கோவி. செழியனும் ஒரே நாளில் 'முனைவர்' பட்டம் பெற்றோம். எளியவன் நான் பள்ளிக்கல்வி அமைச்சராகப் பணியாற்றினேன்.
இப்போது அவர் உயர்கல்வி அமைச்சராகி இருக்கிறார். எனது மனமார்ந்த பாராட்டுக்கள்..!
பட்டியலினத்தவருக்கு உயர்கல்வி அமைச்சர் பதவி.. பாராட்டாமல் இருக்க முடியுமா..?" என்றார்.
- கரூர் கோர்ட்டில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருந்தது.
- இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் இன்று ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் 5 பேருக்கு எதிரான வழக்கை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
கரூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்துசெய்யுமாறு சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் இன்று ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளது.