என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நேர்முகத்தேர்வு முடிவுகள்"
- ஒருங்கிணைந்த குரூப் 2 பணியிடங்களுக்கான முதல்கட்ட நேர்முகத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதற்கான முடிவை டி.என்.பிஎஸ்.சி வலைதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
- நேர்காணல் கொண்ட 161 பதவிகளுக்கு மட்டும் 1:3 என்ற அளவில், 483 தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிப்ரவரி 12 முதல் நேர்காணல் நடத்தப்பட்டது.
ஒருங்கிணைந்த குரூப் 2 பணியிடங்களுக்கான முதல்கட்ட நேர்முகத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதற்கான முடிவை டி.என்.பிஎஸ்.சி வலைதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். நேர்முகத்தேர்வு இல்லாத பணியிடங்களுக்கான முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை
அரசுத் துறைகளில் குரூப் 2 மற்றும் 2ஏ பணி நிலையில் காலியாக உள்ள 6,151 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், சுமார் 9 லட்சம் பேர் தேர்வை எழுதினர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, அக்டோபர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகின. குரூப் 2, 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 11-ம் தேதி வெளியாகியது.
நேர்காணல் கொண்ட 161 பதவிகளுக்கு மட்டும் 1:3 என்ற அளவில், 483 தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிப்ரவரி 12 முதல் நேர்காணல் நடத்தப்பட்டது.
நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கான முடிவுகள் தேர்வாணைய வலைதளத்தில் இருவழித் தொடர்பு முறையில் (Interactive Mode) வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேர்காணல் பதவிகளுக்கு மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. நேர்காணல் அல்லாத பணிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியாகவில்லை, இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.