என் மலர்
நீங்கள் தேடியது "X கணக்கு"
- பல கணக்குகள், பதிவுகளை தற்காலிகமாக முடக்குவதாக X நிறுவனம் தெரிவித்துள்ளது.
- முடக்கப்பட்ட பல கணக்குகள் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புடையவை
இந்திய அரசின் உத்தரவுகளை ஏற்று, இந்தியாவிற்குள் அடையாளம் காணப்பட்ட குறிப்பிட்ட சில கணக்குகள், பதிவுகளை தற்காலிகமாக முடக்குவதாக X நிறுவனம் தெரிவித்துள்ளது.
"இந்திய அரசின் உத்தரவில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஆனால் இந்திய அரசின் தடை உத்தரவுகளை எதிர்த்து நாங்கள் தாக்கல் செய்த ரிட் மனு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், விதிமுறைகளால் அரசின் உத்தரவை இங்கு வெளியிட முடியவில்லை என்றாலும், அதன் வெளிப்படைத்தன்மை தேவை என்பதால் இதனை பொதுவெளியில் தெரியப்படுத்துகிறோம்" என X நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
X நிறுவனத்தால் முடக்கப்பட்ட பல கணக்குகள் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புடையவை என 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' தெரிவித்துள்ளது.