என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மகேந்திரஜீத் சிங் மாளவியா"
- காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் மகேந்திரஜீத் சிங் மாளவியா இன்று பாஜகவில் சேர்ந்தார்.
- அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க காங்கிரஸ் கட்சி மறுத்ததால் தான் வேதனை அடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் மகேந்திரஜீத் சிங் மாளவியா இன்று பாஜகவில் சேர்ந்தார்.
நேற்று (பிப் 18) டெல்லியில் பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்த மாளவியா, இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.
இன்று ஜெய்ப்பூரில் உள்ள பாஜக அலுவலகத்தில், ராஜஸ்தான் பாஜக பொறுப்பாளர் அருண் சிங், மாநில பாஜக தலைவர் சிபி ஜோஷி ஆகியோர் முன்னிலையில் அவர் பாஜகவில் சேர்ந்துள்ளார்.
பழங்குடியினர் அதிகம் வசிக்கும் தெற்கு ராஜஸ்தானின் முக்கிய பழங்குடி தலைவராக இருந்த மாளவியா பாஜகவில் சேர்ந்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
பாஜகவில் இணைந்த பின்னர் பேசிய மாளவியா, "பழங்குடியினர் பகுதியில் பாஜக மற்றும் மோடியைத் தவிர வேறு யாரும் வேலை செய்ய முடியாது. மோடி அரசின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டதால்தான் பாஜகவில் சேர முடிவு செய்தேன்" என்று கூறியுள்ளார்.
மேலும், "அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க காங்கிரஸ் கட்சி மறுத்ததால் தான் வேதனை அடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மாளவியா 2008 முதல் காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். அவர் 2008 முதல் 2013 வரையிலும், மீண்டும் 2021 முதல் 2023 வரையிலும் கேபினட் அமைச்சராக இருந்துள்ளார். 1998-ல் பன்ஸ்வாரா தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் மக்களவைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.