என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சன் பிக்சர்ஸ்"
- சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் வருகிற 26-ந்தேதி ரிலீஸ் ஆகிறது.
- ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
தனுஷ் நடித்து இயக்கியுள்ள படம் ராயன். கலாநிதிமாறனின் சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் உலகம் முழுவதும் வருகிற 26-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.
டிரைலர் தொடக்கத்தில் செல்வராகவன் தனுஷிடம் காட்டுல ஆபத்தான மிருகம் எது தெரியுமா? என கேட்பது போல் டிரைலர் தொடங்குகிறது. அதன்பின் வெட்டுக்குத்து என நகர்கிறது. எஸ்ஜே சூர்யா தைரியம் இருந்தால் எனது இடத்தில் வந்து செய்யப்பட்டும் என கர்ஜிக்க, அதன்பின் தனுஷ் ரவுடி கூட்டத்தை வேட்டையாடுவது போன்று முடிவடைகிறது.
டிரெய்லரில் எஸ்ஜே சூர்யா கேங்ஸ்டாராக வருகிறார். பிரகாஷ் ராஜ், சரவணன், சந்திப் கிஷாண், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் வருகின்றனர்.
படத்தில் எஸ்.ஜே. கேங்ஸ்டாராக படம் மூலம் மிரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ், சந்திப் கிஷாண், காளிதாஸ் ஜெயராம் ஆகியோருக்கும் எஸ்.ஜே. சூர்யாவுக்கும் இடையிலான பிரச்சனை படமாக நகரும் என எதிர்பார்க்கலாம்.
பருத்திவீரனில் சரவணன் கேரக்டர் பேசப்பட்டது போன்று, இந்த படத்திலும் சரவணன் கேரக்டர் பேசப்படலாம்.
புதுப்பேட்டை, வட சென்னை போன்று கேங்ஸ்டார் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஸ்ருதியும் ஐதராபாத் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 'சூப்பர்ஸ்டார் -லோகி சம்பவம் பிகின்ஸ். கூலி ஷூட்டிங் இன்று தொடங்கியது' என்ற கேப்ஷனுடன் அந்த போஸ்டரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்கத்தில் வேட்டையன் படத்தில் பிசியாக நடித்து வரும் ரஜினிகாந்தின் 171 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கூலி என்று பெரியரிட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று [ஜூலை 5] தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தொடங்க உள்ளதாக படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது.
அதன்படி படப்பிடிப்பிற்காக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட்டார் ரஜினிகாந்த். இந்த படத்தில் கமல் ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளதாக முன்னதாக கூறப்பட்டுவந்த நிலையில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஸ்ருதியும் ஐதராபாத் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு சுமார் 35 நாட்கள் நடக்க உள்ள படப்பிடிப்பின் ஆரம்பக்கட்ட பணிகள் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெறுகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு துவங்கிவிட்டது என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
'சூப்பர்ஸ்டார் - லோக்கி சம்பவம் பிகின்ஸ். கூலி ஷூட்டிங் இன்று தொடங்கியது' என்ற கேப்ஷனுடன் அந்த போஸ்டரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே, 'கூலி' படத்தில் சினிமா ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் பணியாற்ற உள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இதுவரை யூடியூபில் 50 லட்ச பார்வைகளை பெற்று டிரெண்டிங் நம்பர் 1 இல் உள்ளது.
- சன் பிக்சர்ஸ் இத்திரைப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் அவரது படங்களின் ப்ரோமோ வீடியோவை மிக வித்தியாசமாகவும் நேர்த்தியாகவும் கதையோடு ஒரு அங்கமாக அந்த ப்ரோமோ வீடியோக்களை எடுப்பதில் திறம் பெற்றவர். அதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று எல்லாரும் எதிர்பார்க்கப்பட்ட தலைவர் 171- வது படமான கூலி திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானது.
இதற்கு முன் விக்ரம் படத்தின் ப்ரோமொ வீடியோவில் வரும் 'ஆரம்பிக்கலாங்களா', லியோ படத்தில் வரும் 'ப்லடி ஸ்வீட்' வசனங்கள் மிகவும் வைரலாகியது.
அதைத் தொடர்ந்து கூலி படத்தின் ப்ரோமோ வீடியோவில் ஒரு கேங்கஸ்டர் கும்பல் துறைமுகத்தில் பல வகையான தங்கத்தை கடத்தி அதை அனுப்புவதற்கு பேக் பண்ணி கொண்டு இருக்கின்றனர். அப்பொழுது ஒரு ஃபோன்காலில் துறைமுகத்தில் செக்யூரிட்டி அடித்து விட்டு ஒருவன் உள்ளே வருகிறான் என்ற தகவலை கூறுகிறான்.
ரஜினிகாந்த் உள்ளே வந்து அனைவரையும் மாஸாகவும், ஸ்டைலாகவும் அடிக்கிறார். அடிக்கும் பொழுது 1982 ஆம் ஆண்டு வெளிவந்த 'ரங்கா' படத்தில் புகழ் பெற்ற 'அப்பாவும் தாத்தாவும்" என்ற வசனத்தை பேசிக்கொண்டே அடிக்கிறார்.
அடித்து முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜின் ஃபைனல் டச்சாக இதில் ரஜினிகாந்து 'முடிச்சடலாம் மா!!' என்ற வசனத்தை பேசுகிறார். தற்பொழுது இந்த டைடில் டீசர் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. . இதுவரை யூடியூபில் 50 லட்ச பார்வைகளை பெற்று டிரெண்டிங் நம்பர் 1 இல் உள்ளது.
ரஜினிகாந்த இதற்கு முன் உழைப்பாளி, மன்னன், முள்ளும் மலரும் போன்ற படங்களில் கூலி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எந்த மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
இதற்குமுன் 1983 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் மன்மோகன் தேசாய் இயக்கத்தில் இந்தி திரைப்படமான கூலி வெளியாகியது.
1991 ஆம் ஆண்டு சுரேஷ் பாபு தயாரிப்பில் ராகவேந்திரா ராவ் இயக்கத்தில் வெங்கடேஷ் மற்றும் தபு நடிப்பில் தெலுங்கு திரைப்படமான கூலி வெளியாகியது.
1995 ஆம் ஆண்டு பி. வாசு இயக்கத்தில் சரத்குமார் மற்றும் மீனா இணைந்து நடித்து வெளியான தமிழ் திரைப்படமான கூலி வெளியாகியது.
இதைத்தொடர்ந்து தற்பொழுது ரஜிகாந்தின் 171 - வது படத்திற்கும் 'கூலி' என்ற தலைப்பை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் லோகேஷின் சினிமாடிக் யூனிவர்சில் சேராது என தெரிவித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். அன்பறிவு ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்ற போகிறார்கள். சன் பிக்சர்ஸ் இத்திரைப்படத்தை தயாரிக்கவுள்ளனர். இப்படத்தை குறித்து ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இதே போல தலைவர் 171 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சுவாரஸ்யமான கேரக்டர் ரோலில் நடிக்க உள்ளார்.
- இப்படத்திற்கான 'டைட்டில்' ஏப்ரல் 22 -ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இந்த படத்துக்குப் பிறகு ரஜினி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
ரஜினி படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
ரஜினியின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் கடந்த வாரம் வெளியானது. மேலும் ரசிகர்களிடம் இது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.இதில் ரஜினி தனது கைகளில் தங்க கடிகாரம் - கை விலங்கு அணிந்து இருந்தார்.
இதனை பார்த்த ரசிகர்களுக்கு பல்வேறு யூகங்கள் தோன்றின. மேலும் அந்த படத்தில் ரஜினிகாந்த் 'தாதா' வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் பரவியது.
மேலும் தலைவர் -171 படத்துக்கு 'கழுகு' என்று 'டைட்டில்' பெயர் வைக்கப்பட உள்ளது எனவும் தகவல் வெளியானது. இந்த டைட்டில் பெயரை லோகேஷ் கனகராஜ் பரிந்துரைத்து உள்ளதாக கூறப்படுகிறது.ஏற்கனவே 'கழுகு" என்ற பெயரிலான படத்தில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்து 1981- ம் ஆண்டு அந்த படம் வெளியானது.
மேலும் தலைவர் -171 படம் தங்கக் கடத்தல் பின்னணி கதையை கொண்டு உருவாக உள்ளதாகவும் இந்தப் படத்தில் ரஜினி மாபியா டானாக நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தலைவர் 171 படத்தில் 80 களில் ரஜினிகாந்தின் பாக்ஸ் ஆபிஸ் பட போட்டியாளரான நடிகர் மோகனை இப்படத்தில் வில்லனாக நடிக்க இயக்குனர் லோகேஷ் அணுகினார். தற்போது ரஜினிக்கு வில்லனாக நடிக்க மோகன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
மோகன் நடிப்பதற்கான சம்பள பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருகிறது. பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்ததும் நடிகர் மோகன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என தெரிகிறது.
இதே போல தலைவர் 171 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சுவாரஸ்யமான கேரக்டர் ரோலில் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் இந்தி நடிகர் ஷாருக்கான் 'கேமியோ' பாத்திரத்தில் நடிக்க வைக்கவும் ஏற்பாடு நடந்து வருகிறது. இப்படத்திற்கான 'டைட்டில்' ஏப்ரல் 22 -ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- “உங்களை இயக்குவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை” என இயக்குநர் செல்வராகவன் நடிப்பது குறித்து தனுஷ் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
- இப்படம் தமிழ், தெலுங்கு,ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"உங்களை இயக்குவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை" என 'ராயன்' படத்தில் இயக்குநர் செல்வராகவன் நடிப்பது குறித்து X தளத்தில் நடிகர் தனுஷ் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
"வாய்ப்பிற்கு நன்றி இயக்குநர் சார். உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன்" என இயக்குநர் செல்வராகவன் அதற்கு பதிலளித்துள்ளார்.
தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்திற்கு ராயன் என பெயரிட்டுள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு,ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள இத்திரைப்படம் இந்த ஆண்டே வெளியாகும் என பட நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், 'ராயன்' படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவை தொடர்ந்து, இயக்குனர் செல்வராகவனும் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில், செல்வராகவனின் போஸ்டருடன், "ராயன் உலகத்தில் செல்வராகவனை அறிமுகம் செய்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
- ராயன் படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.
- 'ராயன்' படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 19ம் தேதி வெளியானது. டி50 என அறியப்பட்ட இப்படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
ராயன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, தமிழ், தெலுங்கு,ஹிந்தி ஆகிய மூன்று மொழியில் இப்படம் வெளியாகும் என தெரிவித்துள்ளது.
இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள இத்திரைப்படம் இந்த ஆண்டே வெளியாகும் என பட நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே, ராயன் படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாக போஸ்டருடன் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், 'ராயன்' படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவை தொடர்ந்து, இயக்குனர் செல்வராகவனும் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில், செல்வராகவனின் போஸ்டருடன், "ராயன் உலகத்தில் செல்வராகவனை அறிமுகம் செய்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
- D50 என அறியப்பட்ட இப்படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது.
- சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. D50 என அறியப்பட்ட இப்படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துவங்கியது. அது தொடர்பான போஸ்டரை படக்குழு அப்போது வெளியிட்டிருந்தது. அதில் தலையில் கேப் அணிந்து தனுஷ் இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் ராயன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, தமிழ், தெலுங்கு,ஹிந்தி ஆகிய மூன்று மொழியில் இப்படம் வெளியாகும் என தெரிவித்துள்ளது.
இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கவுள்ள இத்திரைப்படம் இந்தாண்டே வெளியாகும் என பட நிறுவனம் அறிவிப்பு
இதற்கு முன்னதாக ராஜ்கிரண், ரேவதி உள்ளிட்டவர்களை வைத்து தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி படம் சிறப்பான வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்